சங் பேயி மா
சங் பேயி மா (Chung-Pei Ma) (சீனம்: 馬中珮) ஓர் அமெரிக்க தைவான் வானியற்பியலாளரும் அண்டவியலாளரும் ஆவார். இவர் பெர்க்கேலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக வானியல் பேராசிரியர் ஆவார். இவர் 2011 இல் இருந்து 2016 வரையில் பல பெரிய கருந்துளைகளைக் கண்டுபிடித்த குழுக்களில் தலைமை தாங்கி உள்ளார்.
சங் பேயி மா | |
---|---|
இயற்பெயர் | 馬中珮 |
பிறப்பு | தைவான் |
துறை | அண்டவியல், வானியற்பியல் |
பணியிடங்கள் | கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) |
கல்வி கற்ற இடங்கள் | மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் |
விருதுகள் | அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழக ஆய்வுறுப்பினர் அமெரிக்க இயற்பியல் கழக ஆய்வுறுப்பினர் சுலோவான் அறக்கட்டளை ஆய்வுறுப்பினர் சைமன் அறக்கட்டளை ஆய்வுறுப்பினர் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது மரியா கொயெப்பர்ட் மேயர் விருது |
வாழ்க்கை
தொகுமா தைவானில் குவாங் சாவோ கெங்குக்கும் சீ-சென் மாவுக்கும் பிறந்தார்.[1] இவர் நான்காம் அகவையிலேயே வயலின் வாசிக்கத் தொடங்கியுள்ளார். இவர் தாய்பெய் நகராட்சி முதல் பெண்கள் முதுநிலைப் பள்ளியில் சேர்ந்து 1983 இல் தாய்வான் தேசிய வயலின் போட்டியில் வென்றுள்ளார்.[2] இவர் மசாசூசட்சு தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர்ந்த் படித்து 1987 இல் இயற்பியலில் இளம் அறிவியல் பட்டத்தைப் பெற்றார். இவர் அங்கே 1993 இல் இயற்பியலில் த முனைவர் பட்டத்தைப் பெற்றார். இவர் தன் முனைவர் பட்ட வழிகாட்டிகளாகிய ஆலன் குத், எடுமண்டு டபுள்யூ. பெர்ட்சிங்கரோடு இணைந்து கோட்பாட்டு அண்டவியலிலும் துகள் இயர்பியலிலும் ஆய்வுகள் மேற்கொண்டார். தன் பதின்பருவத்தில் வயலின் பிரியம் கொண்டு, 16 ஆம் அகவையில் தைவான் தேசிய வயலின் போட்டியில் வென்ற இவர் கல்லூரி நாட்களில் அந்நிறுவன போசுட்டனில் அமைந்த புதிய இங்கிலாந்து வயலின் இசைக்காப்பகத்தில் வயலின் வகுப்புகளும் எடுத்துள்ளார்.[3]
இவர் 1993 முதல் 1996 வரை கலிபோர்னியா தொழில் நுட்ப நிறுவனத்தில் முதுமுனைவர் ஆய்வுநல்கையைப் பெர்றார். மா1996 முதல் 2001 வரை பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தில் உதவி, இணைப் பேராசிரியராக இருந்தார். இங்கே இவட் கற்பித்தல் தகைமைக்காக இலிண்டுபேக விருதைப் பெற்றார்.[4] இவர் 2001 இல் பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைகழக வானியல் புலத்தில் வானியல் பேராசிரியராக விளங்கினார்.
இவரது ஆராய்ச்சி ஆர்வங்கள் அண்டப் பேரியல் கட்டமைப்பு, இருண்ட பொருள், அணட நுண்ணலைப் பின்னணி ஆகியவற்றில் கவிந்திருந்தது.[3] இவர் 2011 இல் மிகப் பெரிய கருந்துளைகளைக் கண்டுபிடித்த குழுவுக்குத் தலைமைதாங்கினார்.[5][6]
இவர் வானியற்பியல் இதழின் அண்டவியலுக்கான பதிப்பாசிரியர் ஆவார்.
தகைமைகளும் விருதுகளும்
தொகு- 1987 – பை பீட்டா கப்பா விருது
- 1997 – வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது, (அமெரிக்க வானியல் கழகம்)
- 1999 – சுலோவான் அறக்கட்டளை ஆய்வுறுப்பினர்
- 2003 – மரியா கொயெப்பர்ட் மேயர் விருது (அமெரிக்க இயற்பியல் கழகம்) [7]
- 2009 – அமெரிக்க இயற்பியல் கழக ஆய்வுறுப்பினர்
- 2012 – அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழக ஆய்வுறுப்பினர்,
- 2012 – சைமன் அறக்கட்டளை ஆய்வுறுப்பினர்,
தேர்ந்தெடுத்த வெளியீடுகள்
தொகு- Ma, Chung-Pei; Bertschinger, Edmund (December 1995). "Cosmological Perturbation Theory in the Synchronous and Conformal Newtonian Gauges". The Astrophysical Journal 455: 7–25. doi:10.1086/176550. Bibcode: 1995ApJ...455....7M.
- Ma, Chung‐Pei; Fry, J. N. (10 November 2000). "Deriving the Nonlinear Cosmological Power Spectrum and Bispectrum from Analytic Dark Matter Halo Profiles and Mass Functions". The Astrophysical Journal 543 (2): 503–513. doi:10.1086/317146. Bibcode: 2000ApJ...543..503M. https://archive.org/details/sim_astrophysical-journal_2000-11-10_543_2/page/503.
- Boylan-Kolchin, M.; Ma, C.-P.; Quataert, E. (1 January 2008). "Dynamical friction and galaxy merging time-scales". Monthly Notices of the Royal Astronomical Society 383 (1): 93–101. doi:10.1111/j.1365-2966.2007.12530.x. Bibcode: 2008MNRAS.383...93B.
- McConnell, Nicholas J.; Ma, Chung-Pei (20 February 2013). "Revisiting the Scaling Relations of Black Hole Masses and Host Galaxy Properties". The Astrophysical Journal 764 (2): 184. doi:10.1088/0004-637X/764/2/184. Bibcode: 2013ApJ...764..184M.
- Ma, Chung-Pei; Caldwell, R. R.; Bode, Paul; Wang, Limin (10 August 1999). "The Mass Power Spectrum in Quintessence Cosmological Models". The Astrophysical Journal 521 (1): L1–L4. doi:10.1086/312183. Bibcode: 1999ApJ...521L...1M.
- Fakhouri, Onsi; Ma, Chung-Pei; Boylan-Kolchin, Michael (21 August 2010). "The merger rates and mass assembly histories of dark matter haloes in the two Millennium simulations". Monthly Notices of the Royal Astronomical Society 406 (4): 2267–2278. doi:10.1111/j.1365-2966.2010.16859.x. Bibcode: 2010MNRAS.406.2267F.
மேற்கோள்கள்
தொகு- ↑ Kao, Evelyn (27 April 2020). "Taiwanese-American astrophysicist elected to AAAS". Central News Agency. https://focustaiwan.tw/sci-tech/202004270004. பார்த்த நாள்: 27 April 2020.
- ↑ 石麗東 (January 17, 2014). "震 動 全 球 天 文 學 界 的 馬 中 珮" (in Chinese). Atlanta Chinese News (1212): p. 16. http://www.atlantachinesenews.com/News/2014/01/01-17/C_ATL_P16.pdf.
- ↑ 3.0 3.1 "Leading physicist awarded US prize". Taipei Times. April 11, 2003. http://www.taipeitimes.com/News/taiwan/archives/2003/04/11/201630.
- ↑ "Current Faculty: Chung-Pei Ma". UC Berkeley Department of Astronomy. பார்க்கப்பட்ட நாள் 22 November 2015.
- ↑ "Newly Discovered Black Holes Are Largest So Far". NPR. December 15, 2011. https://www.npr.org/2011/12/10/143497216/newly-discovered-black-holes-are-largest-so-far.
- ↑ "Newly Discovered Massive Black Holes Dwarf Previous Record Holders". PBS NewsHour. December 6, 2011. https://www.pbs.org/newshour/bb/science-july-dec11-blackholes_12-06/.
- ↑ "2003 Maria Goeppert Mayer Award Recipient". American Physical Society. பார்க்கப்பட்ட நாள் 22 November 2015.
வெளி இணைப்புகள்
தொகு- Behemoth Black Hole Found in an Unlikely Place, accessed 8 April 2016.
- Sarah Lewin, Surprise! Gigantic Black Hole Found in Cosmic Backwater, accessed 8 April 2016.
- Dark Matter, the Other Universe, presentation by Ma, SETI Institute (video)