சஞ்சிதா பட்டாச்சார்யா

சஞ்சிதா பட்டாச்சாரியா அல்லது குரு சஞ்சிதா பட்டாச்சாரியா இந்தியாவை சேர்ந்த பெண் ஒடிசி நடன கலைஞர் ஆவார்.[1] இவர் பாரம்பரிய ஒடிசி நடன கலையில் நிபுணத்துவம் வாய்ந்தவராகக் கருதப்படுகிறார்.[2][3] ஒடிசி நடனம் ஆடுவது கிமு முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டிற்கு முந்தையதாக கருதப்படுகிறது. இது இந்தியாவின் மிகப்பழமையான நிலைத்திருக்கக்கூடிய நடன வடிவம் ஆகும்.

குரு சஞ்சிதா பட்டாச்சார்யா

கலை வாழ்க்கைதொகு

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மேடிசன் சதுக்கம் உட்பட இந்தியா மற்றும் பல சர்வதேச மேடைகளில் இவர் ஒடிசி நடனம் ஆடியுள்ளார். அறக்கட்டளை ஒன்றின் நிதி திரட்டலுக்காக ஐக்கிய அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டு ஒடிசி நடன நிகழ்ச்சியை நடத்தினார்..[4][5] அமெரிக்காவில் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு ஐக்கிய அமெரிக்காவில் தற்பொழுது நடைபெற்று வருகிறது. [6] கொல்கத்தாவிலுள்ள சர்வதேச பல்நோக்கு கலைப்பள்ளியில் 2019 ஜீலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஒடிசி நடனத்தில் அபிநயம் என்ற தலைப்பில் பயிற்சிப்பட்டறையில் பல மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.[7]

ஊடகங்களின் பாராட்டுகள்தொகு

இவருடைய நடனம் மிகவும் உன்னதமானது கலைநயம் மிக்கது” என நியூயார்க் டைம்சு பத்திரிக்கை பாராட்டியுள்ளது.“ஒடிஸி நடனக் கலைஞர் சஞ்சிதா பட்டாச்சார்யா தனது அபிநயம் மற்றும் சிறந்த பாதநடனத்தால் பார்வையாளர்களத் தன்வயப்படுத்துகிறார்” என தி இந்து நாளிதழ் பாராட்டியுள்ளது. [8]

தனிப்பட்ட வாழ்க்கைதொகு

சஞ்சிதாவின் தாயார் சித்ரா தேவி ஆவார். இந்தியப் பாரம்பரிய சந்தூர் இசைக் கலைஞரான பண்டிட் தருண் பட்டாச்சாரியா என்பவரை சஞ்சிதா திருமணம் செய்துள்ளார். தருண் மிகவும் பிரபலமான இசைக்கலைஞரான இரவிசங்கரின் சீடராவார். [9]. தம்பதியர் இருவரும் சேர்ந்து பல இசை நடன நிகழ்ச்சிகளை நடத்தியும், பங்குபெற்றும் வருகின்றனர்.[10]

இவரது நடனங்கள்தொகு

இந்தியாவில்..

இவர் கீழ்க்கண்ட இடங்களில் தனது நடனத்தை ஆடியுள்ளார் [11][12]

இந்தியாவில் வாரணாசியில் நடைபெற்ற சங்கீத் மோஷன் திருவிழா

தோவல் இன் இசை மாநாடு

2008 இந்தியாவில் தேசிய கடல்சார் தினம் கொண்டாட்டம் பூரி ஜெகன்நாதர் கோவில்

முதல் இந்திய சர்வதேச பெண்கள் திருவிழாவின் துவக்க விழா மற்றும் இந்திய வசந்தகால திருவிழாவிலும் [13] தனது நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.


வெளிநாட்டில்...

மேடிசன் சதுக்கத் தோட்டத்தில் என்.ஏ.பி.சி (NABC) யின் 25வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தின்போதும்,

சிங்கப்பூரின் எஸ்ப்லனேடு திரையரங்கத்திலும்,

வடக்கு கரோலினாவில் நடைபெற்ற இந்திய திருவிழாவின் இறுதி போட்டியின்போதும்,

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மின்னசொட்டா பல்கலைக்கழகத்திலும்,

ஐக்கிய ராச்சியத்தின் கிங்ஸ்டன் அரசு அல்ட்ராடெக் மேடையிலும்,

அமெரிக்காவின் சார்சியா மாகானத்தில் அட்லாண்டா குழந்தைகளுக்கான நிதி திரட்டல் இசை நிகழ்வில் தனது கணவர் தருன் பட்டாச்சார்யா, மற்றும் சில இந்திய கலைஞர்களுடன் கலந்து கொண்டு ஒடிசி நடன நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.[14]

விருதுகள் மற்றும் கௌரவங்கள்தொகு

2010 ஆம் ஆண்டு அமெரிக்காவின் செனட் சபையால் இந்தியாவின் கலாச்சார தூதுவராக சஞ்சிதா பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டார்.[15] [16][17] 2018 சங்கீத சியாமளா விருது ஹிந்துஸ்தான் கலை மற்றும் இசை சங்கத்தால் வழங்கப்பட்ட 2018க்கான ரத்னா விருது 2008 இல் வழங்கப்பட்ட கோவிலின் இசை விருது இசை மாநாடு விருது 2018 இல் மதிப்புமிக்க மகரி விருது இதனுடன் ரூபாய் 50,000 பணமுடிப்பு போன்ற போன்ற கௌரவங்கள்[18] இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

படத்தொகுப்புதொகு

மேலும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. "Divine Dancer". The Hindu. பார்த்த நாள் 26 January 2015.
 2. "Odissi Dancer". Kolkata Today. பார்த்த நாள் 26 January 2015.
 3. "Odissi Dancer Lists". Art India. பார்த்த நாள் 26 January 2015.
 4. "Indian Artists to Tour for Charity Funds". பார்த்த நாள் 26 January 2015.
 5. "Dance Inspired by Mythology". The Hindu. பார்த்த நாள் 26 January 2015.
 6. "Bengali Danseuse Feature in Movie in USA". பார்த்த நாள் 26 January 2015.
 7. http://imasart.org/workshop-on-odissi-dance/
 8. https://www.thehindu.com/features/friday-review/dance/divine-dance/article3283498.ece
 9. "Tarun Bhattacharya's Wife". The Telegraph. பார்த்த நாள் 26 January 2015.
 10. http://notintown.net/india-details/276/contact.html
 11. "Performances". பார்த்த நாள் 26 January 2015.
 12. "Event List". பார்த்த நாள் 26 January 2015.
 13. "Indian Spring". பார்த்த நாள் 26 January 2015.
 14. http://www.khabar.com/events-calendar/Support-A-Child-Atlanta-Music-Meets-Bells
 15. https://www.veethi.com/india-people/sanchita_bhattacharya-profile-11923-42.htm
 16. "Cultural Ambassador of India". Skidmore College. பார்த்த நாள் 26 January 2015.
 17. "Cultural Ambassador of India". பார்த்த நாள் 26 January 2015.
 18. https://www.odisha360.com/2018/03/08/noted-odissi-danseuse-sanchita-bhattacharya-receive-mahari-award/

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sanchita Bhattacharya
என்பதின் ஊடகங்கள் உள்ளன.