சடையவர்மன் வீரபாண்டியன்
சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1175 முதல் 1180 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். பராக்கிரம பாண்டியனின் மகனான இவனது மெய்க்கீர்த்திகள் 'பூமடந்தையும்,சயமடந்தையும்' எனத் தொடங்கும்.
சடையவர்மன் வீரபாண்டியனது ஆட்சி நிலை
தொகுஇலங்கைப் படைத்தலைவர்களின் உதவியினால் மதுரையினை ஆளும் பொறுப்பினை ஏற்ற இவன் கி.பி. 1168 ஆம் ஆண்டில் மதுரை ஆட்சியினை இழந்தான்.பின்னர் சோழ படைத்தலைவரின் உதவியினால் சேர நாட்டிலிருந்து வந்து மதுரையினை ஆட்சி செய்தான்.கி.பி. 1180 வரை வேதவனமுடையான்,அம்மையப்பன் அண்ணன் பல்லவராயன் போன்றவர்களினால் மதுரையினை ஆட்சி செய்தான்.பாண்டிய நாட்டினை 1178 ஆம் ஆண்டளவில் இராசாதிராசன் தனது ஆட்சியிலிருந்து விலகிக்கொண்டான். சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன் சோழ நாட்டு ஆட்சிப் பொறுப்பினை கி.பி. 1178 ஆம் ஆண்டளவில் பெற்று சடையவர்மன் வீரபாண்டியனுக்கு பாண்டிய நாட்டினை ஆளும் பொறுப்பினையும் கொடுத்தான்.நன்றி மறந்த சடையவர்மன் வீரபாண்டியன் சிங்கள மன்னருடன் நட்புக் கொண்டான்.வீரபாண்டியனுடன் 1180 ஆம் ஆண்டில் மூன்றாங்குலோத்துங்கன் போர் செய்தான்.இப்போரில் சடையவர்மன் வீரபாண்டியனின் மகனொருவன் இறந்தான் என்பது கருத்து.ஏழகப்படைகளும்,மறவர் படைகளும் ஈழப் படையும் தோற்றனர்.போரில் வெற்றி பெற்ற மூன்றாம் குலோத்துங்கன் தன்னிடம் அடைக்கலம் கொண்டவிக்கிரம் பாண்டியனிடம் ஆட்சிப் பொறுப்பினை அளித்தான்.போரில் தோற்ற சடையவர்மன் வீரபாண்டியன் சேர மன்னனிடம் அடைக்கலம் கொண்டான் அச்சேர மன்னனும் சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன் இவனிடம் பகை கொள்வான் என்ற காரணத்தினால் சடையவர்மன் வீரபாண்டியனை மூன்றாம் குலோத்துங்கனிடம் அழைத்துச் சென்று மதுரையில் ஒரு பகுதியை அவனின் ஆட்சிக்கு கீழ் கொடுக்க வைத்தான்.சடையவர்மன் வீரபாண்டியனது மகன்களான வீரகேரளன்,பருதி குலபதி இருவருக்கும் தன் பக்கம் இருந்து விருந்துண்ணும் சிறப்பினை அளித்தான் மூன்றாம் குலோத்துங்கன்.இரு நிதி,பரிச்சட்டம்,இலங்கு மணிக்கலன் போன்றனவற்றினையும் 1180 காலப்பகுதியில் அளித்தான் என திருவக்கரை திட்சைக் குடிக் கல்வெட்டு குறிப்பிடும்.