சச்சின் நாயக்கு

இந்திய ஓவியர்

சச்சின் நாயக்கு (Sachin Naik) இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஓவியர் ஆவார். 1978 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். ஓர் அச்சுத் தயாரிப்பாளராகவும் இவர் அறியப்படுகிறார். நீர் வண்ண ஓவியங்களுக்காக, குறிப்பாக புனே மற்றும் கோவாவின் வரலாறு சார்ந்த ஓவியங்களுக்காக மிகவும் நினைவுகூரப்படுகிறார். ஐதராபாத் பல்கலைக்கழகம் மற்றும் கோவா பல்கலைக்கழகங்களில் படித்து பட்டம் பெற்றார். இந்தியாவின் கோவாவில் உள்ள கலா அகாதமி, தலைநகரத்திலுள்ள மெனிசசு பிராகான்சா நிறுவனம், மும்பையிலுள்ள சகாங்கீர் கலைக்கூடம், தேசிய கலைக் கழகம் எனப்படும் லலித் கலா அகாதமி ஆகியவற்றில் தனது படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளார். சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்தில் இறப்பதற்கு முன்பு வரை சுருக்கமாக நீர் வண்ண ஓவியம் கற்பித்தார். இவரது படைப்புகளின் மரணத்திற்குப் பிந்தைய கண்காட்சி 2019 ஆம் ஆண்டில் தர்பன் கலைக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் நுண்கலை பிரிவுக்கான யுவ சிருச்சன் புரசுகார் விருதைப் பெற்றார்.[1][2][3][4][5][6]

மேற்கோள்கள் தொகு

  1. "Watercolor Artist Web-Exclusive | Sachin Naik". Artists Network. 31 May 2011. https://www.artistsnetwork.com/art-mediums/watercolor/sachin-naik-watercolor-gallery/. 
  2. Singh, Debarati Palit (5 March 2019). "Remembering the master" (in en). The Bridge Chronicle. https://www.thebridgechronicle.com/lifestyle/art-culture/remembering-master-32516. 
  3. Khan, Ashwin (30 April 2018). "A wide CANVAS" (in en). Pune Mirror. https://punemirror.com/entertainment/unwind/a-wide-canvas/cid5096310.htm. 
  4. "MINISTER FOR ART AND CULTURE SHRI GAUDE PRESENTS ‘YUVA SRUJAN PURASKAR 2017’". Goan Reporter. 18 November 2017. https://www.goanreporter.com/minister-for-art-and-culture-shri-gaude-presents-yuva-srujan-puraskar-2017/. 
  5. "‘Getting your art nominated itself is a prestige’- says artist Sachin Naik". The Navhind Times. 26 February 2017. https://www.navhindtimes.in/2017/02/26/magazines/buzz/getting-your-art-nominated-itself-is-a-prestige-says-artist-sachin-naik/. 
  6. "Sachin Naik". The Waswo X. Waswo Collection of Indian Printmaking. பார்க்கப்பட்ட நாள் 22 February 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சச்சின்_நாயக்கு&oldid=3923129" இலிருந்து மீள்விக்கப்பட்டது