சஃபியா பீபி கற்பழிப்பு வழக்கு
சஃபியா பீபி பாலியல் பலாத்கார வழக்கு (Safia Bibi rape case) பாக்கித்தான் நாட்டின் சகிவால் நகரத்தில் 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு வழக்காகும். கிட்டத்தட்ட பார்வையற்ற ஒர் இளம்பெண்ணான சஃபியா பீபி அவர் பணிபுரிந்த நிலக்கிழார் வீட்டு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இப்பாலியல் பலாத்காரத்தை சஃபியாவால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாமல் போனது. பாக்கித்தான் நாட்டு பாரம்பரிய இசுலாமியச் சட்ட முறைமையான சரியா சட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ள அதூத் கட்டளைகளின் படி சஃபியா விபச்சாரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 15 பிரம்படிகளும் அபராதமாக விதிக்கப்பட்டன. [1]
சஃபியா பீபி வன்புணர்வு வழக்கு Safia Bibi rape case | |
---|---|
இடம் | சகிவால், பாக்கித்தான் |
நாள் | 1982-1983 |
தாக்குதல் வகை | வன்கலவி |
Victim | சஃபியா பீபி |
தாக்கியோர் | மக்சூத் அகமது, முகமது அலி |
சம்பவம்
தொகுஉள்ளூர் உரிமையாளரின் வீட்டில் வீட்டு உதவியாளராக பணியாற்றிய சஃபியா பீபி, நில உரிமையாளரின் மகன் மக்சூத் அகமது மற்றும் நில உரிமையாளர் முகம்மது அலி ஆகியோரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பாலியல் பலாத்காரம் காரணமாக சஃபியா பீபி கர்ப்பமாகி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். அதன் பிறகு குழந்தை சிறிது நேரத்தில் இறந்து போனது. 1982 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 ஆம் தேதியன்று சஃபியாவின் தந்தை உள்ளூர் காவல் நிலையத்தில் தனது மகள் மக்சூத் அகமது மற்றும் முகம்மது அலியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அதன் விளைவாக ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததாகவும் புகார் தெரிவித்தார். மருத்துவ பரிசோதனை செய்தபின் சஃபியா மற்றும் மக்சூத் அகமது இருவரும் கைது செய்யப்பட்டனர். [2] பழிவாங்குதல் மற்றும் அவமானத்திற்கு பயப்பட்டதால் , பாலியல் பலாத்காரம் குறித்து முன்னதாக தெரிவிக்கப்படவில்லை என்று அவரது பெற்றோர் கூறினர். [3]
விசாரணை மற்றும் தண்டனை
தொகுஇந்த வழக்கு பாக்கித்தானின் சகிவால் மாவட்டத்தின் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சரியா சட்டத்தை பின்பற்றும் அதூத் ஆணைப்படி, கற்பழிப்பை நிரூபிக்க, நான்கு ஆண் சாட்சிகளும் குற்றவாளிகளை நேரில் கண்டதற்கான காட்சி அடையாளம் தேவை. இந்த ஆதாரத் தேவைகளை சஃபியாவால் நிறைவேற்ற முடியவில்லை. இதன் விளைவாக குற்றவாளிகள் ஒரே நாளில் விடுவிக்கப்பட்டனர். [3]
1983 ஆம் ஆண்டு சூலை 24 அன்று அதூத் கட்டளைகளின் ஒரு பகுதியான திருமணத்திற்கு புறம்பான பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக சினா கட்டளைகளின் கீழ் சஃபியா மீது விபச்சாரக் குற்றம் சுமத்தப்பட்டு ஒரு குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டது. பொது மக்கள் முன்னிலையில் 15 சவுக்கடிகளும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 1,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. [4] திருமணமாகாதவர் மற்றும் கற்பழிப்பு காரணமாக கர்ப்பமாகிவிட்டதாக ஒப்புக்கொண்ட உண்மைகள் இவருக்கு எதிரான ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டன. [2]
பொது எதிர்ப்புகள் மற்றும் விடுவித்தல்
தொகுஇந்த தண்டனை பொதுமக்களிடத்திலும், பெண்கள் நடவடிக்கை மன்றத்தின் தலைமையிலான பல பெண்கள் உரிமை குழுக்கள் மத்தியிலும் எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தியது. [1] இந்த பிரச்சனையை உள்நாட்டிலும் பன்னாட்டு அளவிலும் எழுப்ப பல ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த வழக்கு பாக்கித்தானுக்கு பன்னாட்டு சங்கடத்தை ஏற்படுத்தியது. இங்கிலாந்துக்கான பாக்கித்தான் தூதரிடம் இந்த வழக்கு குறித்து பிரிட்டிசு ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் பாக்கித்தான் அரசைத் தொடர்பு கொண்டு உரிய பதிலைத் தர வேண்டியிருந்தது. [4]
பெரிய எதிர்ப்புகள் மற்றும் சங்கடங்களை கருத்தில் கொண்டு, மத்திய சரியத் நீதிமன்றம் இந்த வழக்கை மறுபரிசீலனை செய்ய தனக்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டது. மதிப்பாய்வில், கூட்டமைப்பு சரியத் நீதிமன்றம் தொழில்நுட்ப அடிப்படையில் சஃபியா பீபியை விடுவித்தது. இருப்பினும் சஃபியா ஏற்கனவே ஆறு மாதங்கள் சிறையில் இருந்தார், 15 பிரம்படிகளையும் அனுபவித்தார். [4]
பின்விளைவுகள்
தொகுஇந்த வழக்கு முன்னுக்குக் கொண்டு வரப்பட்டு சரியா அடிப்படையிலான அதூத் கட்டளைகள் மற்றும் அதன் காரணமாக பெண்களின் இரண்டாம் வகுப்பு குடிமகன் நிலை பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்தியது. [3] பன்னாட்டு விளம்பரம் பாக்கித்தான் அரசாங்கத்தை சங்கடப்படுத்த உதவியது. இதன் விளைவாக பாக்கித்தான் நாட்டின் இராணுவ ஆட்சியாளர் முகம்மது சியா-உல்-அக் வழக்கில் நேரடியாக தலையிட்டார். [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Khan, Shahid Reman (25 May 1986). "Under Pakistan’s Form of Islamic Law, Rape Is a Crime--for the Victims". LA Times. https://www.latimes.com/archives/la-xpm-1986-05-25-mn-7291-story.html.
- ↑ 2.0 2.1 Robyn Emerton (2005). International Women's Rights Cases. 709: Psychology Press. p. 878. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781859419069.
{{cite book}}
: CS1 maint: location (link) - ↑ 3.0 3.1 3.2 Rebecca J. Cook (1994). Human Rights of Women: National and International Perspectives. 50: University of Pennsylvania Press. p. 634. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780812215380.
{{cite book}}
: CS1 maint: location (link) - ↑ 4.0 4.1 4.2 4.3 Sangh Mittra (2004). Encyclopaedia of Women in South Asia: Pakistan. 36. p. 312. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788178351896.
{{cite book}}
: CS1 maint: location (link) CS1 maint: location missing publisher (link)