சகுந்தலா காதிக்
இந்திய அரசியல்வாதி
சகுந்தலா காதிக் (Shakuntala Khatik) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரும் ஆவார். இவர் மத்தியப் பிரதேசத்தின் கரேரா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
சகுந்தலா காதிக் | |
---|---|
உறுப்பினர் மத்தியப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் 2013–2018 | |
முன்னையவர் | இரமேஷ் பிரசாத் காதிக் |
தொகுதி | கரேரா (சட்டமன்றத் தொகுதி) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 நவம்பர் 1965 மாத், ஜான்சி மாவட்டம் |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | இலக்கான்லால் காதிக் |
பிள்ளைகள் | 5 |
வாழிடம்(s) | கரெரா, சிவபுரி மாவட்டம் |
கல்வி | மேனிலைக் கல்வி |
தொழில் | அரசியல்வாதி |
As of 27 சூலை, 2018 மூலம்: ["Biography" (PDF). Vidhan Sabha, Madhya Pradesh Legislative Assembly.] |
வாழ்க்கை
தொகுலகன்லால் காதிக்கை மணந்த இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
2008ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் கரேரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், 2013ஆம் ஆண்டு வெற்றி பெற்று முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
சட்ட விவகாரங்கள்
தொகுஜூன் 2017-இல் கரேராவில் மந்த்சௌர் துப்பாக்கிச் சூட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது ஒரு கும்பலுடன் காவல் நிலையத்தை தாக்கத் தூண்டியதற்காக சகுந்தலா மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Shakuntala Khatik on Facebook