பராக்கிரம பாண்டியன்
பராக்கிரம பாண்டியன் கி.பி. 1150 முதல் 1160 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான்.முதலாம் குலோத்துங்கன் காலத்தில் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த இவன் திருபுவனச் சக்கரவர்த்தி எனப்பட்டம் பெற்றிருந்தான். மாறவர்மன் என்னும் அடைமொழியினையும் பெற்றிருந்தான்.'திருமகள் புணர' என இவனது மெய்க்கீர்த்தி தொடங்கும்.முதலாம் குலோத்துங்கன் பாண்டிய நாட்டினை 40 ஆம் ஆண்டு ஆட்சி செய்த வேளை பராக்கிரம பாண்டியன் 23 ஆம் ஆண்டு ஆட்சியினை மேற்கொண்டிருந்தான்.