சண்டேச அனுக்கிரக மூர்த்தி

(சடேச அனுக்ரஹ மூர்த்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிவ வடிவங்களில் ஒன்றான
சண்டேச அனுக்கிரக மூர்த்தி

மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்,
உருவத்திருமேனி
விளக்கம்: சண்டேசர் பதவியை அளித்த வடிவம்
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்

சண்டேச அனுக்கிரக மூர்த்தி என்பவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒருவராவார். சிவபக்தியில் சிறந்து விளங்கிய விசாரசருமர் என்பவருக்கு சண்டேசர் எனும் பட்டத்தினை அளித்து சிவபெருமான் அனுக்கிரத்த உருவம் சண்டேச அனுக்கிரக மூர்த்தி என்படுகிறது.

திருவுருவக் காரணம்

தொகு

திருசேய்ஞலூர் எனும் ஊரில் வாழ்ந்தவந்த எச்சதத்தன் - பத்திரை தம்பதிகளுக்கு விசாரசருமர் என்ற மகன் இருந்தார். அவர் குருவில்லாமலேயே சிறந்த ஞானம் பெற்றார். அந்த ஞானத்தின் மூலமாக சிவபெருமானே முழுமுதற்கடவுளாக உணர்ந்தார். அன்று முதல் சிவபக்தியில் மூழ்கியிருந்தார். மணலால் சிவபெருமானுக்கு ஆலயம் மற்றும் மணலிங்கம் ஆகியவற்றை அமைத்து தினமும் வழிபட்டு வந்தார்.

இதையறிந்தோர் விசாரசருமானின் தந்தையான எச்சதத்தனிடம் முறையிட்டனர். ஆகமங்கள் துணையின்றி முறையற்ற ஒரு ஆலயம் அமைத்து அதில் தன் காலத்தினை மகன் செலவிடுகிறான் என்றெண்ணிய தந்தை விசாரசருமானின் ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில் சென்று அவனை சிவபக்தியில் ஈடுபட இயலாமல் தடுத்தார். அதனை பொருட்படுத்தாதிருந்த விசாரசருமானின் அபிசேக பொருட்களை கால்களால் உதைத்தார். சிவபெருமானுக்கு அபிசேகம் செய்ய வைத்திருந்த பொருட்களை கால்களால் உதைத்தமையால் விசாரசருமார் தந்தைமீது கோபம் கொண்டார். ஆழ்ந்திருந்த சிவபக்தியால் ஒரு கொம்பினை எடுத்து அதனை மழுவாக(கோடாரி) மாற்றி தந்தையில் காலை வெட்டியெறிந்தார்.

சிவபெருமான் பார்வதி தம்பதியர் சமேதமாக தோன்றி எச்சதத்தனை மீட்டார். அதிதீவிர பக்தியுடைய விசாரசருமாரை தனது பக்தர்களில் தலைசிறந்தவராக அறிவித்து, சண்டேசுவரன் என்ற பட்டத்தினையும் அளித்தார்.

வெளி இணைப்புகள்

தொகு