சகசாநந்த அடிகள்
சகசானந்த அடிகள் என்பவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 1923 ஆண்டு நந்தனார் கல்விக்கழகத்தை தொடங்கியவர்.[1] இக்கல்வி கழகம் மூலம் தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன. இவர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். [2]
பிறப்பு
தொகுசகசாநந்தர் வேலூர் மாவட்டம், ஆரணி வட்டம், மேல்புதுப்பாக்கத்தைச் சார்ந்தவர் ஆவார். இவர் 1890 டிசம்பர் மாதம் 27 இல் அண்ணாமலை மற்றும் அலமேலு அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் முனியசாமி ஆகும்.
சாதனைகள்
தொகுஇவர் சிதம்பரத்தில் 1923 ஆம் ஆண்டில் நந்தனார் கல்விக்கழகத்தை தோற்றுவித்தார். 1923 முதல் 1946 வரை சென்னை மேல்சபை உறுப்பினாராக இருந்தார். தமிழக சட்டசபை உறுப்பினராக 1947 முதல் 1959 வரை இருந்தார்.
பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம், வார சாகுபடி முதலியவை கொண்டு வருவதற்கு பாடுபட்டார். வன்னியர்களுக்கு இருந்து வந்த குற்றப்பரம்பரையினர் என்ற சட்டத்தை நீக்குவதற்கு சட்டப் பேரவையில் வாதாடி அதனை நீக்குமாறு செய்தார்.