சதரூபை
சதரூபை என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் பிரம்மா தோற்றுவித்த முதல் பெண்மணி ஆவார். இவர் சுவாயம்பு மனு என்பவரை மணந்து கொண்டார்.
சுவாயம்பு மனு சதரூபை தம்பதிகளுக்கு பிரியவிரதன், உத்தானபாதன் என்னும் இரு மகன்களும், பிரசூதி, ஆகுதி என்ற இரு மகள்களும் பிறந்தனர். இவர்களில் பிரசூதிக்கு பிரம்மாவின் மானசீக குமாரனும், பிரஜாபதியுமான தட்சனை மணம் செய்வித்தார்கள். ஆகுதிக்கு ருசி என்பவரை மணம் செய்விதிதார்கள்.
ருசி மற்றும் ஆகுதி தம்பதிகளுக்கு யக்கியன் என்ற மகனும், தட்சினை என்ற மகளும் பிறந்தார்கள். [1]
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்களும் குறிப்புகளும்
தொகு- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=10876 விஷ்ணு புராணம் தினமலர் கோயில்கள்