சங்கரசுப்ரமணியன், கே

சங்கரசுப்பிரமணியன், கே. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இசுரோ) பணிபுரியும் இந்தியச் சூரிய அறிவியலாளர் ஆவார். 2023 செப்டம்பர் 2 அன்று வெற்றிகரமாக ஏவப்பட்ட இந்தியாவின் முதல் சூரிய ஆதித்யா - எல் 1 திட்டத்தின் முதன்மை அறிவியலாளர் ஆவார்.[1]

சங்கரசுப்பிரமணியன்,கே
Sankarasubramanian, K
பிறப்புஇந்தியா
தேசியம்இந்தியர்
கல்விஇயற்பியலில் முனைவர்,

இந்திய வானியல், வானியற்பியல் நிறுவனம்,

பெங்களூரு.
படித்த கல்வி நிறுவனங்கள்இந்திய வானியல், வானியற்பியல் நிறுவனம் (முனைவர்)
பணிசூரிய அறிவியலாளர்
அமைப்பு(கள்)[[இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்]] (இசுரோ)
அறியப்படுவதுமுதன்மை அறிவியலாளர், ஆதித்தியா எல் 1

கல்வி

தொகு

சங்கரசுப்பிரமணியன் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். கருவி ஒலியியல்,, சூரியக் காந்தப் புலம் ஆகியவை அவரது ஆர்வமுள்ள ஆராய்ச்சிப் பகுதிகளாகும்.[2]

தொழில் வாழ்க்கை

தொகு

சந்திரயான் - 1, சந்திரயான் 2 ஆகிய இசுரோ பயணங்களுக்குச் சங்கரசுப்பிரமணியன் ஏராளமான பங்களிப்புகளை வழங்கியுள்ளார். 2023 செப்டம்பர் நிலவரப்படி , அவர் யுஆர் விண்வெளி மையத்தின் விண்வெளி வானியல் குழுவின் பொறுப்பாளராக உள்ளார் , இக்குழு ஆதித்யா - எல் 1, எக்ஸ்போசாட், சந்திரயான் - 3 உந்துவிசை தொகுதியின் விண்வெளிப் பயணங்களில் அறிவியல் கருவிகளை உருவாக்குகிறது. 2022 அக்தோபரில் ஆதித்யா எல் 1 திட்ட முதன்மை அறிவியலாலராக அவர் நியமிக்கப்பட்டார்.[3] ஆதித்யா - எல்1 இன் எக்சுக்கதிர் கருவிகளில் ஒன்றின் முன்னணி ஆராய்ச்சியாளராக அவர் உள்ளார். மேலும் சங்கரசுப்பிரமணியன் ஆதித்யா - எல் 1 அறிவியல் பணிக்குழுவின் தலைவராகவும் உள்ளார் , இதில் பல இந்திய நிறுவனங்களிலிருந்து சூரிய அறிவியல் புல ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Who Is Dr. Sankarasubramanian K, Head Scientist Of Aditya-L1 Mission? Know His Educational Qualifications". www.india.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-04.
  2. "Dr. Sankarasubramanian K., ISRO, has been designated as the Principal Scientist of the Aditya-L1 mission". www.isro.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-09-04.
  3. "ISRO designates Sankarasubramanian as Principal Scientist for Aditya-L1 mission". WION (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-04.
  4. "Who is Dr Sankarasubramanian K, the ISRO scientist heading Adiya-L1 Solar Mission?". cnbctv18.com (in ஆங்கிலம்). 2023-08-30. பார்க்கப்பட்ட நாள் 2023-09-04.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கரசுப்ரமணியன்,_கே&oldid=3786738" இலிருந்து மீள்விக்கப்பட்டது