சச்சின் நாக்
இந்திய முன்னாள் நீச்சல் வீரர்
சச்சின் நாக் (Sachin Nag) என்பவர் ஓர் இந்திய முன்னாள் நீச்சல் வீரர் ஆவார். இவர் 1920 ஆம் ஆண்டு சூலை மாதம் ஐந்தாம் தேதியன்று பிறந்தார். ஐக்கிய இராச்சியத்தின் இலண்டன் நகரில் 1948 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டியின் 100 மீட்டர் கட்டற்ற முன்னோக்கு நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பாக இவர் கலந்து கொண்டார்[1]. இதே ஆண்டு இங்கு நடைபெற்ற நீர்பந்தாட்டப் போட்டி மற்றும் 1952 இல் பின்லாந்து நாட்டில் நடைபெற்ற நீர்பந்தாட்டப் போட்டி இரண்டிலும் இவர் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டார்[1]. புதுதில்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீட்டர் கட்டற்ற முன்னோக்கு நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட இவர் இந்தியாவுக்கு முதலாவது தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார். 1987 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 19 ஆம் நாள் இவர் காலமானார்.
சச்சின் நாக் Sachin Nag | |
---|---|
பிறப்பு | இந்தியா, வாரணாசி | 5 சூலை 1920
இறப்பு | 19 ஆகத்து 1987 இந்தியா, கொல்கத்தா | (அகவை 67)
தேசியம் | இந்தியன் |
குடியுரிமை | இந்தியா |
பணி | நீச்சல் வீரர் |
உயரம் | 183 செ.மீ |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Sachin Nag Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 23 September 2016. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-04-18. பார்க்கப்பட்ட நாள் 2019-03-31.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)
.