சட்டவியல் (Jurisprudence) என்பது சட்டம் பற்றிய ஆய்வு மற்றும் சட்டம் சார்ந்த கோட்பாடுகளை பற்றி படிப்பதாகும். நவீன சட்டவியல் 18 ஆம் நூற்றாண்டில் தொடங்கியதாக அறியப்படுகிறது. இவை பெரும்பாலும் இயற்கை சட்டம், சிவில் சட்டம், மற்றும் நாடுகளின் சட்டம் முதல் கொள்கைள் மீது கவனம் செலுத்தின.

Philosophers of law ask "what is law, and what should it be?"

பெயர்காரணம் தொகு

சட்டவியல், சட்டம் மற்றும் இயல் என்னும் சொற்களின் சேர்க்கையினால் உருவாகிறது. சமூகவியல், வேதியியல் ஆகியனப் போன்று சட்டத்தை பற்றிய அறிவியல் பிரிவு சட்டவியல் என அறியப்படுகிறது. இது ஆங்கிலச் சொல்லான ஜூறிஸ்ப்ரூடன்ஸ் (Jurisprudence) என்பதின் மொழியாக்கமாகும். இது விதி அல்லது சட்டம் என்று பொருள்படும் ஜூறீஸ் (juris) மற்றும் அறிவு என்று பொருள்படும் ப்ரூடன்ஸீய (prudentia) ஆகிய லத்தீன் சொற்களின் இணைப்பால் தோன்றியதாகும். விதிசாஸ்த்ரம் (विधिशास्त्रं) என்று வடமொழியிலும் நியமசாஸ்த்ரம் (നിയമശാസ്ത്രം) என்று மலையாளத்திலும், நியாயசாஸ்த்ர (ન્યાયશાસ્ત્ર) என்று குஜராத்தியிலும் இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

வரையறைகள் (Definitions) தொகு

சட்டவியல் எனும் சொல்லாடல் பல காலங்களில் பல புரிதல்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சில சமயங்களில் "சட்டம்" என்பதற்கான ஒத்தச் சொல்லாகவும், சில சமயங்களில் சட்ட தத்துவவியல் என்றும், சில சமயங்களில் சட்ட அறிவியல் என்றும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது சட்டவியல் என்பதற்கு மாற்றாக "சட்ட தேற்றம்"(legal theory) என்று பயன்படுத்தும் முறை பரவலாகி வருகின்றது. சட்டவியலாளர்கள் சட்டவியலை வரையறுத்துக் கூறியுள்ளனர்.

ஆஸ்ஃறின் (Austin): சட்டவியல் என்பது, இதன் மூல நெறிகள் அல்லது கூற்றுக்களை ஆய்வு செய்திட கையாளும் சட்டத்தின் அறிவியல்
ஹோஅலன்ட் (Holland): சட்டவியல் என்பது, நேர்மறைச் சட்டத்தின் முறைப்படியான அறிவியல்
சால்மன்ட் (Salmond): சட்டத்தின் முதற் நெறிகளின் அறிவியல்
கீ-டன் (Keeton): சட்டத்தின் பொது நெறிகளின் முறையான ஒழுங்கமைவு மற்றும் படிப்பு
முனைவர் ஆ-லென் (Dr. Allen): சட்டத்தின் இன்றியமைய நெறிகளின் அறிவியற்பூர்வ தொகுப்பியம்
பேராசிரியர் க்றே (Professor Grey): சட்டவியல் என்பது சட்டதின் அறிவியல், நீதிமன்றங்களால் பின்பற்றப்படும் விதிமுறைகளின் கூற்று மற்றும் அவற்றின் சீறான ஒழுங்கமைவு, மற்றும் அத்தகைய விதிமுறைகளில் அடங்கியுள்ள நெறிகள்.

சட்டவியல் ஒரு சமூக அறிவியல் தொகு

சமூக அறிவியல் மனித வாழ்வியல் நெறியோடு தொடர்புற்றதாகும், மற்றும் தேவைகளுக்கும் வரும்படிகளுக்கும் ஏற்றாற்போல் மனித செயல்பாடுகளை ஒழுங்குப் படுத்துவதும் ஆகும். சமூக அறிவியலாளர்கள், சமூக தேவைகளுக்காக மனிதன் எந்த முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கு பதிலளிக்கவும், மனித நடத்தைக்கு ஏற்ற விதிமுறைகளை வழங்கவும் ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். சட்டங்கள் அரசியல் அதிகார அமைப்புகளால் நடப்பிலாக்கப்படும் மனித நடத்தை விதிகளாகும். ஆகையால் சட்டவியல் சட்டம் படிப்பவர்களுக்கு ஒரு சமூக அறிவியலாகவே அறிமுகமாகிறது. இது சட்டச் சூழ்நிலைக்கு ஏற்ப சமூகத்தில் மனித செயல்பாடுகளை கையாளுகிறது.

சட்டவியலின் வகைப்பாடு தொகு

சட்டவியலை பொதுவான சட்டவியல் என்றும் குறிப்பிட்ட சட்டவியல் என்றும் வகைப்படுத்துவது ஒரு முறையாகும். இரண்டு சட்டவியல்களின் வாதப்பொருள் நேர்மறைச் சட்டமாகும். இவைகள் ஒன்றில் இருந்து வேறுபடுவது அதன் கருத்து சுருக்கத்தால் அல்ல, அதன் வடிவமைப்பினால் ஆகும்.

பொதுவான சட்டவியல் (General Jurisprudence) தொகு

சட்டத்தின் அடிப்படைக் காரணிகளில் எவை உலகின் எல்லா சட்ட அமைப்புகளுக்கும் பொதுவாக கருதப்படுகிறதோ அவை சார்ந்ததாகும் பொதுவான சட்டவியல். எடுத்துக்காட்டாக, ஒரு சட்ட அமைப்பில் திருட்டு மரண தண்டனைக்குறிய செயலாக கருதப்படலாம், மற்றொரு சட்ட அமைப்பில் திருட்டு சிறைத் தண்டனைக்குறிய செயலாக கருதப்படலாம், ஆனால் இரண்டு சட்ட அமைப்பிலும் திருட்டு ஒரு தண்டனைக்குறிய குற்றமாகும். இந்த சட்டவியல் பகுதிகளை சரியாகப் பரிசோதித்தால், சட்டத்தின் அடிப்படைக் காரணிகளில் எவை எல்லாம் அனைத்து சட்ட அமைப்புகளுக்கும் பொதுவாகிறதோ அவைகளே பொதுவான சட்டவியல்.

குறிப்பிட்ட சட்டவியல் (Particular Jurisprudence) தொகு

குறிப்பிட்ட சட்ட அமைப்புகளின் சிறப்பம்சம் பற்றியதாகும் குறிப்பிட்ட சட்டவியல். சட்டத்தின் வளர்ச்சியில் காரணக் காரியங்கள், அறநெறி, அனுபவ அறிவு போன்ற சில அடிப்படைக் காரணிகள் முக்கியமானதாக கருதப்படுகிறது.

சட்டவியலின் கருத்தியங்கள் (Schools of Jurisprudence) தொகு

சால்மண்டின் புரிதலின் படி "சட்டவியல் சட்டத்தின் கோட்பாடு மற்றும் தத்துவத்தின் புலனறிவால் மூன்று கிளைகளாகப் பிரிக்கப்படுகிறது". ஒவ்வொரு கருத்தியங்களின் சட்டவியலாளர்களிடம் சட்டத்தின் குணங்களைப் பற்றி காரணக்காரியங்களை வைத்து ஏற்படும் சில அடிப்படை ஊகங்களே சட்டவியல் கருத்தியங்களின் இந்த பிரிவினைக்கு காரணம்.

பகுப்பாய்வு கருத்தியம் (Analytical School) தொகு

ஜெர்மீ பெந்தம் மற்றும் ஜான் ஆஸ்டின் ஆகியோரே இந்த கருத்தியத்தின் முன்னவர்கள். இந்த கருத்தியத்தின் பார்வையில் " சட்டம் என்றால் ஓர் இறைமாட்சியின் கட்டளையாகும்". இந்த சட்டவியல் இயற்றியச் சட்டங்களே மரபைவிட மேலானது என்றும், அந்த இயற்றியச் சட்டங்கள் இறைமாட்சியின் கட்டளையின் விளைவாகும் என்று பலமாக கருதுகிறது. இது தேச சட்டத்தை (Civil Law) வரலாற்று தேற்றத்தின் படியல்லாமல் பகுப்பாய்வு செய்கிறது. தேச சட்டத்தின் மீதே இது கவனம் செலுத்துகிறது. சட்டப்பூர்வ கடப்பாடு கொள்கைகளை புலனாய்வு செய்கிறது, இந்த கருத்தியத்தின்படி "சட்டம் உருவாக்கப்படுகிறது". இந்த சட்டவியல் கவர்ச்சிகரமான புதிய பொருள்விளக்கத்திற்கு முக்கியத்துவம் தருகிறது.

வரலாற்று கருத்தியம் (Historical School) தொகு

சேவீங்நி மற்றும் புச்தா ஆகியோரே இந்த கருத்தியத்தின் முன்னவர்கள். இந்த கருத்தியத்தின் பார்வையில் "சட்டம் என்றால் மாந்தர்களின் மனோதத்துவமாகும், அதாவது மரபு. இந்த கருத்திய சட்டவியல் மரபே இயற்றுச் சட்டத்திற்கு மேலானது என்று பலமாக கருதுகிறது. இது சட்டம் என்பதை வரலாற்று காரணங்கள் மற்றும் சூல்நிலைகளின் விளைவு மற்றும் மாந்தர்களின் மனோதத்துவம் என்பவைகளை முதன்மை கொள்கையாக கொண்டு பகுப்பாய்வு செய்கிறது. இது சட்டங்களின் அணைத்து கிளைகளுக்கும் முக்கியத்துவம் தருகிறது. இந்த கருத்தியத்தின் படி " சட்டம் கண்டறியப்படுகிறது".

தத்துவிய கருத்தியம் (Philosophical School) தொகு

தற்போதைய மற்றும் முந்தைய நடைமுறையில் இருந்த சட்டங்களுடன் தொடர்புற்றதல்ல தத்துவியக் கருத்தியம். நெறிக்கோட்பாட்டின் படி நீதியைப்பற்றிய எண்ணம் மேம்படுவதற்கு இது ஊக்கம் அளிக்கிறது. இது உயர் கொள்கை சட்ட அமைப்பை உருவாக்க முக்கியதத்துவம் தருகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் இயற்கை சட்டத்தில் நம்பிக்கை கொண்டிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இது சட்டத்தொகுப்பு மற்றும் இயற்றச் சட்டத்தின் மூலம் சீரான சட்ட அமைப்பை உருவாக்க முயற்சிக்கிறது.

சட்டவியலின் கருப்பொருள் தொகு

நெறி, நீதி, நாடு ஆகியவையே சட்டவியலின் கருப்பொருளாக உள்ளது.

நெறி (Law in General) தொகு

"நெறி, அதன் பரந்த மற்றும் மிகப்பொதுவான புலனறிவில் நடவடிக்கைக்கான விதிமுறையைக் குறிக்கிறது. மற்றும் பகுத்தறிவானதோ அல்லாததோ, உயிரோட்டமானதோ அல்லாததோ ஏதுவாயினும் அணைத்துவிதமான நடவடிக்கைகளுக்கும் பாகுபாடின்றி பொருந்தக்கூடியதாகும்" என்று ப்ளாக்ஸ்டோண் (Blackstone) வரையறுக்கிறார் நெறியை. சால்மண்ட் (Salmond) ன் கூற்றின்படி, இந்த வரையறை நீதிமன்றத்தில் நிர்வகிக்கப்படும் சட்டத்தை மட்டும் உட்கொள்ளவில்லை, புவியீர்ப்பு நெறி, இலக்கண நெறி, இசை நெறி போன்ற பலவிதமான மற்ற நெறிகளையும் உட்படுத்தியதாகும். சால்மண்ட் இந்த வரையறையின் கீழ் சட்டத்தை இயல் நெறி, நுட்ப நெறி, மரபு நெறி, வழக்க நெறி, தேசங்களுக்கிடையான நெறி, இயற்கை நெறி, தேசத்திற்கான நெறி என வகைப்படுத்துகிறார்.

இயல் நெறி (Physical Law) : இது அறிவியல் விதியாகும். அதாவது புவியீர்ப்பு நெறி போன்ற இயற்கை செயல்பாட்டை கவனிப்பதனால் இது உட்கொள்ப்படுகிறது. மனிதனால் உருவாக்கப்படும் நெறிகள் நேரத்திற்கு நேரம் மாறுபட்டாலும் இத்தகைய நெறிகள் மாறுவதில்லை.

நுட்ப நெறி (Technical Law) : குறிப்பிட்ட தாக்கத்தை அடைவதற்கான நெறிமுறைகளே இத்தகைய நெறிகள். இரண்டுடன் இரண்டை கூட்டினால் நான்கு என்பது போல. நாம் தீர்மானித்த தாக்கத்தை அடைவதற்கு நாம் என்ன செய்யவேண்டும் எனக்கூறுவதாகும் இது. எடுத்துக்காட்டு இசை நெறி.

மரபிய நெறி (Customary Law) : ஒரு சமுதாயத்தினரால் கடைபிடிக்கப்படும் மரபுகள்

வழக்க நெறி (Conventional Law) : தம்மில்தம்மில் தொடர்பிற்கான நிபந்தனைகளுடன் தொடர்புற்றதாகும் இது. மற்றும் இதை ஏற்றுக்கொண்ட யாவருக்கும் இது பாதகமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, சங்கத்திலோ, கூட்டு நிறுவனத்திலோ உறுப்பினர்களால் உருவாக்கப்படும் நெறிமுறைகளும் துணைச் சட்டங்களுமாகும். மற்றும் அத்தகைய நெறிகள் இதில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் பாதகமாகும்.

தேசங்களுக்கிடையான நெறி (International law) : இதுவும் வழக்க நெறியின் கீழ் வருவதாகும். நாடுகளால் தங்களுக்கிடையான நடத்தை விதிமுறைகளாக ஏற்றுக்கொள்பவையாகும் இது.

கட்டளை நெறி (imperative law) : மேலாளர்களால் கொண்டுவரப்படும் நடத்தை நெறிமுறைகள், அது பின்பற்றப்படாத சூழ்நிலையில் அமலாக்கம் செய்யப்படுகிறது. இத்தகைய நெறிகள் பொதுமக்களின் ஒத்துழைப்போடு நடப்பிலாக்கப்படுகிறது. ஆனால் நீதிமன்றத்தால் அல்ல.

அற நெறி (Natural law) : பொதுவான உரிமைகள் அல்லது நீதி எல்லாத்தரத்தில்பட்ட மானிடர்களுக்கும் கிடைப்பதற்கான அமைப்பு முறையைப் பொதுவாக குறிப்பிடுவதற்கு பயன்படும் கூற்றாகும் "அற அல்லது இயற்கை நெறி".

தேச நெறி (Civil Law) : ஒரு நாட்டின் குடிமக்களுக்கு பாதகமாகும் அணைத்து நெறிகளும் ஆகும் இது. இவைகளே நீதிமன்றத்தில் நிர்வகிக்கப்படும் நெறிகளாகும். இதுவே சட்டவியலில் "சட்டம்" என்றச் சொல்லாக அறியப்படுகிறது. சால்மண்ட் "நாட்டின் அல்லது நிலத்தின் சட்டம், வழக்கறிஞர் சட்டம், நீதிமன்றச் சட்டம்" என வரையறுக்கிறார்.

நீதி, நிலைத்தன்மை மற்றும் அமைதி ஆகியவற்றை பேணவும், ஒழுங்கான மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்துவதுமே சட்டத்தின் முக்கிய தேவையும் பணியும் ஆகும்.

நீதி (Justice) தொகு

நாட்டின் முக்கிய பணிகளில் ஒன்று நீதி நிர்வாகமாகும். சட்டம் நீதிக்கான ஒரு கருவியாகும். எந்த ஒரு நவீன நாட்டிலும் அதன் நீதிப் பணிகளுக்கான வழிகாட்டலுக்கு அதிகாரப்படுத்தப்பட்ட விதிமுறைகள் காணப்படுகிறது. சட்டத்தின் படியே நீதி வழங்கப்படுகிறது என்பதனால் நீதிமன்றங்களே (court of justice) சட்டமன்றங்களாகவும் (court of law) உள்ளன. சட்டத்தின் இயல்போடு நீதி நிர்வாக பயன்பாட்டில் நீதி, அற நீதி (Natural or Moral Justice) என்றும் சட்ட நீதி (Legal Justice) என்றும் பிரிக்கப்படுகிறது. சட்ட நீதி நாட்டின் நேர்மறை விதிகளினால் வழங்கப்படும் நீதியைக் குறிக்கும் மற்றும் நீதி அறநெறியின் படி வழங்கப்படுகிறதோ அப்போது அற நீதி எழுகிறது. இந்த இரண்டில், சட்ட நீதியே அற நீதியைவிட மேம்பட்டதாகும்.

நாடு (The State) தொகு

சட்டம் என்ற எண்ணத்தின் ஒரு முனை நீதியோசனையுடனும் மறுமுனை நாட்டின் அமைப்பு முறையுடனும் இணைக்கப்பட்டுள்ளது. ஆகையால், சட்ட இயல்பின் பகுப்பாய்வில் கண்டிப்பாக நாட்டின் ஒழுங்கமைப்பின் மீதான ஆராய்தல் உட்படுகிறது. "நாடு" என்று அறியப்படும் ஓர் அமைப்பில் சட்டத்தின் பங்கு எந்த ஒரு நவீன சமூகத்திலும் முன்னதாகவே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. நாடு என்பதை சரியாக வரையறுத்துக் கூறுவது கடினமான ஒன்றாகும்.

ஹோல்லாண்ட் "ஒரு வாழ்விடமாக ஏராளமான மனித இனத்தவரால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் ஆட்சிநிலம்" என வரையறை செய்கிறார். பின்வருபவைகளே ஒரு நாட்டில் உட்படுவதாகும்.

ஓர் ஆட்சிநிலம் : பூமியின் ஏதேனும் ஒரு நிலப்பகுதியின் கட்டுப்பாடு ஒரு நாட்டிற்கு தேவையாகும். சால்மண்டின் கூற்றின்படி நவீன காலத்தில் ஆட்சிநிலமின்றி ஒரு நாடு அமைவது அரிதாகும் என்பதனால் ஆட்சிநிலத்தை நாட்டின் முக்கிய கூறாக கருத வேண்டாம்.

பெரும் ஜனத்தொகை : ஒரு பகுதி நாடு என அழைக்கப்பட வேண்டுமானால் அங்கு ஒரு பெரும் ஜனத்தொகை காணப்படவேண்டும்.

நிலையான கட்டமைப்பு : நாடோன்றுக்கு கண்டிப்பாக நிலையான கட்டமைப்பு வேண்டியதாகும். ஜனங்களின் செயல்பாட்டை ஒருமைப்படுத்தவும், அவர்கள் நடைமுறைப்படுத்துவதை மையப்படுத்துவதற்கும் இது முக்கியமாகும்.

ஓர் அரசு : நடப்பிலாக்கவும், கட்டுப்படுத்தவும், நாட்டின் எந்த ஒரு பணியையும் ஆற்றவும் நாட்டின் அதிகாரப்படுத்தப்பட்ட அமைப்பே ஓர் அரசு என அழைக்கப்படுகிறது. சட்டமியற்றகம், ஆட்சியகம் மற்றும் நீதியகம் ஆகியனவே நாட்டின் செயல்பாட்டின் முக்கிய கிளைகளாகும்.

சட்டத்திற்கான மூலாதாரம் (Sources of Law) தொகு

சட்டத்திற்கான மூலாதாரங்கள் சட்டபூர்வ மூலாதாரம் அல்லது வரலாற்று மூலாதாரம் என வகைப்படுத்தப்படுகிறது. சட்டபூர்வ மூலாதாரங்கள் அதிகாரபூர்வமானதும், வரலாற்றிய மூலாதாரங்கள் அதிகாரபூர்வமற்றதும் ஆகும். அதேபோன்று சட்டவியலில் நம்முடைய கவணம சட்டபூர்வ மூலாதாரங்களிடமே இருக்கிறது. சால்மண்ட் (Salmond) "நீதியகத்தால் அங்கிகரிக்கப்பட்டு நிச்சயிக்கப்படும் எந்தவொரு சங்கதியும், சட்டத்தின் தாக்கத்தைப் பெற்றதாக ஏற்றுக்கொள்ளப்படும் எந்த ஒரு விதிமுறையும்" சட்டத்தின் ஒரு மூலாதாரம் என வரையறுக்கிறார்.

மரபு (Custom) தொகு

மரபு முக்கிய சட்டாதாரம் ஆகும். இது ஜனங்களால் சீராக தாமாகவே செயல்படுவதற்காக கடைபிடிக்கப்படும் விதிமுறைகளாகும். தலைமுறையினருக்காக சமுதாயத்தினரால் அங்கிகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும் இது. உண்மையான சமூக வாழ்க்கையில் இருந்துள்ள நடத்தைக் கொள்கையாகும் இது. மரபியம் எல்லாச் சட்டத்திற்கும் பழமையான ஆதாரமாகும். பழங்கால இந்து சட்டத்தில் திருமணம் தொடர்பாக இருந்து வந்த ஒரு மரபாகும் "சப்தபதி" (ஏழுவகை உறுதியெடுப்பு). சப்தபதி என்ற சடங்கு நிறைவேறுவதின் பொறுத்தே திருமணம் செல்லும் என உறுதி செய்யப்படுகிறது.

சட்டமியற்றம் (legislation) தொகு

ஆங்கில வார்த்தையான லெஜிஸ்லேஷன் (legislation) எந்த சட்ட ஆதாரம் ஒரு தகுதியான அதிகார அமைப்பினால் சட்ட விதிமுறைகளின் அறிவிப்பாகிறதோ அது எனப் பொருள்படும். இந்த வார்த்தை அணைத்துவிதமான சட்ட உருவாக்கத்தையும் உட்படுத்துவதற்கு பரந்த நோக்கில் சில நேரங்களில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது சட்டமாக்கம் எனும் பொருளில். சட்டமியற்றகத்தினாலோ அல்லது நீதியகத்தினாலோ எதுவாயினும் எந்தவொரு சட்ட உருவாக்கமும் சட்டமாக்கம் ஆகிறது. இது நேரடியானதாகவோ மறைமுகமானதாகவோ இருக்கிறது. மறைமுக சட்டமாக்கம் சட்ட உருவாக்கத்திற்கானதாக அல்லாமல் மற்றைய பரிமாற்றத்தில் மறைமுகமாக தோன்றுவதாகும். சட்டமியற்றகத்தினால் ஆன நியமம் நேரடி சட்டமாக்கம் ஆகும், மற்றும் நீதியக தீர்மானங்கள் மறைமுக சட்டமாக்கம் ஆகும். ஆனால் சட்டத்தின் கடுத்த நோக்கில் இந்த லெஜிஸ்லேஷன் (legislation) என்ற வார்த்தை சட்டமியற்றம் என்றே புரிந்துகொள்ளப்படுகிறது. சட்டமியற்றம் என்றால் சட்ட உருவாக்கத்திற்குகான சட்டமியற்றத்தின் எந்தவொரு செயல்பாடும் ஆகும். சட்டமியற்றம் உச்சநிலையானதோ அல்லது துணைநிலையானதாகவோ இருக்கலாம். சட்டமியற்றத்தை ஆதாரமாகக் கொண்ட சட்டங்களை மிகச் சரியாக இயற்றப்பட்ட விதி (enacted law) அல்லது எழுத்துருச் சட்டம் என அழைக்கலாம். மற்றும் மற்ற அணைத்து சட்டங்களும் இயற்றப்படா விதி அல்லது பொதுச் சட்டம் ஆகும்.

முன்தீர்ப்பியநெறி (precedent) தொகு

முன்தீர்ப்பியநெறி (Stare decisis or precedent) என்றால் முந்தைய தீர்ப்பாகும். ஒரு நீதியக தீர்மானமான இதனில் கொள்கைகள் காணப்படும். முன்தீர்ப்பியநெறி ஆங்கில சட்டத்தில் மிகப்பெரிய முக்கியத்துவத்தை பெறுகிறது. இந்திய அரசியல் அமைப்பின் உறுப்பு 141-ன் படி உச்சநீதிமன்றத்தின் முன்தீர்ப்பியநெறி இயற்றப்பட்ட சட்டத்தின் தாக்கத்தை பெற்ற சட்டமாகும் எனக் கூறுகிறது.

சட்டத்தின் வகைப்பாடுகள் (Classification of Law) தொகு

காலக் காலங்களில் சட்டம் வகைப்படுத்தப்பட்டு வந்துள்ளது. ரோமானிய சட்டவியலாளர்கள் சட்டத்தை வகைப்படுத்த முயற்சி செய்துள்ளனர். இந்து சட்டத்தை ஏற்படுத்தி தந்தவர்கள் சட்டத்தை (வியவகார) பதினெட்டு தலைப்புகளாக தந்துள்ளனர். அவர்கள் உரிமையியல் சட்டத்திற்கும் (civil law) குற்றவியல் சட்டத்திற்கும் (criminal law) இடையான வேறுபாட்டை உருவாக்கியுள்ளனர், மேலும் அவர்கள் குற்றவியல் சட்டத்தை வேறுப்பலத் தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தியுள்ளர். சட்டத்தைப் பற்றிய எந்தவொரு வகைப்பாடும் நிரந்தரமானதாக இருப்பதில்லை. ஒவ்வொரு வகைப்பாட்டிலும் சட்டம் வகைப்படுத்தப்பட்ட காலத்தில் அந்தச் சட்டம் எப்படி இருந்தது என்பதை பொருத்து அமைந்திருந்தது. மாறுபட்ட இடங்களிலும் காலங்களிலும் ஜனங்களின் தேவைக்கேற்ப சட்டத்தை கடைப்பிடிப்பதிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. ஆகையால், சட்டத்தின் இயல்பும் அதன் வடிவமைப்பும் தொடர்ந்து மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக புதிய வகைப்படுத்தல்களும் தேவைப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் பயன்படுத்தப்படும் வகைப்பாடு மற்றொரு சமுதாயத்தில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில்லை. சட்டங்களை வேறுபடுத்திக் காட்டுவது தேளிவுடையதாக இருக்கும் என்பதில்லை.

தேசங்களுக்கிடையான சட்டம் மற்றும் நாட்டு சட்டம் தொகு

சட்டம் அதன் பரந்த பார்வையில் இரண்டு வகைகளாக பிரிக்கப்படலாம்: தேசங்களுக்கிடையான சட்டம் (International law) என்றும் நாட்டு சட்டம் (municipal law) என்றும்.

தேசங்களுக்கிடையான சட்டம்

எத்தகைய தேசங்களுக்கிடையான நேறியை கோரும் போதும் அதற்கு எதிராக எழும் எதிப்புகளை தேசங்களுக்கிடையான சட்டம் என்று அழைக்கலாம். இது இப்போது ஒரு சட்டமாக மட்டும் அல்லாது, சட்டத்தின் மிக முக்கிய கிளையாகவும் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. தேசங்களுக்கிடையான சட்டம் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது: தேசங்களுக்கிடையான பொதுவுடமை சட்டம் (public international law) மற்றும் தேசங்களுக்கிடையான தனியார் சட்டம் (private international law). தேசங்களுக்கிடையான பொதுவுடமை சட்டம் என்பது நாடுகள் தம்மிலான தொடர்புகள் நடனத்தை ஆகியன உட்படுத்திய விதிமுறைகளின் கூறு ஆகும். தேசங்களுக்கிடையான தனியார் சட்டம் என்பதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது வெளிநாட்டு மூலங்கள் காணப்படும் வழக்குகள் எத்தகைய விதிமுறைகள் மற்றும் கோட்பாடுகளின் படி தீர்மானிக்கப்பட வேண்டும் என்பது ஆகும். நுணூக்கமான பார்வையில் தேசங்களுக்கிடையான தனியார் சட்டம் என்பது தவறாகும். தேசங்களுக்கிடையான என்றச் சொல் தவறுதலாக இதற்கு நல்கப்பட்டுள்ளது, தேசங்களுக்கிடையான சட்டத்திற்கான எந்தவொரு ஒரு குணத்தையும் பெற்றிருக்கவில்லை. தேசங்களுக்கிடையான தனியார் சட்டம் தனிநபர்களிடம் மட்டுமே பயன்படுத்த முடியும் நாட்டிற்கு பொருந்தாது. தேசங்களுக்கிடையான தனியார் சட்டத்தை நடப்பிலாக்குவது நாட்டுடமை நீதிமன்றங்கள் (municipal courts) ஆகும்

மேலும் வாசிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சட்டவியல்&oldid=3073455" இலிருந்து மீள்விக்கப்பட்டது