சஞ்சய் புகாலியா
சஞ்சய் புகாலியா ( Sanjay Pugalia ) இந்தியாவின் மும்பையில் உள்ள சிஎன்பிசி ஆவாசு என்ற இந்தி செய்தித் தொலைக்காட்சியின் முன்னாள் தலைமை ஆசிரியரும் மற்றும் வணிகப் பத்திரிகையாளரும் ஆவார்.[1] அச்சு மற்றும் ஒளிபரப்பு அனுபவசாலியான இவர், ஆஜ் தக், ஏபிபி நியூஸ் ,ஜீ நியூஸ் மற்றும் சிஎன்பிசி ஆவாசு உட்பட பல இந்தி மொழி செய்தித் தொலைக்காட்சிகளில் மூத்த செய்தி இயக்குநராக பணியமர்த்தப்பட்டார்.[2] 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி தி குயின்ட் என்ற செய்தி மற்றும் கருத்து இணையதளத்தின் ஆசிரியர் இயக்குநராக உள்ளார்.[3]
இவர் தற்போது அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் தலைமை-ஊடக முன்முயற்சிகளில் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் மற்றும் ஆசிரியராகவும் பணிபுரிகிறார்.[4]
இந்தியாவின் ஊடகத்துறை 1990களில் தொடங்கி பல செய்தித் தொலைக்காட்சிகளை உருவாக்கி வருவதால், புகாலியா பல தனியார், சுயாதீனத் தொலைகாட்சிகளின் தலைவராக இருந்து வருகிறார் . இவை அனைத்தும் இந்தியாவின் தூர்தர்ஷனுக்கு எதிராக போட்டியிட்டன.[5] சுதந்திர தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்தியாவில் இந்தி மொழி இதழியலுக்கு ஆங்கில மொழி இதழியலுக்கு எதிராக போட்டியிடும் ஒரு தளத்தை வழங்கியது. இது இந்த சகாப்தத்தில் இந்திக்கு மாற்றத்தை உருவாக்கியது.[6]
சொந்த வாழ்க்கை
தொகுசஞ்சய் புகாலியா சார்க்கண்டிலுள்ளசாகிப்கஞ்சில் வளர்ந்தார். அங்கு இவரது தந்தை ஒரு தொழிலதிபராக இருந்தார்.[7] புகாலியா வரலாறு மற்றும் அரசியல் அறிவியலில் பல்கலைக்கழக பட்டங்களைப் பெற்றுள்ளார்.[8] தனது மாணவப் பருவத்தில் சுரேந்திர பிரதாப் சிங் ஆசிரியராக இருந்து வெளியிட்ட ரவிவார் என்ற பத்திரிகையினால் ஈர்க்கப்பட்ட சஞ்சய் அதன் இந்தி மொழி வெளியீடு தன்னை பத்திரிகைத் தொழிலைத் தொடங்க தூண்டியது எனக் கூறுகிரார்.[7] ஊடக வல்லுநர்களுக்கான அறக்கட்டளையின் நிறுவன உறுப்பினராக இவர் உள்ளார், இது வடிவமைப்பைப் பொருட்படுத்தாமல் அனைத்து தொழில் வல்லுநர்களுக்கான பத்திரிகை சங்கமாகும்.[9]
தொழில்
தொகுபத்திரிகையாளராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக, சஞ்சய் புகாலியா அச்சு மற்றும் ஒளிபரப்பு இதழியல் ஆகிய இரண்டிலும் பணியாற்றியுள்ளார். இவர் தி டைம்ஸ் குரூப், பிசினஸ் ஸ்டாண்டர்ட்,[10] ஆஜ் தக், [10] ஜீ நியூஸ், [10] ஸ்டார் நியூஸ், [10] மற்றும் சிஎன்பிசி ஆவாசு ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். [11] இவர் இந்தி மற்றும் ஆங்கில இதழியல் துறையில் பணியாற்றிய போது, முதன்மையாக இந்தி மொழி பத்திரிகையாளராக இருந்துள்ளார்.
விருதுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Channel Moves". தி இந்து. 17 June 2002 இம் மூலத்தில் இருந்து 7 November 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031107064737/http://www.hindu.com/thehindu/mp/2002/06/17/stories/2002061701340400.htm. பார்த்த நாள்: 21 September 2012.
- ↑ "Business time with the PM". Hindustan Times. 17 January 2005.
- ↑ "Sanjay Pugalia on The Quint". TheQuint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-23.
- ↑ "Adani Enterprises appoints Sanjay Pugalia as CEO and editor-in-chief, Media Initiatives". Financialexpress (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-24.
- ↑ "India: Rising competition forces change in TV news treatment". The Telegraph (India). 27 January 2004.
- ↑ Yadav, Yogendra (27 June 2007). "When Hindi became telegenic". The Indian Express. http://www.indianexpress.com/news/when-hindi-became-telegenic/202817/0. பார்த்த நாள்: 26 September 2012.
- ↑ 7.0 7.1 Pherwani, Seema (30 December 2005). "A Scribe to the Core". indiantelevision.com. http://www.indiantelevision.com/exec_life/y2k5/dec/30dec/mylife.htm. பார்த்த நாள்: 25 September 2012.
- ↑ "Network18". Network18online.com. Archived from the original on 18 மார்ச்சு 2013. பார்க்கப்பட்ட நாள் 10 செப்டெம்பர் 2012.
- ↑ "Founding Members". Foundation for Media Professionals. பார்க்கப்பட்ட நாள் 25 September 2012.
- ↑ 10.0 10.1 10.2 10.3 Khosla, Mukesh (16 June 2002). "Star reshuffle". The Sunday Tribune. http://www.tribuneindia.com/2002/20020616/spectrum/tv.htm. பார்த்த நாள்: 21 September 2012.
- ↑ "Business time with the PM". 17 January 2005.
- ↑ "India on course to self reliance in energy". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 8 September 2010 இம் மூலத்தில் இருந்து 3 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103150906/http://articles.timesofindia.indiatimes.com/2010-02-08/pune/28138866_1_national-awards-lifetime-awards-institutes. பார்த்த நாள்: 22 September 2012.
- ↑ "e4m INBA 2010: Industry honours the contributions of Kalanidhi Maran, Rajdeep Sardesai, G Krishnan, Barkha Dutt, Shazi Zaman, among others". 5 September 2010.
- ↑ "Network18 bags 5 top honours at INB awards". IBN live. 2 September 2010 இம் மூலத்தில் இருந்து 3 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103152251/http://content.ibnlive.in.com/article/02-Sep-2010tv/network18-bags-5-top-honours-at-inb-awards-130129-44.html. பார்த்த நாள்: 22 September 2012.