சங்கரின் அனைத்துலக பொம்மைகள் அருங்காட்சியகம்

சங்கரின் அனைத்துலக பொம்மைகள் அருங்காட்சியகம் பெருமளவிலான பொம்மைகளைக் கொண்ட ஒரு அருங்காட்சியகம் ஆகும். இது இந்தியாவின் தலைநகரான டில்லியில் அமைந்துள்ளது. அரசியல் கேலிப்பட வரைவாளரான கே. சங்கர் பிள்ளை என்பவரால் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.

அமைவிடம்

தொகு

புது டில்லியில் உள்ள பகதூர் ஷா சஃபார் சாலையில் உள்ள சிறுவர் புக் டிரஸ்ட் கட்டிடத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம், கட்டிடத்தின் முதல் மாடியில் 5,184.5 சதுர அடி (481.66 சதுர மீட்டர்) பரப்பளவில் அமைந்துள்ளது.

அமைப்பு

தொகு

அருங்காட்சியகத்தின் உட்பகுதி இரண்டு சமமான பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் ஐரோப்பா, ஐக்கிய அமெரிக்கா, ஆசுத்திரேலியா, நியூசிலாந்து, விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம் ஆகியவற்றைச் சேர்ந்த பொம்மைகள் உள்ளன. மற்றப்பகுதியில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த பொம்மைகள் உள்ளன.

வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பொம்மைகளுடன், இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு வகை ஆடைகளை அணிந்த 150 வகையான பொம்மைகளைக் கொண்ட சிறப்புப் பகுதியும் உண்டு. இப் பொம்மைகள் அருங்காட்சியகத்துடன் அமைந்துள்ள வேலைத்தலத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு