சாகேல்
(சகேல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சாகேல் ஆப்பிரிக்காவின் பாலைவனப்பகுதியான சகாராவிற்கும் சூடானிய சாவன்னாக்களுக்கும் இடைப்பட்டுள்ள மித-வறண்ட நிலப்பரப்பாகும். இந்த பகுதி அட்லாண்டிக் கடலோரத்திலிருந்து செங்கடல் கடற்கரை வரை நீண்டுள்ளது. சாஹில் (ساحل) என்ற அரபிச் சொல்லிலிருந்து பெறப்பட்டுள்ள இந்தப் பெயர் கடலோரம், கடற்கரை என்ற பொருள் கொண்டது. கிழக்கு அல்சீரியா,நைஜர்,நைஜீரியா,சாட்,சூடான்,தெற்கு சூடான், எரித்திரியா ஆகிய நாடுகள் இப்பரப்பில் அடங்கும்.[1]
வரலாற்றில், சாகேலின் மேற்குப் பகுதி சில நேரங்களில் சூடான் மண்டலம் எனப்படுகின்றது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sahel: $1.6 billion appeal to address widespread humanitarian crisis". United Nations Office for the Coordination of Humanitarian Affairs. Retrieved 24 June 2013.
- ↑ The "Sudan region" encompasses not just the history of the Republic of Sudan (whose borders are those of Anglo-Egyptian Sudan, drawn in 1899) but the wider Sahel, in Arabic known as bilad as-sudan, "the land of the blacks".