சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன்

தொலைக்காட்சி தொடர்

சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் அல்லது சனி என்பது கலர்ஸ் தொலைக்காட்சியில் நவம்பர் 7, 2016 முதல் மார்ச்சு 9, 2018 வரை ஒளிபரப்பாகி 346 அத்தியாங்களுடன் நிறைவு பெற்ற ஒரு இந்தி மொழி தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் சூன் 6, 2018 முதல் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகி சனவரி 25, 2019 அன்று 179 ஆத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. [1][2]

சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன்
வகைபக்தித் தொடர்
உருவாக்கம்சித்தார்த் குமார் தெவாரி
எழுத்துஉத்கர்ஷ் நைதானி
சித்தார்த் குமார் தெவாரி
வினோத் ஷர்மா
இயக்கம்கமல் மோங்கா
சுமித் தாக்கூர்
குர்ப்ரீத் ரானா
அவிராஜ் D.
படைப்பு இயக்குனர்அமோல் சுர்வே
நிதின் குப்தா
சித்தார்த் திவேத்யா
நடிப்பு
  • கார்த்திகேய் மால்வியா
  • ஜுஹி பர்மர்
  • சலில் அங்கோலா
  • குனல் பக்ஷி
முகப்பு இசை
  • ஜிதேஷ் பஞ்சல்
  • ஷ்யாம் சேத்ரி
முகப்பிசைநீலாஞ்ஜன சமாபாஸம்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
மொழிமாற்றாம்
தமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்இந்தி : 346
தமிழ் : 179
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்சித்தார்த் குமார் தெவாரி
காயத்ரி கில் தெவாரி
ராகுல் குமார் தெவாரி
படவி அமைப்புமல்டி-கேமரா
ஓட்டம்அண்ணளவாக 40-45 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்ஸ்வஸ்திக் ப்ரோடக்ஷன்ஸ்
விநியோகம்வயாகாம் 18
ஒளிபரப்பு
அலைவரிசைகலர்ஸ் தொலைக்காட்சி
படவடிவம்576i (SDTV)
HDTV 1080i
ஒளிபரப்பான காலம்நவம்பர் 7, 2016 (2016-11-07) –
மார்ச்சு 9, 2018 (2018-03-09)

இது இந்துக் கடவுள் சனீஸ்வரனின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

பிறப்பும் இளமைப்பருவமும்

தொகு

தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய இருவருக்கும் இடையே பெரும் போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. அப்போது சிவபெருமான் அங்கு தோன்றி, கர்மங்களின் கடவுள் விரைவில் தோன்றவுள்ளதாகவும் அதுவரை போர் செய்வதை நிறுத்துமாறும் கூறுகிறார்.

இதற்கிடையில், சந்தியாதேவி, தன் கணவர் சூரியதேவனின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் வருந்துகிறார். ஆகவே அவர் தன் தந்தை விஸ்வகர்மாவிடம் சென்று தீர்வு கேட்கிறார். அதற்கு அவர் சந்தியாவிடம் கடுந்தவம் புரியுமாறு கூறுகிறார். சந்தியா, அங்கிருந்து ஒரு மருந்தைத் திருடிச் சென்று விடுகிறார். அதன் மூலம் அவர் தன் நிழலுக்கு உயிர் கொடுத்துவிட்டு தவம் செய்ய புறப்படுகிறார்.

சந்தியாவின் நிழல், சூரியதேவனின் மூலம் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறார். ஆனால் அந்தக் குழந்தை ஒளியிழந்து காணப்பட்டதால் சூரியதேவன் அதைத் தன் புதல்வனாக ஏற்றுக் கொள்ள மறுத்துவிடுகிறார். மேலும் தன் கதிர்கள் பட்டால் அக்குழந்தை எரிந்து சாம்பலாகி விடும் என்று சபிக்கிறார். இதனால் சந்தியாவின் நிழல், சூரியலோகத்தில், சூரியனின் கதிர்கள் படாமல் இருக்கும் ஒரு வனத்தில் தன் குழந்தையை மறைத்து வைக்கிறார். அவர் அக்குழந்தைக்கு சனி என்று பெயர் சூட்டினார்.

முக்கிய கதாபாத்திரங்கள்

தொகு
  • ரோஹித் குறானா - சனீஸ்வரன்
  • கார்த்திகேய் மால்வியா- சனீஸ்வரன் (இளமைப்பருவம்)
  • ஜுஹி பர்மர்- சந்தியா தேவி மற்றும் சாயா தேவி (இரட்டை வேடங்கள்)
  • சலில் அங்கோலா - சூரிய தேவன்
  • குனால் பாக்ஷி - இந்திர தேவன்

ஆதாரங்கள்

தொகு
  1. Sangadam Theerkum SANEESWARAN - சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் - Promo 3, பார்க்கப்பட்ட நாள் 2018-05-29
  2. Voot, "Watch Sangadam Theerkum Saneeswaran Colors Tamil TV Serial All Latest Episodes and Videos Online in HD | Free Streaming on Voot", www.voot.com (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-06-07[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

தொகு