சண்டிகர் தலைமைச் செயலகக் கட்டிடம்

சண்டிகர் தலைமைச் செயலகக் கட்டிடம் (Secretariat Building, Chandigarh) 1953 ஆம் ஆண்டு இந்தியாவின் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகர் நகரத்தின் செக்டார் ஒன்றில் அமைந்துள்ளது. சண்டிகர் தலைநகர கட்டிட வளாகத்தில், கட்டிடக்கலை அறிஞரான லெ கொபூசியே [1] [2] [3] என்பவரால் வடிவமைக்கப்பட்ட அரசாங்க கட்டிடத்தின் உட்புறம் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதைத்தவிர அவ்வளாகத்திற்குள் சட்டமன்ற சபை கட்டிடம் மற்றும் உயர் நீதிமன்ற கட்டிடம் முதலான கட்டிடங்களும் நம்பிக்கையின் அடையாளமாகத் திகழும் திறந்த கை நினைவுச்சின்னம், சாலையிலிருந்து சட்டசபையை மறைக்கும் வகையில் கட்டப்பட்ட வடிவியல் மலை மற்றும் சூரிய ஒளியின் பல்வேறு இயக்கக் கோட்பாடுகளை விளக்கும் நிழல்களின் கோபுரம் போன்ற நினைவுச் சின்னங்களும் உள்ளன. 2016 ஆம் ஆண்டில் லெ கொபூசியேவின் கட்டிடம் மற்றும் பல படைப்புகள் யுனெசுகோவின் உலக பாரம்பரிய தளங்களாக அறிவிக்கப்பட்டன. [4][5][6]

சண்டிகர் தலைமைச் செயலகக் கட்டிடம்
தலைமைசெயலகக் கட்டிட முகப்பு
சண்டிகர் தலைமைச் செயலகக் கட்டிடம் is located in சண்டிகர்
சண்டிகர் தலைமைச் செயலகக் கட்டிடம்
சண்டிகர் -இல் அமைவிடம்
பொதுவான தகவல்கள்
ஆள்கூற்று
நிறைவுற்றது1953
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக் கலைஞர்(கள்)லெ கொபூசியே
அலுவல் பெயர்கட்டிடக்கலை அறிஞரான லெ கொபூசியேவின் நவீனக் கட்டிடக்கலை வடிவமைப்பு
தெரியப்பட்டதுசூலை 17, 2016
உசாவு எண்1321rev

காட்சிக்கூடம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Le Corbusier, Architect, Artist (1887–1965)
  2. "Le Corbusier's Capitol Complex a mess, in dire need of facelift". indianexpress.com.
  3. http://www.indianexpress.com/news/le-corbusiers-capitol-complex-a-mess-in-dire-need-of-facelift/760264/0
  4. "The Architectural Work of Le Corbusier". UNESCO World Heritage Centre (in ஆங்கிலம்). United Nations Educational, Scientific and Cultural Organization. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.
  5. Tile: UNESCO approves all 3 Indian nominations for heritage tag, Publisher: India Today news, Published on: 18 July 2016, Accessed on: 18 July 2016
  6. "Four sites inscribed on UNESCO’s World Heritage List" (in en). whc.unesco.org. UNESCO World Heritage Centre. 15 July 2016. https://whc.unesco.org/en/news/1524. பார்த்த நாள்: 15 July 2016. 

புற இணைப்புகள்

தொகு