சங்ககாலச் சமையல் நூல்

தமிழில் எழுதப்பட்ட சமையல் நூல் ஒன்று சங்ககாலத்தில் இருந்ததைச் சிறுபாணாற்றுப்படை என்னும் நூல் குறிப்பிடுகிறது. ஓய்மானாட்டு நல்லியக்கோடன் பாணர்களுக்கு விருந்து படைக்கும்போது இந்த நூலிலுள்ள முறைமை வழுவாமல் சமைக்கப்பட்ட உணவை இட்டான் என்கிறது.

இந்த நூல் அருச்சுனனின் அண்ணன் வீமனால் எழுதப்பட்டதாம். இது வடமொழி நூலின் தமிழாக்கம் போலும். [1]

அடிக்குறிப்பு தொகு

  1. கா எரியூட்டிய கவர் கணைத் தூணிப்
    பூ விரி கச்சைப் புகழோன் தன்முன்,
    பனிவரை மார்பன், பயந்த நுண் பொருள்
    பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில்,
    வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த
    இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
    விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி,
    ஆனா விருப்பின், தான் நின்று ஊட்டி, (சிறுபாணாற்றுப்படை அடி 238-245)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்ககாலச்_சமையல்_நூல்&oldid=2631839" இலிருந்து மீள்விக்கப்பட்டது