சங்கமித்ரா பதி

சங்கமித்ரா பதி (Sanghamitra Pati) என்பவர் மருத்துவர் மற்றும் விஞ்ஞானி ஆவார்.[1] தற்போது இவர் புவனேசுவரத்தில் உள்ள மண்டல மருத்துவ ஆய்வு நிறுவனத்தில் பொதுச் சுகாதார இயக்குநராக உள்ளார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் சார்பில் ஒடிசாவில் உள்ள ஒரே ஒரு நிறுவனமாகும். இவர் பொதுச் சுகாதார அமைப்புகளில் பல்நோக்கு நோய்க்காரணி ஆராய்ச்சி நிபுணர் ஆவார். இந்தியாவில் இந்த ஆய்வில் முன்னணியில் உள்ளார்.[2]

பதி பல்நோக்கு நோய்க்காரணி தலைப்பில் பல கட்டுரைகளை வெளியிட்டதோடு,[3] தேசிய மற்றும் பன்னாட்டு நிகழ்வுகளில் கலந்துகொண்டு, இந்தப் பிரிவில் திறனை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட பல்நோக்கு நோய்க்காரணி கல்வியறிவை ஊக்குவித்தார்.[4] இவருடைய ஆய்வுகள் முதன்மைப் பராமரிப்பில் உள்ள பலநோய்ச்சுமை, உளநோய் மருத்துவத்தில் பலநோய்த் தன்மை தொடர்பான தொழில்சார் கல்வி ஆகியவற்றுடன் தொடர்புடையது.

கல்வி மற்றும் பணி தொகு

பதி பொறியாளர் துர்கா பிரசாத பதி மற்றும் சுவர்ணலதா தேவியின் மகளாகப் பிறந்தார். இவருக்கு 4 சகோதரிகள். இவர்களில் மூத்தவர் இவராவார். இவர் பெர்காம்பூரில் உள்ள மகராசா குருசான சந்திர கசபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவ படிப்பு (எம். பி. பி. எஸ்.) 1992ஆம் ஆண்டும் எம். டி. பட்டத்தினை 1998ஆம் ஆண்டு முடித்தார். 2000ஆம் ஆண்டில், நெதர்லாந்தின் உள்ள மாஸ்ட்ரிச் பல்கலைக்கழகத்தில் பொதுச் சுகாதார படிப்பினை மேற்கொள்ள ஜப்பான் / உலக வங்கி பட்டதாரி உதவித்தொகை இவருக்குக் கிடைத்தது. இதன்பிறகு, தாய்வழி இறப்புக்கான உயிர்-சமூக தொடர்புகள் பற்றிய ஆராய்ச்சிக்காக 2002இல் அமெரிக்கப் பெண்கள் பல்கலைக்கழக பன்னாட்டு ஆய்வு நிதியினைப் பெற்றார். ஆரம்பத்தில், இவர் மருத்துவ அதிகாரியாகக் கிராமப்புறப் பகுதியில் மக்களுக்குச் சேவை செய்தார். மேலும், மாநிலத்தின் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் ஆகஸ்ட் 2010இல் இந்திய பொதுச் சுகாதார அறக்கட்டளையில் சேர்ந்தார். ஆகஸ்ட், 2016 முதல் மருத்துவர் பதி ஒடிசாவின் தலைநகர் புவனேசுவரத்தில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் மண்டல நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.[5] இவர் இந்திய ரயில்வே பணி அதிகாரியான மனோரஞ்சன் பணிகிரகியை மணந்தார்.[6]

ஆய்வு நிதி மற்றும் விருதுகள் தொகு

சங்கமித்ராவின் ஆராய்ச்சி முக்கியமாக நாள்பட்ட நோய்கள் தடுப்பு, மேலாண்மை மற்றும் முதன்மை பராமரிப்பில் சுகாதார மேம்பாடு ஆகியன குறித்ததாகும். இவர், பன்னாட்டுப் புற்றுநோய் கட்டுப்பாடு அமைப்பு மற்றும் பன்னாட்டு ஊட்டச்சத்து கல்லூரி மற்றும் தற்போது, ​ஹார்வர்ட் பொதுச் சுகாதாரப் பள்ளி சக ஆய்வாளராக இருந்துள்ளார். ஆசிய பசிபிக் புற்றுநோய் சமூக ஆய்வு நிதி (குயின்ஸ்லாந்து புற்றுநோய் அறக்கட்டளை, ஆத்திரேலியா, 2004) பள்ளி சார்ந்த பதின்ம வயது புகையிலை பழக்கத் தடுப்புக்காக இவர் பெற்றுள்ளார். மருத்துவர்களிடையே புகையிலை கட்டுப்பாட்டு நடைமுறையைப் படிப்பதற்காகப் பன்னாட்டு நோய்த்தொற்று சங்கம் நிதியுதவியுடன் தேசிய சுகாதார நிறுவனத்தில் பயிற்சியும், பன்னாட்டுப் புற்றுநோய் ஆராய்ச்சி தொழில்நுட்ப பரிமாற்றம் நிதியுதவியும் பெற்றுள்ளார் (2006, ஜெனீவா). இவர் மருத்துவ மாணவர்களுக்காக புத்தகத்தைப்பிடிப்பதை நிறுத்தும் திறனை வளர்க்கும் திட்டத்தை உருவாக்கினார். இதன் காரணமாக 2007ஆம் ஆண்டில் தைவானில் இளம் புலனாய்வாளர் விருதை வென்றார். இவர் பன்னாட்டு நடத்தை மருத்துவ சங்கத்தின் (2010, 2012) ஆரம்பக்கால தொழில் விருதைப் பெற்றார். 2015-16ஆம் ஆண்டிற்கான வெல்கம் அறக்கட்டளை பன்னாட்டு விருதைப் பெற்றார். இவரது வளமான ஆராய்ச்சி வாழ்க்கையைப் பாராட்டி, 2017ஆம் ஆண்டில் ஆர்யா மகளிர் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மருத்துவர் பதி உயிரியல் பிரிவில் 2018ஆம் ஆண்டின் மதிப்புமிக்க சமந்தா சந்திர சேகர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2020 பிப்ரவரி 23 அன்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையால் நிறுவப்பட்ட தேவி விருதைப் பெற்றார். அதிநவீன பொதுச் சுகாதார ஆராய்ச்சியில் ஒடிசாவின் மதிப்புமிக்க விருதினை முதலமைச்சரிடமிருந்து பெற்றார்.[7]

மேற்கோள்கள் தொகு

  1. "Loop | Dr Sanghamitra Pati". loop.frontiersin.org. பார்க்கப்பட்ட நாள் 2020-12-19.
  2. "Regional Medical Research Center, Odisha". www.rmrcbbsr.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-21.
  3. Arokiasamy, Perianayagam; Uttamacharya, Uttamacharya; Jain, Kshipra; Biritwum, Richard Berko; Yawson, Alfred Edwin; Wu, Fan; Guo, Yanfei; Maximova, Tamara et al. (August 3, 2015). "The impact of multimorbidity on adult physical and mental health in low- and middle-income countries: what does the study on global ageing and adult health (SAGE) reveal?". BMC Medicine 13 (1): 178. doi:10.1186/s12916-015-0402-8. பப்மெட்:26239481. 
  4. "Intl conference on vector-borne diseases from January 9". The New Indian Express. Archived from the original on 2021-09-20. பார்க்கப்பட்ட நாள் 2021-09-20.
  5. "Dr Sanghamitra Pati". www.indiascienceandtechnology.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-20.
  6. "କନିଆ ଦେଖା". http://sambadepaper.com/epaper/1/80/2020-05-17/1. 
  7. "Loop". loop.frontiersin.org. பார்க்கப்பட்ட நாள் 2021-09-20.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கமித்ரா_பதி&oldid=3631637" இலிருந்து மீள்விக்கப்பட்டது