சக்தி ஒளி
சக்தி ஒளி எனப்படுவது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தினால் வெளியிடப்படும் ஒரு மாதாந்த இதழாகும். இந்த இதழ் 1982ம் ஆண்டில் இருந்து வெளியிடப்படுகின்றது.
சக்தி ஒளி | |
---|---|
துறை | ஆன்மீகம் |
மொழி | தமிழ் |
பொறுப்பாசிரியர்: | கே.வி. முருகானந்தம் |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகம் | ஆதிபராசக்தி கல்வி, மருத்துவ அறநிலை (இந்தியா) |
வெளியீட்டு இடைவெளி: | மாத இதழ் |
மக்களிடம் கட்டாயம் இருக்க வேண்டியனவான பக்தி, நல்ல எண்ணம், ஆன்மீக ஈடுபாடுகள் ஆகியவற்றைக் கருவாகக்கொண்டே சக்தி ஒளி இதழ் வெளிவருவதாக முதலாவது சக்தி ஒளி இதழில் உள்ள பங்காரு அடிகளாரின் ஆசியுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியா மற்றும் இலங்கை, பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளில் உள்ள சந்தா செலுத்திய ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் பக்தர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.