சச்சின் அகிர்

சச்சின் அகிர் (ஆங்கிலம்: Sachin Ahir; மராத்தி: सचिन अहिर)(இந்தியாவின் மும்பையில் 21 மார்ச் 1972 இல் பிறந்தார்) என்பவர் மகாராஷ்டிராவின் மும்பையினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி மற்றும் சிவசேனாவின் துணைத் தலைவர் ஆவார்.[4] இவர் தற்போது மகாராஷ்டிர சட்ட மேலவை உறுப்பினராக உள்ளார்.[1] இவர் வொர்லி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். [5]

சச்சின் அகிர்
Sachin Ahir
सचिन अहिर
சட்டமன்ற மேலவை உறுப்பினர், மகாராட்டிரம்[1]
பதவியில் உள்ளார்
பதவியில்
சூலை 2022
வீட்டு வசதி அமைச்சர், மகாராட்டிர அரசு[2]
பதவியில்
அக்டோபர் 2009 – ஆகத்து 2014
சட்டமன்ற உறுப்பினர், மகாராட்டிரம்[3]
பதவியில்
அக்டோபர் 22, 2009 – அக்டோபர் 19, 2014
முன்னையவர்தாதாஜி நாலாவாதே
பின்னவர்சுனில் சிண்டே
தொகுதிவொரி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 மார்ச்சு 1972 (1972-03-21) (அகவை 52)
மும்பை
தேசியம் இந்தியாn
அரசியல் கட்சிசிவ சேனா
துணைவர்அங்கீதா

சமூக சேவை

தொகு

சச்சினும் அவரது மனைவியும் சிறீசங்கல்ப் பிரதிசுதான் எனும் அறக்கட்டளையை நிறுவியுள்ளனர்.[6] இந்த அறக்கட்டளை வொர்லி விழா[7] மற்றும் கோவிந்த திருவிழாவின் போது தகி அண்டி நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் ஈடுபட்டுள்ளது.[8]

வகித்த பதவிகள்

தொகு
  • 1999: மகாராட்டிரா சட்டமன்ற உறுப்பினர் (1வது முறை)[9]
  • 2004: மகாராட்டிரா சட்டமன்ற உறுப்பினர் (2வது முறை)
  • 2009: மகாராட்டிரா சட்டமன்ற உறுப்பினர் (3வது முறை)
  • 2009: மகாராட்டிரா அரசாங்கத்தில் வீட்டுவசதிக்கான மாநில அமைச்சர்[2]
  • 2020: சிவசேனாவின் துணைத் தலைவர்
  • 2022: மகாராட்டிரா சட்ட மேலவை (1வது முறை)[1]

தொழிற்சங்க பணி

தொகு

சச்சின் அகிர் 1993-ல் இராஷ்ட்ரிய மில் மசுதூர் சங்கத்தில் தனது பணியைத் தொடங்கினார். செயலாளர் பதவியை வகித்த அகிர், இறுதியில் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1996 முதல் மகாராட்டிர இராஜ்ய ராட்ட்ரிய கம்கர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் மசகான் கப்பல்துறை, மகேந்திரா மற்றும் மகேந்திரா ஒன்றியம் போன்றவற்றையும் வழிநடத்தினார். இந்தத் தொழில்கள் அனைத்திலும் உள்ள தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான ஒப்பந்தங்களைச் செய்து தொழிலாளர் இயக்கத்திலும் செல்வாக்கு பெற்று விளங்கினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Maharashtra Legislative Council polls: Shiv Sena bag 2 seats".
  2. 2.0 2.1 "Sachin Ahir appointed as guardian minister of Pune". freepressjournal.in. https://www.freepressjournal.in/mumbai/sachin-ahir-is-pune-guardian-minister. 
  3. "Sitting and previous MLAs from Worli Assembly Constituency". elections.in.
  4. "Sachin Ahir joins Shiv Sena". https://www.ndtv.com/india-news/senior-ncp-leader-sachin-ahir-joins-shiv-sena-months-ahead-of-elections-in-maharashtra-2075045. 
  5. "Sachin Mohan Ahir". Praja. Archived from the original on 7 January 2016. பார்க்கப்பட்ட நாள் 2014-06-29.
  6. "The Goodness In Their DNA: Sangeeta and Sachin Ahir". http://dnasyndication.com/showarticlerss.aspx?nid=OjLpU5kJw7PnSLikxXlsHzgbkdRtPaYql3dPulswj7K7uxe0=. 
  7. "NGO Shree Sankalp Pratishthan host worli festival 2013". Event FAQs. பார்க்கப்பட்ட நாள் 2014-07-07.
  8. "Shah Rukh Khan attends Shree Sankalp Pratisthan Charitable Trust's dahi handi event at Worli in Mumbai". http://timesofindia.indiatimes.com/entertainment/events/mumbai/Shah-Rukh-Khan-attends-Shree-Sankalp-Pratisthan-Charitable-Trusts-dahi-handi-event-at-Worli-in-Mumbai/articleshow/22162313.cms. 
  9. "List of Successful Candidates in Maharashtra Assembly Election in 1999". http://www.elections.in/maharashtra/assembly-constituencies/1999-election-results.html. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சச்சின்_அகிர்&oldid=3615787" இலிருந்து மீள்விக்கப்பட்டது