சக்தி ஆயுதம்

சக்தி ஆயுதம் என்பது இந்து சிற்பக் கலை மரபில் இறைகளின் கையில் உள்ள ஆயுதமாகும். [1]

முருகன் கையில் இருக்கும் சக்தி ஆயுதம்.

இந்த ஆயுதத்தினை சக்தி ஆயுதம், சக்திவேல் ஆயுதம், வேலாயுதம் என்றும் அழைப்பர்.

முருக புராணம்

தொகு

இந்து சமயத்தில் முருகப்பெருமானின் தனித்துவ ஆயுதமாக இந்த சக்தி ஆயுதம் கருதப்படுகிறது. உமையம்மை சூரபத்மனை அழிக்க முருகனுக்கு சக்தி ஆயுதம் தந்ததாக புராணங்கள் கூறுகின்றன. வேலாயுதம் மட்டும் தனித்து வழிபடு பொருளாகவும் உள்ளது.

சக்தி ஆயுத வடிவமைப்பு

தொகு
 
வேல் வடிவ சக்தி ஆயுதம்

இந்த ஆயுதம் மூன்று சாய் சதுரங்களின் கோடிகளை ஒன்றொடு ஒன்று நெருங்கியிருக்குமாறு அமைக்கப்படுகிறது. இவ்வாறு அமைப்படுகையில் வரிசையாகவும், தண்டத்தின் நுனியில் பொறுத்தப்பட்டதாகவும் உள்ளது. சில சிற்ப நூல்களில் இரண்டு சாய் சதுரங்களுக்கு நடுவே சூரியகாந்தி பூ போன்ற அமைப்பு உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த ஆயுதத்தின் மேற்பகுதி இச்சா சக்தியையும், நடுப்பகுது ஞான சக்தியையும், கீழ் பகுதியானது கிரியா சக்தியையும் குறிப்பதாகும்.

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. சிற்பச் செந்நூல் - ஆசிரியர் வை. கணபதி ஸ்தபதி - தொழில் நுட்பக் கல்வி இயக்கம், சென்னை - பதிப்பு - 2001 பக்கம் 123,124
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்தி_ஆயுதம்&oldid=3179336" இலிருந்து மீள்விக்கப்பட்டது