மதிவாணன்
மதிவாணன் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். மதுரைத் தமிழ்ச் சங்கத்தினை விரிவுபடுத்தி முத்தமிழையும் ஆய்வுபடுத்தி தமிழின் வளர்ச்சியொன்றினையே தன் ஆட்சியில் மிக முக்கியமானதொன்றாக நினைத்துச் செய்தவன் என்ற சிறப்பினை உடையவனாவான். முத்தமிழிலும் வல்லவனாகத் திகழ்ந்த மதிவாணன் புலவர்களை ஆதரித்தும் சிறந்த தமிழ் நூல்களினை இயற்றவைத்தும் கல்வி,கேள்விகளில் வல்லவனாகவும் நாடகத் தமிழில் ஈடுபாடு கொண்டவனாவும் விளங்கினான். நாடகத்தமிழ் நூல் ஒன்றினை இயற்றி அதற்கு மதிவாணன் மதிவாணர் நாடகத் தமிழர் எனப் பெயரிட்டான். மறைந்த தமிழ் நூல்களின் பட்டியலில் இந்நூலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. நாடக நூல் தந்த மதிவாணன் நான்மாடக் கூடல் நாயகனாக இருந்தான்.