சதக்கத்துல்லா அப்பா கல்லூரி
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (Sadakathullah Appa College)[1] என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் அமைந்துள்ள அரசு உதவிபெறும் ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரியானது 1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2][3]
குறிக்கோளுரை | “இறைவா, எனக்கு ஞானத்தை அருள் புரிந்து நல்லோர்களுடன் என்னைச் சேர்ப்பாயாக ” |
---|---|
உருவாக்கம் | 1971 |
தரநிர்ணயம் | A++ (CGPA-3.56/4) |
தலைவர் | ஹாஜி.த.இ.செ. பத்ஹுர் ரப்பானி |
தலைவர் | ஹாஜி வாவு.செய்யது அப்துர் ரஹ்மான் |
முதல்வர் | முனைவர்.சே.மு.அப்துல் காதர் |
அமைவிடம் | ரஹ்மத் நகர், பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் - 627 011 , , |
வளாகம் | பாளையங்கோட்டை |
சேர்ப்பு | மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://sadakath.ac.in |
வரலாறு
தொகுதிருநெல்வேலி மாவட்டத்தில் கணிசமான இஸ்லாமிய மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் உயர்படிப்பிற்காக, இஸ்லாம் மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியின் காரணமாக, புகழ்பெற்ற அரபு அறிஞரான சதக்கத்துல்லாஹ் அப்பா என்பவர் பெயரில் இக்கல்லூரியானது, 1971 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[சான்று தேவை] இக்கல்லூரியின் குறிக்கோள் "இறைவா, எனக்கு அருளும் ஞானமும் தருவாயக" என்பதாகும்.[சான்று தேவை] இக்கல்லூரியானது 40 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு சதக்கத்துல்லாஹ் அப்பா கல்விச் சங்கத்தால் இயங்குகிறது. முதலில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடன் 20 ஆண்டுகளாக இணைக்கப்பட்டது. பின்னர் 1990 ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உருவாகியபோது இப்பல்கலைக்கழக வரம்பின்கீழ் இணைக்கப்பட்டது.
துறைகள்
தொகுஅறிவியல்
- இயற்பியல் துறை
- வேதியியல் துறை
- கணிதத்துறை
இக் கல்லுாியில் கணிதத்துறை 1972 ஆம் ஆண்டு முதன் முதலாக தொடங்கப்பட்டது. மாணவ மாணவிகளின் கணிதத்தின் மேல் கொண்ட ஆர்வத்தின் காரணமாக 2007-2008 ஆம் ஆண்டு இத்துறையில் முதுகலை கணிதம் ஆரம்பம் செய்யப்பட்டது.
விலங்கியல் துறை 1973ஆம் ஆண்டு 48 மாணவர்களுடன் தொடங்கப்பட்டது. பட்டப்படிப்பை தவிர, பட்டு வளர்ச்சியில் சான்றிதழ், பட்டயம் மற்றும் மேம்பட்ட பட்டயப் படிப்புகளும் இத்துறையில் வழங்கப்படுகின்றன.
துறை மிகவும் உற்சாகமான மற்றும் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களைக் கொண்டுசெயல்பட்டு வருகிறது மேலும் பயன்பாட்டு ஊட்டச்சத்து மற்றும் பொது சுகாதாரம் மற்றும் தாவரவியல் ஆகிய பாடங்களையும் இணை பாடங்களாக இத்துறை வழங்கிவருகிறது.
இத்துறை 2017-2018 ஆம் கல்வியாண்டு முதல் முதுகலை விலங்கியல் பாடங்களை வழங்கும் முதுகலை துறையாக 2017 ஆம் ஆண்டில் முதுகலை துறையாக தரம் உயர்த்தப்பட்டது.
- கணினி அறிவியல் துறை
- நுண்ணுயிரியல் துறை
- உடற்கல்வி துறை
- வாழ்க்கை அறிவியல்துறை
- ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ பத்தியம் துறை
கலை மற்றும் வணிகம்
- தமிழ் துறை
- அரபி துறை
- ஆங்கிலத் துறை
- வரலாற்று துறை
- பொருளியல் துறை
- வணிகவியல் துறை [1]
- வணிக நிர்வாகவியல் துறை
- வணிகவியல் துறை (நிதியியல்)
- வணிகவியல் துறை (ஹனர்ச்)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sadakathullah Appa College, Palayamkottai, Tirunelveli, Tamilnadu, India". sadakath.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2018-09-02.
- ↑ "sadakathullah appa college about".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-07. பார்க்கப்பட்ட நாள் 2018-09-03.