சகுபீர் சிங்கு மாலிக்கு

சகுபீர் சிங்கு மாலிக்கு (Jagbir Singh Malik) அரியானாவில் உள்ள கோஹானா விதான் சபா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய தேசிய காங்கிரசில் இருந்து அரியானா சட்டமன்ற உறுப்பினர் ஆவார். [1] இவர் மாநிலத் தேர்தல்களில் மூன்று முறை வெற்றி பெற்றவர். 2019- ஆம் ஆண்டில் இவர் 4152 வாக்குகள் வித்தியாசத்தில் லோக்டந்தர் சுரக்சா கட்சியின் இராஜ் குமார் சைனியை தோற்கடித்தார்.

பிறப்பு மற்றும் கல்வி தொகு

இவரது தந்தையார் பெயர் பதே சிங்கு மாலிக்கு ஆகும். இவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டத்தையும் தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பையும் முடித்தவர் ஆவார். [2]


மேற்கோள்கள் தொகு

  1. "Haryana Vidhan Sabha MLA". haryanaassembly.gov.in.
  2. "Jagbir Singh Malik(Indian National Congress(INC)):Constituency- GOHANA(SONIPAT) - Affidavit Information of Candidate:", myneta.info, பார்க்கப்பட்ட நாள் 2023-10-03
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகுபீர்_சிங்கு_மாலிக்கு&oldid=3802594" இலிருந்து மீள்விக்கப்பட்டது