சஞ்சய் அஸ்தானா

சஞ்சய் அஸ்தானா (Sanjay Asthana) விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் பொது சுகாதாரப் பள்ளியில் மருந்தியல் மற்றும் புரோஸ்டோலஜி பிரிவின் தலைவராக உள்ளார். மேலும் டான்கன் ஜி மற்றும் லாட்டி எச் பலாண்டெயில் ஜெரியாட்ரிக்ஸ் பிரிவின் தலைவராக இருந்தவர்.[1] 2009 ஆம் ஆண்டிலிருந்து, அஸ்தானா விஸ்கான்சின் அல்சைமர் நோய் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்[2] 2015 ஆம் ஆண்டில், ஆஸ்தானா மரபியல் அறிவியலுக்கான முதல் இணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.[3]

அவர் வில்லியம் எஸ். மிடில்டன் மெமோரியல் வெர்டேனன்ஸ் வைத்தியசாலையிலும் ஒரு நியமனம் பெற்றுள்ளார், அங்கு அவர் ஜெரியாட்ரிக் ஆராய்ச்சி கல்வி மற்றும் மருத்துவ மையத்தின் இயக்குநர் ஆவார்.[4]

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார நிபுணரும் தூதருமான அஸ்தானாவின் தந்தை அல்சைமர் நோயால் அவதியுற்றார். இது அஸ்தானாவை அந்த நோயைப் பற்றிப் படிப்பதற்கு ஊக்குவித்தது.[5] சோயா ஐசோஃப்ளவன்ஸ், வைட்டமின் ஈ, மற்றும் ரேமிப்ரில், ஆகியவற்றின் விளைவுகளைச் சோதித்து இதில் வைட்டமின் ஈ, மனச்சோர்வை குறைக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர்.[6] சமீபத்திய வேலையில் இன்சுலின் எதிர்ப்பு அல்சைமர் நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் அல்லது நோய்த்தாக்கத்தின் வளர்ச்சியை அதிகரிக்கலாம் என கண்டறியப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "UWSMPH Directory and Biography".
  2. "New Alzheimer's Research Center Opens".
  3. "New Role, Tremendous Vision: Sanjay Asthana, MD, Associate Dean for Gerontology". Archived from the original on 2016-03-04.
  4. "UWSMPH Director and Bio".
  5. "Personal Experiences Inspire Alzheimer's Research".
  6. Gleason, Carey E.; Fischer, Barbara L.; Dowling, N. Maritza; Setchell, Kenneth D. R.; Atwood, Craig S.; Carlsson, Cynthia M.; Asthana, Sanjay (2015-08-11). "Cognitive Effects of Soy Isoflavones in Patients with Alzheimer's Disease". Journal of Alzheimer's disease: JAD 47 (4): 1009–1019. doi:10.3233/JAD-142958. பன்னாட்டுத் தர தொடர் எண்:1875-8908. பப்மெட்:26401779. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சய்_அஸ்தானா&oldid=3612509" இலிருந்து மீள்விக்கப்பட்டது