சகோதரி நிபேதிதா பெண்களுக்கான அரசு பொதுப் பட்டக் கல்லூரி

சகோதரி நிபேதிதா பெண்களுக்கான அரசு பொதுப் பட்டக் கல்லூரி என்பது[1][2] சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிறுவப்பட்ட முதல் அரசு பெண்கள் பட்டப்படிப்பு கல்லூரியாகும்.[3] 16.07.2015 அன்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியால் வங்காளத்தின் முதல் கவர்னர் ஜெனரலின் இல்லமான ஹேஸ்டிங்ஸ் ஹவுஸின்[4] பாரம்பரிய வளாகத்தில் இந்த கல்லூரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சகோதரி நிபேதிதா பெண்களுக்கான அரசு பொதுப் பட்டக் கல்லூரி
வகைஅரசு கல்லூரி
உருவாக்கம்2015 முதல்
சார்புகொல்கத்தா பல்கலைக்கழகம்
நிதிக் கொடைமேற்கு வங்காள அரசு
முதல்வர்முனைவர் செபந்தி பட்டாச்சார்யா
அமைவிடம்
ஹேஸ்டிங்ஸ் ஹவுஸ், 20 பி, நீதிபதிகள் நீதிமன்ற சாலை,
, , ,
700027
இணையதளம்இணையதளம்

ஆரம்பத்தில் பெண்களுக்கான அரசு பொது பட்டப்படிப்பு கல்லூரி என்று பெயரிடப்பட்ட இந்த கல்லூரி பின்னதாக புகழ்பெற்ற ஸ்காட்லாந்து-ஐரிஷ் பின்னணி கொண்ட சிந்தனையாளரும் எழுத்தாளரும் சமூக சீர்திருத்தவாதியும் சுவாமி விவேகானந்தரின் சீடரான .சகோதரி நிவேதிதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த கல்லூரி கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)வின் சட்டப் பிரிவு 2 இன் கீழ் "இளங்கலை பட்டம் வரை கற்பிக்கும் அரசு கல்லூரிகள்" என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இக்கல்லூரியில் இளங்கலையில் கவுரவப்படிப்புகளை பயிர்றுவிக்கிறது.

பாடம் பாடத்திட்டம் மாணவிகளின்

எண்ணிக்கை

கணிதம் கவுரவம் 15
புள்ளிவிவரங்கள் கவுரவம் 15
உடலியல் கவுரவம் 15
புவியியல் கவுரவம் 15
கணினி அறிவியல் கவுரவம் 15
விலங்கியல் கவுரவம் 15
தாவரவியல் கவுரவம் 15
புவியியல் கவுரவம் 25
ஆங்கிலம் கவுரவம் 25
பெங்காலி கவுரவம் 25
சமஸ்கிருதம் கவுரவம் 25
தத்துவம் கவுரவம் 25
பொருளாதாரம் கவுரவம் 25
அரசியல் அறிவியல் கவுரவம் 25
உணவு மற்றும் ஊட்டச்சத்து கவுரவம் 15
வரலாறு. கவுரவம் 25
இயற்பியல் கவுரவம் 25

பிற செயல்பாடுகள்

தொகு
  • நாட்டுநலப்பணித்திட்டம்
  • விளையாட்டுகள்
  • கலாச்சார நிகழ்ச்சிகள்
  • கருத்தரங்குகள்
  • வெளியீடுகள்

வசதிகள்

தொகு
  • நூலகம்
  • உணவகம்
  • கணினி அறை
  • மாணவர் பொது அறை
  • முற்றிலும் கணிணிமயமாக்கப்பட்ட வகுப்பறைகள்
  • இணைய இணைப்புள்ள வளாகம்
  • நோய்வாய்ப்பட்டால் தங்கும் அறை
  • குறை தீர்க்கும் பிரிவு
  • தொழில் ஆலோசனை
  • ஆன்டி ராகிங்
  • நிதியுதவிகள்

மேற்கோள்கள்

தொகு
  1. "Sister Nivedita College: a new college for women founds mention in the register of government".
  2. "budget_speech" (PDF).
  3. ":: Sister Nibedita Sister Nibedita Government General Degree College For Girls ::". பார்க்கப்பட்ட நாள் 2016-04-04.
  4. "Mamata Banerjee lays foundation for Soujanya". பார்க்கப்பட்ட நாள் 2016-04-04.