சங்கர் கும்பி
சங்கர் கும்பி (Shankar Kumbi) இந்தியாவின் கர்நாடக மாநிலம் தார்வாடில் உள்ள ஓர் இந்திய சமூக சேவகர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். 1958 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். 1995 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஊப்ளி தார்வாடு நகரிகா பரிசார் சமிதி என்ற அரசு சாரா அமைப்பிற்கு தலைவராக இருந்தார்.[1] கர்நாடக வித்யாவர்தக் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.
சமூகத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக பல விருதுகளை பெற்றுள்ளார். மிக இளம் வயதிலேயே சமூகப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளத் தொடங்கினார். 1990 ஆண்டில் "கர்நாடக மாநில இளைஞர் விருது" பெற்றார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான இவரது குறிப்பிடத்தக்க பணிக்காக, 1998 ஆம் ஆண்டில் பரிசார் விருதையும், 2012 ஆம் ஆண்டில் இராச்யோத்சவ புரசுகார் விருதையும் கர்நாடக அரசு சங்கருக்கு வழங்கியது.[1]
தொழில்
தொகுமுன்னதாக இவர் சனதா தளம் கட்சியுடன் இணைந்தார், பின்னர் பாரதிய சனதாதளம் கட்சியில் சேர்ந்தார். இருந்தாலும் ஊப்ளி-தார்வாடு நகராட்சி ஆணையத்தில் பத்தாண்டு காலமாக கவுன்சிலராகவும் பணியாற்றியுள்ளார்.[2] 2006 ஆம் ஆண்டில் பாரத் சேவா தளத்தின் மாவட்டத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "NGO Partnership System". Government of India portal. Archived from the original on 8 February 2015. பார்க்கப்பட்ட நாள் 2014-01-27.
- ↑ "'Uttara Karnataka' flag unfurled in Dharwad". தி இந்து. 2000-06-22 இம் மூலத்தில் இருந்து 2014-02-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140204023057/http://www.hindu.com/2000/06/22/stories/0422210c.htm.
- ↑ "'Youth told to follow Netaji Subhas Chandra Bose's ideals'". தி இந்து. 2006-01-24 இம் மூலத்தில் இருந்து 2008-05-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080530103815/http://www.hindu.com/2006/01/24/stories/2006012403100300.htm.