சக்ஷுமதி
பார்வையற்றோருக்கு உதவும் வகையில் திருவனந்தபுரத்தை மையமாக இயங்கி வரும் தொண்டுநிறுவனம் சக்ஷுமதி . (சமஸ்கிருதத்தில் சக்ஷு என்றால் கண் , மதி என்றால் அறிவு என்று அர்த்தம்).
2011-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்திற்கு தலைமை தாங்குபவர் கேரள சாஸ்திர சாகித்திய பரிஷத் (அறிவியல் - இலக்கிய) அமைப்பின் முன்னாள் தலைவர் வீ. கே. தாமோதிரன் ஆவார்.
பார்வையற்றோருக்காக பல்வேறு கருத்தரங்கங்களும் பயிற்சி முகாம்களும் இந்நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது. 2013 விஜயதசமி அன்று சக்ஷுமதியின் தலைமையில் பார்வையற்ற மாணவர்கள் பிரெயில் முறையில் எழுத்துக்களை படித்து கல்வியைத் தொடங்கினர். [1]
சேவைகள்
தொகு- பார்வையற்றோருக்காக DAISY (Digital Accessible Information System) வடிவில் புத்தகங்கள் வெளியிடுதல்
- பார்வையற்றோருக்காக சர்வதேச நாடுகளில் இருந்து DAISY வடிவிலான புத்தகங்களை வரவழைத்தல்
- DAISY வடிவிலான புத்தகங்கள் மற்றும் கல்விக்கு தேவையான கருவிகளை தயாரிப்பத்ற்கான பயிற்சி அளித்தல்
- பார்வையற்றோருக்கு தொழில் பயிற்சி அளித்தல்.
மேற்கோள்
தொகு- ↑ "பார்வையற்ற குழந்தைகளுக்கு விஜயதசமி அன்று பிரெயில் முறையில் எழுத்து தொடங்க பயிற்சி". Archived from the original on 2013-10-16. பார்க்கப்பட்ட நாள் 2013-10-16.