சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா

சஞ்சய் காந்தி தேசியப்பூங்கா (Sanjay Gandhi National Park) இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் ,மும்பை [1] க்கு அருகில் 87 கிமீ 2 (34 சதுர மைல்) பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அமைந்துள்ளது.

சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா

வரலாறு:

தொகு

இந்தப் பூங்கா 1983ல் மும்பை மாநிலத்தில் உள்ள தாணே இடத்தில் உள்ளது. இதன் பரப்பளவு 86.96 ச.கி.மீ ஆகும். பூங்காவுக்கு அண்மையான நகரம் மோரிவில் 3 கி.மீ. தூரத்தில் தான் இருக்கிறது. இந்த நகரமே இப்பூங்காவின் ரயில் நிலையமாகும்.

பூங்காவின் அமைப்பு:

தொகு

காட்டின் பெரும்பகுதி புன்செய் வகையானது. கன்ஹேரிகுகைகளை நெருங்கும் பகுதியில் ஆங்காங்கே ஒருசில என்றும்-பசுமை மற்றும் அரைகுறை என்றும்-பசுமைக் காடுகள் உள்ளன. தாவர இனங்கள் மாங்க்ரோவ், ஜாம்பல், தேக்கு ஆகியன. பூங்காவில் சுமார் 1000 வகையான பூக்கும் தாவரங்கள் இருக்கின்றன.

வன விலங்குகள்:

தொகு

பூங்காவின் பிராணிகளில் சிறுத்தை, காட்டுப்பூனை, கீரி, நாற்கொம்புமான், சாம்பர், எலிமான், வராகம், ல்ங்கூர், குரங்கு, மகரம், முதலை முதல்யன அடங்கும்.

பறவைகள்:

தொகு

ஹான்பில்ஸ், புல்புல்ஸ், சூரியன் பறவைகள், மயில் மற்றும் மரம்கொத்தி.

அரசவால் ஈப்பிடிப்பான் என்னும் வலசைப் பறவையும் இங்கு வரும். மீன்கொத்திகள், மைனாக்கள், ரெட்டைவாள் குருவி, உழவாரக்குருவி, நீள்சிறகுடை கடற்பறவைகள், வெண்குருகு, நாரைகள் போன்றவை இங்கு காணலாம்.

மேற்கோள்கள்

தொகு
  1. Narkar, N.S., Mhaiske, V.M., Patil, V.K., Narkhede, S.S. and Malave, D.B. (2017). "Socio-Economic Impact of Tourism Activity on Local Stakeholders of Sanjay Gandhi National Park, Borivali, Mumbai". Journal of Tree Sciences 36(2): 105−114.