கான் அகாதமி

கான் அகாதமி இலாப நோக்கற்ற நிறுவனமாகும்.[5] 2006-ம் ஆண்டு சல்மான் கான் என்பவரால் உருவாக்கப்பட்ட கல்விசார்ந்த இணையத்தளமாகும்.[6] இது யூடியூப் வாயிலாக, கல்விசார்ந்த காணொளிகளை கட்டற்ற முறையில் வழங்குகிறது.[7] ஆங்கிலம், எசுப்பானியம், போர்த்துக்கேய மொழி, இத்தாலிய மொழி, உருசிய மொழி, துருக்கிய மொழி, பிரெஞ்சு மொழி, வங்காள மொழி, மற்றும் இந்தி மொழிகளில் தற்போது சேவைகளை வழங்கி வருகிறது.

கான் அகாதமி
உருவாக்கம்அக்டோபர் 2006; 18 ஆண்டுகளுக்கு முன்னர் (2006-10)
நிறுவனர்சல்மான் கான்
வகை501(c)(3)
தலைமையகம்
சேவைகள்கல்வி நுட்பவியல், கல்வி
ஆட்சி மொழிகள்
ஆங்கிலம், 5 அலுவல் மொழிபெயர்ப்புகள், ~20,000 உரைத்துணை காணொளிகள்[1][2]
முக்கிய நபர்கள்
சல்மான் கான்
சார்புகள்பள்ளிக்கல்வி மதிப்பீட்டுத் தேர்வு,[3][4] பிக்சர்
வருவாய்
$33.663 மில்லியன் (2014)
செலவுகள்$24.123 மில்லியன் (2015)
ஊழியர்கள்
105 (நவம்பர் 6, 2016)
வலைத்தளம்www.khanacademy.org

வரலாறு

தொகு

கான் அகாதமி 2004-ம் ஆண்டு சால் கான் என்பவரால் தொடங்கப்பட்டது. யூடியூப் வாயிலாக அவருடைய காணொளிகளை பதிவு செய்தார்.[8] அதன் பிறகு, சுமூத்ட்ரா என்னும் வரைகலை மென்பொருள் வாயிலாகவும், தற்போது ஆர்ட்ரேஜ் வாயிலாகவும் பதிவேற்றுகிறார்.

இந்நிறுவனத்திற்கு கிடைத்த ஆதரவின் காரணமாக 2009-ம் ஆண்டு தனது பணியிலிருந்து விலகி, முழுவதுமாக கான் அகாதமியில் கவணம் செலுத்தினார்.[9] செப்டம்பர் 15, 2014-ம் நாளில் கான் லேப் பள்ளியை (Khan Lab School), மவுண்டன் வியூ, கலிபோர்னியாவில் துவங்கினார். [10]

வருவாய்

தொகு

கான் அகாதமி இலாப நோக்கற்ற அமைப்பு ஆகும், நன்கொடை மட்டுமே பெற்று நடக்கும் அமைப்பாகும்.[11] 2010-ம் ஆண்டு, கூகுள் $2 மில்லியன் கொடையாக வழங்கியது.[12] 2013-ம் ஆண்டு, கார்லொசு சிலிம் இசுப்பானிய மொழியில் காணொளிகளை வெளியிடுவதற்கு நன்கொடை அளித்தார்.[13] 2015-ம் ஆண்டு, ஏடி&டி நிறுவனம் $2.25 மில்லியன் கொடையை கைப்பேசி செயலி உருவாக்குவதற்காக வழங்கியது.[14]

அமெரிக்க வருவாய்த்துறை அறிக்கையின் படி, சல்மான் கான் ஆண்டிற்கு $350,000 தொகையை 2011 முதல் வாங்கியுள்ளார். 2015-ம் ஆண்டு இது $556,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு, தலைவரும், முதன்மை இயக்குநராகவும் உள்ள சாந்தனு சின்கா $375,000 பெற்றுள்ளார்.[15]

உள்ளடக்கம்

தொகு

கான் அகாதமி இணையத்தளம் ஒவ்வொருவருக்கும் தனித்தனமையுடன் யூடியூப் வலைதளத்திலுள்ள காணொளியை வழங்குகிறது. இணையத்தளம் வாயிலாக பயிற்சிகள், இன்னபிற தகவல்களையும் அறியவும்,[16] பயிற்றுக் கருவிகளையும் உள்ளடக்கியுள்ளது.[17] இதைக் கைபேசிச் செயலி வாயிலாகவும் பார்க்க இயலும்.[18]

இது பள்ளிக்கல்வி மதிப்பீட்டுத் தேர்வு உள்ளிட்ட பிற தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கின்றது.[19]

வரவேற்பு

தொகு

கான் அகாதமி இந்தியாவிலும் பிறநாடுகளிலும் வரவேற்பு பெற்றுள்ளது:

  • பில் கேட்ஸ் ஆசுபென் ஐடியாசு விழாவில் கான் அகாதமி குறித்து பேசினார்.[20]
  • 2010-ம் ஆண்டு, கூகுள் $2 மில்லியன் கொடை வழங்கியது.[21]
  • 2011-ம் ஆண்டு, அயர்லாந்தைச் சார்ந்த ஓ சுல்லிவன் நிறுவனம் $5 மில்லியன் கொடை வழங்கியது.[22]

பன்னாட்டு அறிமுகம்

தொகு

கான் அகாதமியானது சுமார் 1 பில்லியன் பாடங்களை உலகமுழுவதும் வழங்கியுள்ளது. ஒரு மாதத்தில் சுமார் 40 மில்லியன் மாணவர்களும், 2 மில்லியன் ஆசிரியர்களும் கான் அகாதமியை பயன்படுத்துகின்றனர்.[23]  தற்போது, கான் அகாதமியின் உள்ளடக்கம் 36 மொழிகளில் தன்னார்வலர்களாலும் பன்னாட்டு கூட்டமைப்புகளாலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. [24] [25]  கான் அகாதமியின் முழக்கம்: "உங்களுக்குத் தெரியவேண்டிய ஒன்றே ஒன்று: நீங்கள் எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ("You only have to know one thing: you can learn anything").[26]

குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. "Khan Academy International". Khan Academy International. Khan Academy. Retrieved 6 November 2016.
  2. https://khanacademy.zendesk.com/hc/en-us/articles/202483750-Is-Khan-Academy-available-in-other-languages-
  3. Tanz, Jason. "Can Khan Academy's Free SAT Prep Level the Playing Field?". WIRED. Retrieved 7 November 2016.
  4. "Official SAT® Practice". Khan Academy. Khan Academy. Retrieved 7 November 2016.
  5. "Nonprofit Explorer – ProPublica". Retrieved 2015-11-07.
  6. "One Man, One Computer, 10 Million Students: How Khan Academy Is Reinventing Education". Retrieved 2015-11-07.
  7. Sampson, Demetrios G.; Ifenthaler, Dirk; Spector, J. Michael; Isaias, Pedro (2014-07-17). Digital Systems for Open Access to Formal and Informal Learning. Springer. ISBN 9783319022642. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help)
  8. Dreifus, Claudia (2014-01-27). "Salman Khan Turned Family Tutoring Into Khan Academy". The New York Times. பன்னாட்டுத் தர தொடர் எண்:0362-4331. https://www.nytimes.com/2014/01/28/science/salman-khan-turned-family-tutoring-into-khan-academy.html. 
  9. Temple, James (2009-12-14). "Salman Khan, math master of the Internet". SF gate. http://www.sfgate.com/cgi-bin/article.cgi?f=/c/a/2009/12/13/BUKV1B11Q1.DTL&tsp=1. பார்த்த நாள்: 2009-12-23. 
  10. "'A Bit Of A Montessori 2.0': Khan Academy Opens A Lab School". NPR.org. Retrieved 2016-01-06.
  11. "The Funders Pouring Money Into the Khan Academy – Inside Philanthropy: Fundraising Intelligence – Inside Philanthropy". Retrieved 2015-11-07.
  12. "$10 million for Project 10^100 winners". The Official Google Blog. 2010-09-24. Retrieved 2010-09-24.
  13. "Mexico's Carlos Slim funds Khan academy in Spanish". Marketplace. Archived from the original on 2015-05-08. Retrieved 2013-01-18.
  14. "AT&T Awards $2.25 Million for Mobile Learning Platform". Retrieved 2015-11-07.
  15. "Nonprofit Explorer – KHAN ACADEMY INC – ProPublica'". ProPublica. Retrieved 2015-09-22.
  16. "Khan Academy". Retrieved 2015-11-07.
  17. "How Are Teachers and Students Using Khan Academy?". Retrieved 2015-11-07.
  18. "Khan Academy for ipad review". theappzine.
  19. "Test prep | Khan Academy". Retrieved 2017-07-25.
  20. Thompson, Clive (15 July 2011). "How Khan Academy Is Changing the Rules of Education". Wired. Retrieved 26 November 2012.
  21. "Project 10100 Winners". Project 10100. Google. 2010. Archived from the original on 2011-01-12. Retrieved 2011-01-05.
  22. "The O'Sullivan Foundation Grants $5M To Online Learning Platform Khan Academy". Tech crunch. November 4, 2011.
  23. "Hakkımızda | Khan Academy Türkçe". Retrieved 2017-03-06.
  24. "Volunteers | Khan Academy" (in ஆங்கிலம்). Retrieved 2017-03-06.
  25. "Supporters | Khan Academy" (in ஆங்கிலம்). Retrieved 2017-03-06.
  26. "You Can Learn Anything | Khan Academy" (in ஆங்கிலம்). Retrieved 2017-03-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கான்_அகாதமி&oldid=3513269" இலிருந்து மீள்விக்கப்பட்டது