மதிவாணர் நாடகத் தமிழர்

கி.பி. 60 முதல் 85-ஆம் ஆண்டு வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னன் மதிவாணனால் எழுதப்பட்ட இந்நூல் மறைந்த தமிழ் நூல்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. மதிவாணர் நாடகத் தமிழர் எனவும் நாடகத் தமிழ் நூல் எனவும் அழைக்கப்பட்டிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்தாகும். இந்நூலின் சில பாடல்கள் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய ஆசிரியரால் எடுத்துக் காட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.இந்நூல் அகற்பாவாலும்,வெண்பாவாலும் இயற்றப்பட்டது.மேலும் வெண்பா திறன் மிக்கவர்களாலே மட்டுமே பாடமுடியும். சிலப்பதிகார உரை ஆசிரியர் அடியார்க்கு நல்லார் ஐந்து இசை நாடக நூல்கள் பற்றி எடுத்துக்காட்டி இந்நூலினையும் அவற்றுள் ஒன்றாகத் தேர்ந்தெடுத்தார்.இந்நூல் வசைக் கூத்திற்கும்,புகழ் கூத்திற்கும் இலக்கணம் கூறுவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கூத்தநூலும் மதிவாணனார் நாடகத்தமிழ்நூலும்

தொகு

‘பதினெண் கூலமும் உழவர்க்கு மிகுக’ – இந்த அடி கொண்ட பாடலைக் கூத்தநூலார் பாடியது என ஓரிடத்திலும், மதிவாணனார் நாடகத்தமிழ்நூலில் உள்ளது என மற்றோரிடத்திலும் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார்.

இதனால் கூத்தநூல் என்பதும், மதிவாணனார் நாடகத்தமிழ் என்பதும் ஒன்று என அறிஞர்கள் கருதுகின்றனர். [1]

அடிக்குறிப்பு

தொகு
  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பத்தாம் நூற்றாண்டு, 2005 பக்கம் 196 முதல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதிவாணர்_நாடகத்_தமிழர்&oldid=3325370" இலிருந்து மீள்விக்கப்பட்டது