சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்

சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம் என்னும் நூல், பி. எல். சாமி என்கிற பி. லூர்துசாமி எழுதி, 1976ஆம் ஆண்டு, திருநெல்வேலி தென்னிந்திய சைவசைத்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் வெளியிடப்பட்டது. இந்நூலின் ஆசிரியர் சங்க இலக்கியத்தில் பறவைகளைப் பற்றி கூறப்பட்டுள்ள செய்திகளைத் திரட்டி, அவை பற்றிய தன்னறிவையும், தற்கால மக்களின் நேரடியான அறிவையும், ஆங்கில, பிற மொழி நூல்களில் கூறியுள்ள குறிப்புகளையும் ஒப்பிட்டுத் தொகுத்து இந்நூலை ஆக்கியுள்ளார். பறவைகளின் தோற்றம், வாழிடங்கள், உணவு, வாழ்முறைகள் முதலியன பற்றியஅரிய செய்திகள் இந்நூலில் உள்ளன. பறவையினங்களின் தமிழ்ப்பெயர்களும், அவற்றிற்கான ஆங்கிலப் பெயர்களும், அறிவியல் வகைப்பாட்டுப் பெயர்களும் தந்துள்ளார். சங்க இலக்கியத்தில் காணப்படும் மொத்தம் 62 பறவைகளைப் பற்றியதே இந்நூல். மொத்தம் 387 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில், 61 தமிழ் நூல்களை மேற்கோள்களாகவும், 26 ஆங்கில நூல்களைத் துணைநூல்களாகவும் சுட்டியுள்ளார். இதே நூல் பின்னொரு பதிப்பாக சங்க இலக்கியத்தில் பறவையின விளக்கம் என்னும் தலைப்பில் வெளியாகியது. இந்தப்பதிப்பு வெளியான ஆண்டு தெரியவில்லை. இந்நூலில் மொத்தம் 38 உள்பிரிவுகள் உள்ளன. இதுவே தமிழில் பறவைகளைப் பற்றி, சங்க இலக்கியச் செய்திகளையும் தற்கால பறவையியல் கருத்துக்களையும் சேர்த்துத் தரும் முதல் நூல்.

சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்
நூல் பெயர்:சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்
ஆசிரியர்(கள்):பி. எல். சாமி (பி. லூர்துசாமி)
வகை:அறிவியல் (பொது)
துறை:அறிவியல், பறவையியல், இலக்கியம்
காலம்:1976
இடம்:சென்னை, இந்தியா
மொழி:தமிழ்
பக்கங்கள்:387
பதிப்பகர்:திருநெல்வேலி, தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
பதிப்பு:1976
ஆக்க அனுமதி:பி. லூர்துசாமி