சதர்ன் படிவு

சதர்ன் படிவு (Southern blot) என்னும் செய்நுட்பம் மூலக்கூற்று உயிரியலில், குறிப்பிட்ட ஒரு டி.என்.ஏ உள்வரிசை, தேர்வுக்காக எடுத்துக்கொள்ளும் ஒரு டி.என்.ஏ-யில் உள்ளதா என கண்டுபிடிக்க வழக்கமாகப் பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும். "பிளாட்" என்பது இங்கு டி.என்.ஏ-வை சவ்வுப்படலத்தில் பெயர்த்து இடுதலைக் குறிக்கின்றது.

இம்முறையை பிரித்தானிய உயிரியல் அறிஞர் எட்வின் சதர்ன் (Edvin Southern) என்பவர் அறிமுகபடுத்தியதால் அவரின் பெயரே இம்முறைக்கு சூட்டப்பட்டது. இம்முறை டி.என்.ஏ க்களை அறிவதற்குப் பெரிதும் பயன்படுகிறது. ஆர்.என்.ஏ, புரதங்களை காணும் முறைக்கு இவரின் பெயர் குறிக்கும் பொருளைப் பின்பற்றி முறையே நார்தன் பிளாட் (வடக்கு பிளாட்), வெசுட்டர்ன் பிளாட்(மேற்கு பிளாட்) என பெயர் (Northern, Western blot) இடப்பட்டுள்ளது. இம்முறையில் கதிரியக்க ஓரிடத்தானாகிய (Isotope) பாசுபரசு (32P) பயன்படுத்துவதால் தற்பொழுது பெரும்பாலான ஆய்வாளர்கள் இம்முறையும், நார்தர்ன் பிளாட் முறையும் பின்பற்றுவதில்லை. இதற்கு மாறாக நேரடியாக புரத அளவை வெசுட்டர்ன் படிவு மூலம் காண்கின்றனர் அல்லது அளவுகாண் பி.சி.ஆர். (qRT-PCR or quantification PCR) என்ற முறை மூலம் டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ க்களின் அளவுகளை அறிகின்றனர்.

இம்முறைக்கு டி.என்.ஏ கூழ்ம மின்புல தூள்நகர்ச்சி என்னும் நுட்பம் இன்றியமையாதது. நைலான் அல்லது நைட்ரோ செல்லுலோசு (Nylon or nitrocellulose membrane) என்னும் சவ்வு பயன்படுத்தப்படுகின்றது. பொதுவாக நைலலன் பல சிறப்புகளை கொண்டுள்ளதால், ஆய்வாளர்கள் நைலானையே தேர்ந்தெடுக்கிறார்கள் (இவை குறைந்த அளவு நேர்மின்மம் கொண்டும், மேலும் சூடாக்கும் பொழுது உடையாமலும் இருக்கும்).

பயன்கள்

தொகு
  • படிவாக்கம் செய்யப்பட அல்லது மரபணு மாற்றப்பட்ட உயிர் இனத்தில் இருப்பது நாம் விரும்பும் மரபணுவா? இல்லையா? என்பதை காணலாம்
  • ஒரு குறிபிட்ட டி.என்.ஏ, தீ நுண்மம் வகைபாட்டியலை அறியலாம். மேலும் டி.என்.ஏ, தீ நுண்மத்தின் டி,என்.ஏ-யின் அடர்வை காணலாம்.
  • மரபணு மாற்றப்பட்ட உயிரினத்தில் உள்ள, நாம் செலுத்திய மரபணு நகல் எண்ணிக்கை (gene copy number) அறியலாம்
  • ஒரு மரபணு ஒத்த புள்ளியா (homozygous) அல்லது ஒத்தற்ற புள்ளியா (heterozygous) என்பதை அறியலாம்.

காணும் முறை

தொகு
  • மேலே காணும் பயன்களை பொருந்து இம்முறை தொடங்கப்படும். தீ நுண்மங்கள் என்றால், அவற்றின் டி.என். எ கள் பிரித்தெடுக்கப்பட்டு அதனின் அடர்வு காணப்படவேண்டும். மரபணு மாற்றப்பட்ட உயிர் என்றால், அவற்றின் டி.என்.எ கட்டுள்ள நொதிகளால் செரிக்கப்பட்டு , உள்-செலுத்தப்பட்ட டி.என். எ வெளியேற்றப்படும். மரபணு நகல் எண்ணிக்கை அறிய வேண்டும் என்றால், உள்-செலுத்தப்பட்ட டி.என். எ வில் இருந்து ஒரு கட்டுள்ள நொதியும் மற்றொரு நொதி உயிரினத்தின் நிறப்புரியில் (chromosome) இருந்து தேர்ந்த்டுக்கபடவேண்டும்.
  • செறிக்கப்பட்ட அல்லது தீ நுண்மத்தின் டி.என்.எ கள், டி.என்.எ கூழ்ம மின்புல தூள்நகர்ச்சி மூலம் மின்னோட்டம் இடப்பட்டு நகர்த்தப்படும்.
  • கூழ்மம், காடியால் (Acid, HCL) கழுவப்படும் போது, டி.என்.எ கள் சிறு துண்டங்களாக (depurination) மாற்றப்படும். இவைகள் மிக நேர்த்தியாக சவ்விர்க்கு மாற்றப்படுவது எளிதாகும்.
  • பின் கூழ்மம் கார கரைசலில் (NaOH) இடப்படும் போது, ஆர்.என்.எ க்களின் மாசுக்கள் இருந்தால் அவைகள் நீக்கப்படும்.
  • பின் டி.என்.எ க்கள் கூழ்மத்தில் இருந்து நைலோன் அல்லது நைட்ரோ செல்லுலோசு (Nylon or nitrocellulose membrane) என்னும் சவ்விர்க்கு ஊடு பரவல் மூலம் (capillary reaction) மாற்றப்படும். நைலோன் மாற்றப்பட்ட டி.என்.எ, புற ஊதா கதிர்களில் காட்டப்படும் போது, டி.என்.எ. இறுக்கமாக நைலோனில் பிணையப்படும்.
  • பின் இவைகள் இடைமம் மூலம் கழுவப்படும் (pre-hybridization, hybridization ) . இதனிடையில் கிலிநொவ் துண்டம் (Klenow fragment, a deletion portion of E.coli DNA Polymarase) என்னும் எசரிக்கியா கோலை டி.என்.எ பாலிமரசு (மாற்றப்பட்ட) மூலம், நாம் காண விரும்பும் மரபணுவின் இழை வரிசையில் கதிரியக்க P32 உள் சேர்க்கப்படும். இவ்வினையின் போது dNTPs (இவைகளில் ஒன்று கதிரியக்க துகள் இருக்கும்), இடைமம் (buffer) மற்றும் கிலிநொவ் துண்டம் இடப்பட்டு, ஒரு மணி நேரம் 37C வைக்கப்படவேண்டும். பின் இவைகள் சில சாயங்களோடு (orange dye) தூய்மையாக்கப்படும்.
  • தூய்மையாக்கப்பட்ட கிலிநொவ் துண்டத்தால் பெருக்கப்பட்ட மரபணு, நைலோன் சவ்வில் உள்ள டி.என்.எ வோடு சேர்வதற்கு இடைமத்தோடு இடப்படும். நாம் விரும்பும் மரபணுவோ அல்லது டி.என்.எ வோ இருந்தால், கதிரியக்கம் சேர்க்கப்பட்ட டி.என்.எ வின் பகுதி, நேரெதிர் இழையான சவ்வின் டி.என்.எவோடு இணையும்.
  • பின் இவைகள் X-Ray சுளுளில் காட்டப்பட்டு, முடிவுகளை அறியலாம்.

இவற்றையும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதர்ன்_படிவு&oldid=2742749" இலிருந்து மீள்விக்கப்பட்டது