சகோதரிப் பள்ளி

ஒரு சகோதரிப் பள்ளி (sister school) அல்லது சகோதரப் பள்ளி என்பது பொதுவாக ஒரு ஜோடி பள்ளிகளாக இருக்கும். பொதுவாக ஒற்றைப் பாலின பள்ளியாக இருக்கும், அதில் ஒன்று பெண் மாணவர்களுடனும் மற்றொன்று ஆண் மாணவர்களுடனும் இருக்கும்.[1] இந்த முறையின் மூலம் இரண்டு பள்ளிகளும் பயனடைகிறது.[2] உதாரணமாக, ஆர்வர்டு பல்கலைக்கழகம் ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளியாக இருந்தபோது, ராட்கிளிஃப் பல்கலைக்கழகம் அதன் சகோதரப் பள்ளியாக இருந்தது.[3] பாலியல் சார்பு மற்றும் பாகுபாடு பற்றிய விழிப்புணர்வு காரணமாக 1970 களில் தொடங்கி பல நிறுவனங்கள் இருபாலர் கல்வி சூழலை ஏற்றுக்கொண்டதால் ஒரு பாலினப பள்ளி என்ற சகோதரப் பள்ளி தொடர்பான கருத்து மாறத் தொடங்கியது.[4]

பின்னணி

தொகு

சகோதரிப் பள்ளி (அல்லது சகோதரர் பள்ளி ) என்ற சொல்லுக்கு பல மாற்று அர்த்தங்கள் உள்ளன:

  • இரண்டு கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஒரு திட்டவட்டமான நிதி வர்த்தகத்தை உள்ளடக்கியிருக்கும்
  • வலுவான வரலாற்று தொடர்பைக் கொண்ட இரண்டு பள்ளிகளாக இருக்கலாம்.
  • இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை உள்ளடக்கிய சமூக செயல்பாடுகளைக் கொண்ட இரண்டு பள்ளிகள்.
  • ஒரே நிர்வாகத்தின் கீழ் இரண்டு பள்ளிகள்.
  • ஒரே தளத் திட்டம்/தளவமைப்பைப் பயன்படுத்தி கட்டப்பட்ட இரண்டு பள்ளிகள்.

சான்றுகள்

தொகு
  1. Gender Consciousness and Privilege.
  2. "UNESCO Center for Peace » Sister Schools/Universities". பார்க்கப்பட்ட நாள் 12 April 2018.
  3. Gender and Women's Leadership: A Reference Handbook.
  4. Gender in Policy and Practice: Perspectives on Single Sex and Coeducational Schooling.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகோதரிப்_பள்ளி&oldid=3958733" இலிருந்து மீள்விக்கப்பட்டது