சடையவர்மன்
சடையவர்மன் என்னும் பெயரிலுள்ள கட்டுரைகள்
பாண்டிய மன்னர்கள்
தொகு- சடையவர்மன் சீவல்லபன் - கி.பி. 1132 முதல் 1162 வரை பாண்டிய நாட்டில் ஆண்ட மன்னனாவான். சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கன் காலத்தவன்.
- சடையவர்மன் பராந்தக பாண்டியன் - கி.பி. 1150 முதல் 1162 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். முதலாம் குலோத்துங்கனின் மகனான விக்கிரம சோழன் காலத்தைச் சேர்ந்தவன்.
- சடையவர்மன் குலசேகர பாண்டியன் - கி.பி. 1162 முதல் 1175 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான்.சீவல்லப பாண்டியனின் மகன்.
- சடையவர்மன் வீரபாண்டியன் - கி.பி. 1175 முதல் 1180 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். முதலாம் பராக்கிரம பாண்டியனின் மகன்.
- முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் - கி.பி. 1251-1271 - பல மன்னர்களை வென்று தென்னிந்தியாவின் தெற்குப்பகுதிகளையும் இலங்கை வடக்குப்பகுதிகளையும் ஆண்டவன்.
- இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் - கி.பி. 1276-1293 - முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சிக்குத் துணையிருந்த இம்மன்னன் கருவூரினைத் தலைநகராகக்கொண்டு கொங்கு நாட்டில் ஆட்சி புரிந்தவன்.
- சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் - கி.பி. 1422 முதல் 1463 வரை தென்காசியை தலைநகராக கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி செய்த மன்னனாவான்.
- சடையவர்மன் சீவல்லப பாண்டியன் - கி.பி. 1534 முதல் 1543 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். ஆகவராமனின் மகன்.
- சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் - கி.பி. 1564 முதல் 1604 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் முதலாம் மகனாவான்.
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |