சண்முகநாதன் பொறியியல் கல்லூரி

புதுக்கோட்டையிலுள்ள பொறியில் கல்லூரி

சண்முகநாதன் பொறியியல் கல்லூரி என்பது தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரி ஆகும்.

வெளித்தோற்றம்
சண்முகநாதன் பொறியியல் கல்லூரி உள்ளமைப்பு
குறிக்கோள்

அமைவிடம்

தொகு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் அருகே அரசம்பட்டியில் அமைந்துள்ளது. காரைக்குடி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில்​, புதுக்கோட்டையில் இருந்து 15 கிமீ தொலைவிலும்​, காரைக்குடியில்​ இருந்து 25 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. 200 ஹெக்டேர் பரப்பளவில் கல்லூரி அமைந்துள்ளது. ஆண்டிற்கு 500 மாணவர்கள் புதிதாக உள்ளே வருகின்றனர்.

நிர்வாகம்

தொகு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கல்லூரி இயங்குகிறது. 2001 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[1] என்.எ.எ.சி மூலம் இக்கல்லூரிக்கு "பி" தரம் சான்றிதழ் அளிக்கப்பட்டது.[2] இந்நிறுவனத்தின் முதல்வர் முத்துராமு, செயலாளர் விஸ்வநாதன், நிறுவனர் மணிகண்டன் ஆவர்.

துறைகள்

தொகு
  1. மின் மற்றும் மின்னணுவியல்
  2. மின் தகவல் தொடர்பு
  3. தகவல் தொழில்நுட்பம்
  4. இயந்திரப்பொறியில்
  5. தானூர்தி பொறியியல்
  6. கணினி துறை
  7. கட்டிடப்பொறியியல்

போன்ற துறைகளில் கற்பித்தல் நடைபெறுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Shanmuganathan Engineering College" (PDF). www.annauniv.edu. பார்க்கப்பட்ட நாள் 2023-06-03.
  2. "NAAC assessment letter" (PDF). naac.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-06-03.

வெளியிணைப்புகள்

தொகு

கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளம்