எசரிக்கியா கோலை

எசரிக்கியா கோலை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
தொகுதி:
பிரோடோபாக்டீரியா
வகுப்பு:
காமா-பிரோடோபாக்டீரியா
வரிசை:
எண்டீரோபாக்டீரியல்ஸ்
குடும்பம்:
எண்டீரோபாக்டீரியாசே
பேரினம்:
எஷ்சரிச்சியா
இனம்:
ஈ. கோலை
இருசொற் பெயரீடு
Escherichia coli
(மிகுலா]] 1895)
காஸ்டலெனி மற்றும் சால்மர்ஸ் 1919

எசரிக்கியா கோலை (Escherichia coli, எஷரிக்கியா கோலை, பொதுவாக ஈ. கோலை (E. coli, இ. கோலை, எ. கோலை, உச்சரிப்பு /ˌɛʃɪˈrɪkiə ˈkoʊlaɪ/) என்பது சூட்டுக்குருதியுடைய உயிரினங்களின் (எண்டோதெர்ம்ஸ்) சிறுகுடலில் காணப்படும் ஒரு கிராம் நெகட்டிவ் கோல-வடிவமுள்ள பாக்டீரியமாகும். பெரும்பாலான ஈ.கோலை விகாரங்கள் தீங்கற்றவைகளாக இருக்கின்றன. ஆனால் ஓ157:எச்7 போன்ற செரோடைப் மனிதர்களில் உணவு நச்சேற்றலை உண்டாக்கி, அவ்வபோது உற்பத்திப்பொருள் திரும்பப் பெறுதலுக்கும் காரணமாயிருந்திருக்கின்றன[1][2]. தீங்கற்ற விகாரங்கள் குடலின் வழக்கமான தாவர வர்க்கமாயிருந்து, தன்னுடைய ஊட்டுயிருக்கு வைட்டமின் கே2 உற்பத்தி செய்து அவற்றிற்கு பலனும் அளிக்கின்றன.[3] மேலும் குடலுக்குள் நோயுண்டாக்கும் பாக்டீரியா வளர்வதையும் தடுக்கின்றது[4][5].

ஈ. கோலை எப்போதும் குடலில் மட்டும் வாழ்வதில்லை. குறுகிய காலங்களுக்கு அவை மனித உடலுக்கு வெளியே முடிவதால், சுற்றுச்சூழல் மாதிரிகளில் மல மாசு ஏற்பட்டிருக்கின்றதா என்று சோதிக்க இவை ஏற்ற சுட்டிக்காட்டி உயிரினமாக விளங்குகின்றன.[6][7]. இந்த பாக்டீரியாவானது எளிதாக வளர்க்கப்படக்கூடியதும் ஒரு அனுபிறப்பு முறையில் எளிதாக மாற்றியமைக்கக் கூடியதும் இரட்டிக்கப்படக்கூடியதும் ஆகும். இத்தகைய குணாதிசயங்களினால் இந்த பாக்டீரியாவானது ஆய்வுக்கு மிகவும் சிறந்த முதல் நிலை மாதிரி உயிரினமாகவும், உயிரித்தொழில்நுட்பத்திலும் நுண்ணுயிரியலிலும் ஒரு முக்கியமான சிறப்பினமாக திகழ்கிறது.

ஈ. கோலை யானது செருமன் நாட்டு குழந்தை நல மருத்துவரும் நுண்ணுயிரியல் வல்லுனருமான தியொடர் எஷ்சரிக் மூலமாக 1885 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது[6]. இப்போது இது காமா-பிரோடோபாக்டீரியாவின் எண்டீரோபாக்டீரியாசே குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது[8].

விகாரங்கள்

தொகு
 
ஈ. கோலையின் அடுத்தடுத்த இரட்டை அணுப்பிளவின் மாதிரி

ஈ.கோலை யின் விகாரமென்பது மற்ற ஈ.கோலை விகாரங்களிலிருந்து வேறுபிரித்துக் காட்டும் தனித்தன்மையுடைய குணாதிசயங்களுடன் அதே இனத்தில் காணப்படும் ஒரு துணை-குழுவாகும். இத்தகைய வித்தியாசங்கள் அவ்வப்போது மூலக்கூறு அளவில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட முடியும்; எனினும், இவை பாக்டீரியமின் உடலியல் அல்லது வாழ்க்கைப்பருவத்தில் வித்தியாசங்களை ஏற்படுத்தலாம். உதாரணத்திற்கு, ஒரு விகாரம் நோயுண்டாக்கும் ஆற்றலைப் பெறலாம், ஒரு தனிப்பட்ட கார்பன் மூலத்தை உபயோகிக்கும் ஆற்றலைப் பெறலாம், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கூற்றை அடையலாம் அல்லது நுண்ணுயிரெதிர்ப்பு பொருட்களை எதிர்க்கும் ஆற்றலைப் பெறலாம். ஈ. கோலை யின் பல்வேறு விகாரங்கள் அவ்வப்போது ஊட்டுயிர்-சார்ந்தவைகளாய் இருக்கின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாதிரிகள் மல மாசின் மூலத்தை நிர்ணயிக்க உதவுகின்றன.[6][7] உதாரணத்திற்கு, ஒரு தண்ணீர் மாதிரியில் எவ்விதமான ஈ.கோலை விகாரங்கள் காணப்படும் என்பதை அறிந்தால், அந்த மாசு ஒரு மனித மூலத்திலிருந்து தோன்றியதா, பாலூட்டியிலிருந்து தோன்றியதா அல்லது பறவையிலிருந்து தோன்றியதா என்று ஊகிக்க உதவும்.

புதிய ஈ.கோலை விகாரங்கள் இயற்கையான உயிரியல் சார்ந்த முறையான சடுதி மாற்றத்தின் (ம்யூடேஷன்) மூலமாகவும் கிடைநிலை மரபணு மாற்றம் மூலமாக தோன்றுகின்றன[9]. சில விகாரங்கள் ஒரு ஊட்டுயிர் மிருகத்திற்கு தீங்கு விளைவிக்கும் குணாதிசயங்களைத் தோற்றுவிக்கின்றன. இவ்வகை நஞ்சார்ந்த விகாரங்கள் ஆரோக்கியமான பெரியவர்களின் மிகுந்த அசௌகரியத்தையளிக்கும் பேதித் தாக்கத்தை உண்டாக்குகின்றன. மேலும் இது அவ்வப்போது வளரும் உலகத்திலிருக்கும் குழந்தைகளுக்கு உயிரிழப்பும் உண்டாக்கக் கூடும்.[10] ஓ157:எச்7 போன்ற மேலும் தீவிரமுள்ள நஞ்சார்ந்த விகாரங்கள் வயது முதிர்ந்தவர்களில், சிறாரில் அல்லது நோயெதிர்ப்புத்திறன் பாதிக்கப்பட்டவர்களில் கடுமையான உடல்நலக்குறைவு அல்லது இறப்பை உண்டாக்குகின்றன.[4][10]

உயிரியல் மற்றும் உடல் வேதியியல்

தொகு

ஈ. கோலை கிராம் நெகட்டிவாக இருந்து, காற்றில்லாமல் வாழும் வித்தில்லாததாகும். உயிரணுக்கள் பொதுவாக கோல்-வடிவமாக இருந்து சுமார் 2 மைக்ரோமீட்டர்கள் (μமீ) நீளமும் 0.5 மைக்ரோமீட்டர் விட்டமும், 0.6 – 0.7 μமீ3 செல் கொள்ளளவு உள்ளவைகளாகவும் உள்ளன.[11] இது பல்வகையான தளப்பொருட்களில் வாழ்கிறது. ஈ. கோலை காற்றில்லா நிலைகளில் அமில-கலப்பு நொதித்தலை பயன்படுத்தி லாக்டேட், சக்சினேட், எத்தனால், அசிடேட் மற்றும் காபனீரொக்சைட்டு ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது. அமில-கலப்பு நொதித்தலில் பல தடங்கள் ஐதரசன் வாயுவை உண்டாக்குவதால், இந்த தடங்களில் ஐதரசன் அளவுகள் குறைவாகவே இருக்கவேண்டும். ஈ.கோலை ஹைட்ரஜன் – உட்கொள்ளும் பிராணிகளாகிய மெதனோஜென்கள் அல்லது சல்ஃபேட்-குறைக்கும் பாக்டீரியா போன்றவற்றோடு வாழும்போதும் இவ்வாறே நடைபெறுகிறது.[12]

ஈ.கோலை யின் ஏற்ற வளர்ச்சி நிலை 37°செ (98.6°ஃபே) ஆகும். என்றாலும் ஆய்வுக்கூட விகாரங்கள் 49°செ (120.2°ஃபே) என்ற வெப்பநிலையிலும் பெருக்கமடைகின்றன.[13] வளர்ச்சியானது காற்றுள்ள அல்லது காற்றில்லாத சுவாசத்தினால் ஏற்படுகிறது. இது பல்வேறு ரெடாக்ஸ் ஜோடிகளைக் கொண்டு நடைபெறுகிறது. இதில் பைருவிக் அமிலம், ஃபார்மிக் அமிலம், ஐதரசன் மற்றும் அமினோ அமிலங்கள் ஆகியவற்றின் ஆக்ஸிஜனேற்றம் மற்றும் பிராணவாயு, நைட்ரேட், டைமீதைல் சல்ஃபாக்சைட்டு மற்றும் டிரைமிதலமைன் என் – ஆக்சைடு ஆகிய தளப்பொருட்களின் குறைவும் உட்படும்.[14]

நகரிழைகள் (ஃபலஜெல்லா) உடைய விகாரங்கள் நீந்தக்கூடியவையாகவும் நகரக்கூடியவைகளாகவும் இருக்கின்றன. நகரிழைகள் புறச்சுற்றில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன.[15]

ஈ.கோலை மற்றும் இதற்கு தொடர்புடைய பாக்டீரியா நுண்ணுயிர் இணைதல், குறுக்குக் கடத்துகை அல்லது நிலைமாற்றம் ஆகியவைகளால் டி.என்.ஏவை மாற்றிடம் செய்யும் ஆற்றல் பெற்றுள்ளன. இதனால் மரபியல் பொருளானது தற்போதிருக்கும் கூட்டில் கிடைவாக்காக பரவ முடிகிறது. இந்த செயல்முறையினால் மரபணு குறியிடும் ஷீகா நச்சு ஷிகெல்லா வில்லிருந்து ஈ. கோலை ஓ157:எச்7 இற்குப் பரவக் காரணமாயிருந்தது. இது ஒரு பாக்டீரியாக் கொல்லியாகக் கொண்டு செல்லப்பட்டது.[16]

சாதாரண மைக்ரோபையோட்டாவாக இதன் பங்கு

தொகு

ஈ. கோலை பொதுவாக ஒரு சிசு பிறந்ததன் 40 மணி நேரங்களுக்குள் உணவு அல்லது தண்ணீர் அல்லது குழந்தையைப் பராமரிப்பவர்களிடமிருந்து சிசுவின் இரையக குடலியக் குழாய்க்குள் குடியிருப்பு செய்கிறது. குடலில் இது பெருங்குடலின் சளியோடு இணைந்துகொள்கிறது. இது மனித இரையக குடலியக் குழாயின் முதல் நிலை காற்றில்லா உயிரினமாகும்.[17] (ஃபேகல்டேடிவ் ஆனிரோப் என்பவை பிராணவாயு இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாழக்கூடிய பிராணிகளாகும்.) இவை தீங்கிழைக்கும் காரணிகளுக்கான மரபணு குணாதிசயங்களைப் பெறாதவரை, அவை தீங்கற்ற இணைவாழ்விகளாகவே (ஊட்டுயிருக்குத் தீங்கிழைக்காத ஒட்டுண்ணிகள்) இருக்கின்றன.[18]

நோயுண்டாக்காத ஈ.கோலை யை சிகிச்சைக்காக பயன்படுத்துதல்

தொகு

நோயுண்டாக்காத எஷ்சிரிச்சியா கோலை விகாரம் நிசல் 1917 மருந்து செய்வதில் ஒரு பிரோபையோடிக் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மூட்டாஃப்ளோர் என்ற மற்றொரு பெயரும் உண்டு.[19] இது முக்கியமாக அழற்சியுண்டாக்கும் குடல் நோய் உட்பட பல இரையக குடலிய நோய்களின் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது.[20]

நோயில் இதன் பங்கு

தொகு

ஈ.கோலையின் நஞ்சார்ந்த விகாரங்கள் இரையக குடலழற்சி, சிறுநீரகக் குழாய்த் தொற்றுகள் மற்றும் பிறந்த குழந்தைகளில் மூளைச்சவ்வழற்சியை (மெனிஞ்சைட்டிஸ்) உண்டாக்கும். அரிதான நேரங்களில் ஹீமொலிட்டிக்-யுரேமிக் நோய்க்குறித்தொகுப்பு (எச்.யு.எஸ்), வயிற்றறை உறையழற்சி (பெரிடோனிடிஸ்), முலையழற்சி (மேஸ்டைட்டிஸ்), குருதிநுண்ணுயிர் நச்சேற்றம் (செப்டிசீமியா) மற்றும் கிராம்-நெகட்டிவ் நுரையீரலழற்சி (நியுமோனியா) ஆகியவற்றை உண்டாக்கக்கூடும்.[17]

இரையக குடலியத் தொற்று

தொகு
 
ஈ. கோலை பாக்டீரியாவின் ஒரு குழுவின் தாழ் வெப்பநிலை மின்துகள் நுண்படம். இது 10,000 மடங்குகள் பெரிதுப்படுத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு தனி பாக்டீரியம்மும் ஒரு உருண்டையான உருளையாகும்.

ஓ157:எச்7, ஓ121 மற்றும் ஓ104:எச்21 போன்ற ஈ.கோலையின் குறிப்பிட்ட விகாரங்கள் இறப்புண்டாக்கக்கூடிய நச்சுகளை உண்டாக்குகின்றன. ஈ.கோலையினால் உண்டாகும் உணவு நச்சேற்றம் கழுவப்படாத காய்கறிகள் அல்லது சரியாக சமைக்கப்படாத இறைச்சியை உண்பதனால் உண்டாகிறது. ஓ157:எச்7 என்பது ஹீமொலிடிக்-யுரேமிக் நோய்க்குறித்தொகுப்பு (எச்.யு.எஸ்) போன்ற கடுமையான உயிரை-அச்சுறுத்தக்கூடிய சிக்கல்களையும் உருவாக்கக்கூடும். இந்தக் குறிப்பிட்ட விகாரமானது புதியப் பசலையில் வெளியான 2006 ஆம் ஆண்டின் அமெரிக்க ஈ.கோலை திடீர் நிகழ்வோடு சம்பந்தப்பட்டுள்ளது. உடல்நோய்க்குறைவின் கடுமையானது வெகுவாக வேறுபடுகிறது; இது சிறாருக்கு, வயது முதிர்ந்தவர்களுக்கு மற்றும் நோயெதிர்ப்புத் திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிரிழப்பு உண்டாக்கலாம். ஆனால் பொதுவாக வீரியம் குறைந்ததாகவே காணப்படுகிறது. முன்னதாக, ஸ்காட்லாந்தில் சுத்தமற்ற முறையில் இறைச்சி சமைக்கப்பட்டதால் 1996ஆம் ஆண்டில் ஈ.கோலை நச்சினால் ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் நோய்த்தொற்றுக்குள்ளாயினர். ஈ.கோலை வெப்ப-நிலையான மற்றும் வெப்ப-நிலைமாறுகின்ற குடல்நச்சுகள் இரண்டையும் குடியேற்றிக்கொள்ள முடியும். பிந்தைய வெப்ப-நிலைமாறுகின்றவை எல்.டி என்றழைக்கப்பட்டு ஒரு “ஏ” துணைப்பாகமும் ஐந்து “பீ” துணைப்பாகங்களும் கொண்டிருக்கிறது. இவையனைத்தும் ஒரு ஹோலோடாக்சினாக வரிசைப்படுத்தப்பட்டு வடிவத்திலும் இயக்கத்திலும் காலரா (வாந்திபேதி நோய்) நச்சுகளைப் போலவே இருக்கின்றன. பீ துணைப்பாகங்கள் ஒட்டுவதிலும் ஊட்டுயிரின் குடலணுக்களுக்குள் நுழைவதில் உதவுகின்றன. ஏ துணைப்பாகமானது பிளவுண்டு அணுக்கள் தண்ணீரை உறிஞ்சுவதைத் தடுக்கிறது. இதனால் பேதி உண்டாகிறது. எல்டி ஆனது வகை 2 சுரத்தல் தடம் மூலமாக சுரக்கப்படுகிறது.[21]

ஈ.கோலை பாக்டீரியாவானது குடல் குழாயிலிருந்து ஒரு துளை (உதாரணத்திற்கு ஒரு குடற்புண், கிழிந்த குடல்வால் அல்லது ஒரு அறுவைப் பிழையினால்) மூலமாக நழுவி அடிவயிற்றில் நுழைந்துவிட்டால், அவை பொதுவாக வயிற்றறை உறையழற்சியை (பெரிடோனிட்டிஸ்) உண்டாக்குகின்றன. தகுந்த நேரத்தில் இதற்கு சிகிச்சை எடுக்காவிட்டால் உயிரிழப்பு நேரக்கூடும். எனினும் ஈ.கோலை ஸ்டிரெப்டோமைசின் அல்லது ஜெண்டமைசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு மிகுந்த உணர்திறன் உள்ளவைகளாகக் காணப்படுகின்றன. இது மாறக்கூடும். ஏனெனில் கீழேக் குறிக்கப்பட்டுள்ளது போல, ஈ.கோலை அதி வேகமாக மருந்து எதிர்ப்பைப் பெற்றுக்கொள்கிறது.[22] அண்மையில் நடந்த ஆராய்ச்சி ஆண்டிபையாட்டிக்குகளுடன் சிகிச்சையளிப்பது நோயின் விளைவை மாற்றாமல், மாறாக ஹீமோலிட்டிக் யுரேமிக் நோய்க்குறித்தொகுப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிப்பதாக கூறுகின்றது.[23]

அழற்சி சார்ந்த குடல் நோய்கள், கிரோன்ஸ் நோய் மற்றும் பெருங்குடல் அழற்சியில் குடல் சீதச்சவ்வு சம்பந்தப்பட்ட ஈ.கோலை பெருவாரியான அளவுகளில் காணப்பட்டுள்ளது.[24] அழற்சியுண்டான திசுவில் ஈ.கோலை துளைக்கும் விகாரங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இப்படிப்பட்ட அழற்சியுடைய பகுதிகளில் காணப்படும் பாக்டீரியாவில் எண்ணிக்கைக்கேற்ப குடல் அழற்சியின் தீவிரம் காணப்படுகிறது.[25]

நச்சுத்தன்மை

தொகு

குடலியல் ஈ.கோலை (ஈ.சி) அவைகளின் ஊனீரியல் குணாதிசியங்கள் மற்றும் நச்சுத்தன்மைகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.[17] பின்வருவன வீரோடைப்களில் அடங்கும்:

பெயர் ஊட்டுயிர்கள் விளக்கம்
எண்டெரொடாக்சிஜினிக் ஈ.கோலை (ஈ.டி.ஈ.சி) மனிதர்கள், பன்றிகள், செம்மறி ஆடுகள், கால்நடைகள், நாய்கள் மற்றும் குதிரைகளில் பேதியை (ஜுரம் இல்லாமல்) உண்டாக்குதல் ஈ.டி.ஈ.சி சிறுங்குடலிலுள்ள எண்டிரோசைட் அணுக்களைப் பிணைக்க ஃபிம்பிரியல் அதெசின்களைப் (பாக்டீரியாவின் அணு மேல்பரப்பிலிருந்தான நுண்காம்புகள்) பயன்படுத்துகிறது. ஈ.டி.ஈ.சி இரண்டு புரதத்தன்மையுள்ள குடல்நச்சுகளை உண்டாக்கக் கூடும்: ஈ.டி.ஈ.சி விகாரங்கள் துளையிடக்கூடியவைகளாய் இராமல், குடலின் உட்பகுதியை விட்டு வெளியேறுவதில்லை. வளரும் உலகத்தில் குழந்தைகளில் பேதி உண்டாக ஈ.டி.ஈ.சி தான் முக்கிய பாக்டீரியக் காரணியாக இருக்கின்றது. பயன பேதி வருவதற்கும் இதுவே மிகவும் பொதுவான காரணமாகும். ஒவ்வொரு வருடமும் ஈ.டி.ஈ.சி பெரும்பாலும் வளரும் நாடுகளிலுள்ள குழந்தைகளில் 20 கோடிக்கும் மேலான பேருக்கு பேதியுண்டாக்கி 3,80,000 பேர் இறக்க காரணமாக உள்ளது.[26]
  • இவ்விரண்டு புரதங்களில் பெரிதான எல்.டி குடல்நச்சு வடிவத்திலும் செயல்பாட்டிலும் காலரா (வாந்திபேதி) நச்சிற்கு ஒத்திருக்கிறது.
எண்டெரோபேதொஜினிக் ஈ.கோலை (ஈ.பி.ஈ.சி) மனிதர்கள், முயல்கள், நாய்கள், பூனைகள் மற்றும் குதிரைகளில் பேதி வருவதற்கான காரணியாக இருக்கிறது ஈ.டி.ஈ.சியைப் போல ஈ.பி.ஈ.சியும் பேதியுண்டாக்குகிறது. ஆனால் குடியேறுவதற்கான இதன் மூலக்கூறு அமைப்புகளும் நோய்க்காரணவியலும் வித்தியாசமாக உள்ளன. ஈ.பி.ஈசிக்கு நுண்காம்புகள், எஸ்.டி மற்றும் எல்.டி நச்சுகள் கிடையாது. ஆனால் இவை குடல் அணுக்களைப் பிணைக்க இண்டிமின் என்னும் ஒரு அதெசினைப் (ஒட்டி) பயன்படுத்துகின்றன. இந்த வீரோடைப்பில் ஒரு வரிசையான நச்சுக் காரணிகள் உள்ளன. இவை ஷிகெல்லா வில் காணப்படுபவைகளுக்கு ஒத்திருக்கின்றன. இதில் ஒரு ஷீகா நச்சும் இருக்கக் கூடும். குடலியல் சீதச்சவ்வில் ஒட்டிக்கொள்வதால் ஒட்டுயிர் அணுவில் அக்றின் வரிசைப் பிழறுகிறது. இதனால் பெருத்த சீர்க்குலைவு ஏற்படுகிறது. ஈ.பி.ஈ.சி மிதமாக-துளைக்கக் கூடியவை (அதாவது இவை ஊட்டுயிரின் அணுக்களுக்கு நுழைபவையாகும்) ஆகும். மேலும் இதன் விளைவால் அழற்சி தூண்டப்படும். ஈ.பி.ஈ.சியால் பாதிக்கப்பட்டவர்களில் “இணைப்பு மற்றும் அழிப்பு” ஆகியவற்றால் குடல் அணு மிகு நுண்ணமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் பேதி உண்டாவதற்கான முக்கிய காரணமாக இருக்கலாம்.
எண்டிரோஇன்வேசிவ் ஈ.கோலை (ஈ.ஐ.ஈ.சி) மனிதர்களில் மட்டுமே காணப்படுவது ஈ.ஐ.ஈ.சி நோய்த்தொறு ஷிகல்லோசிஸுக்கு ஒத்த ஒரு நோய்க்குறித்தொகுப்பை உண்டாக்குகிறது. இதிலும் அதிகமான பேதியும் கடுமையான ஜுரமும் காணப்படுகிறது.
எண்டிரோஹெமரேஜிக் ஈ.கோலை (ஈ.எச்.ஈ.சி) மனிதர்கள், கால்நடைகள் மற்றும் ஆடுகளில் காணப்படுவது இந்த வீரோடைப்பின் மிக முக்கிய அங்கத்தினர் விகாரம் ஓ157:எச்7 ஆகும். இது இரத்தப் பேதியுண்டாக்குகிறது. ஆனால் ஜுரம் காணப்படுவதில்லை. ஈ.எச்.ஈ.சி ஹீமொலிடிக்-யுரேமிக் நோய்க்குறித்தொகுப்பு மற்றும் திடீர் சிறுநீரக செயலிழப்பை உண்டாக்கக் கூடும். இது இணைவதற்கு (ஈ.கோலை பொதுவான பைலஸ், ஈ.சி.பி) நுண்காம்புகளைப் பயன்படுத்துகிறது.[27] இது மிதமாக துளைக்கக் கூடியதும் ஒரு விழுங்கல்-குறியீடப்பட்ட ஷீகா நச்சையும் பெற்றுள்ளது. இதன் விளைவால் அழற்சியுண்டாகலாம்.
எண்டிரோஆக்ரிகேடிவ் ஈ.கோலை (ஈ.ஏ.ஈ.சி) மனிதர்களில் மட்டுமே காணப்படுவது இவைகளுக்கு திசுப்பண்ணை அணுக்களை சேகரிக்கக் கூடிய நுண்காம்புகள் உள்ளதால் இவை அவ்வாறு பெயரிடப்பட்டுள்ளன. ஈ.ஏ.ஈ.சி குடல் சீதச்சவ்வுடன் பிணைந்து நீரான பேதியை ஜுரமில்லாமல் உண்டாக்குகின்றன. ஈ.ஏ.ஈ.சி துளையிடுவதுக் கிடையாது. அவை ஈ.டி.ஈ.சியைப் போலவே ஒரு குருதிச்சாறு இளக்கியையும் (ஹீமோலைசின்) ஒரு எஸ்.டி குடல்நச்சையும் உண்டாக்குகின்றன.

இரையக குடலிய நோய்த்தொற்றின் நோய்ப்பரப்புவியல்

தொகு

நோயுண்டாக்கும் ஈ.கோலை யின் பரவுதல் அடிக்கடி மல-வாய் வழியாக நடைபெறுகிறது.[18][28][29] சுத்தமற்ற வகையில் உணவு தயாரிப்பது,[28] எரு உரமிடுவதால் ஏற்படும் வயல் மாசு,[30] மாசுபட்ட மாசுநீர் அல்லது கழிவுநீர்க் கொண்டு பயிர்களுக்கு நீர்ப்பாய்ச்சுவது,[31] வயல்வெளிகளில் காட்டுப்பன்றிகள்[32] அல்லது கழிவுநீர் மாசுபட்ட நீரை நேரடியாகப் பயன்படுத்துவது ஆகியவை பாக்டீரியா பரவும் பொதுவான வழிகளாகும்.[33] பால் மற்றும் இறைச்சித் தரும் கால்நடைகள் ஈ.கோலை ஓ157:எச்7 தங்கும் முக்கிய உறைவிடங்களாகும்.[34] இவை அறிகுறிகள் எதுவுமில்லாமல் இதைச் சுமந்துகொண்டு தங்கள் மலத்தில் வெளியேற்ற முடியும்.[34] பச்சை அறைத்த மாட்டிறைச்சி,[35] பச்சை விதை முளைகள் அல்லது பசலை,[30] பச்சைப் பால், பதப்படுத்தபடாத பழரசம், பதப்படுத்தப்படாத பாற்கட்டி மற்றும் மல-வாய் வழியாக தொற்றடைந்த உணவுப் பணியாளர்கள் மூலமாக மாசுபட்ட உணவு ஆகியவை ஈ.கோலை திடீர்நிகழ்வுகளில் தொடர்புடைய உணவுப் பொருட்களாகும்.[28]

உணவை ஒழுங்காக சமைப்பது, குறுக்கு-மாசு ஏற்படுவதைத் தடுப்பது, உணவுப்பணியாளர்களுக்குக் கையுறைகள் போன்ற தடுப்புகளை நியமிப்பது, உணவுத் தொழிலில் இருப்பவர்கள் உடல்நலக்குறைவின்போது சிகிச்சை பெறும் வண்ணம் உடல்நலப் பராமரிப்புக் கொள்கைகளை நிறுவுதல், பால் பொருட்கள் அல்லது பழரசங்களை பாச்சர் முறையில் பதப்படுத்துதல் மற்றும் சரியான கைக்கழுவும் நிபந்தனைகளை விதித்தல் ஆகியவை மல-வாய் பரவும் சுழற்சியைத் தடுக்குமென்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கூறுகிறது.[28]

ஷீகா நச்சு-உண்டாக்கும் ஈ.கோலை (எஸ்.டி.ஈ.சி) அதிலும் குறிப்பாக சீரோடைப் ஓ157:எச்7 ஈக்கள் மூலமாகவும்,[36][37][38] பண்ணை மிருகங்களுடன் நேரடி தொடர்பு மூலமாகவும்,[39][40] விலங்கியல் பூங்கா மிருகங்களைக் கொஞ்சுவதால்[41] மற்றும் விலங்குகளை-பராமரிக்கும் சூழல்களில் காணப்படும் காற்றுவழிப் பரவும் பொருட்கள் மூலமாகவும் பரவியிருக்கின்றன.[42]

சிறுநீர்க் குழாய் நோய்த்தொற்று

தொகு
 
ஈ.கோலை பாக்டீரியா என்பது குடலில் மிகவும் அதிகமாக பரவி காணப்படும் கிராம் நெகட்டிவ் தாவர வர்க்கமாகும் (ஃப்ளோரா).[43]

சாதாரண உடற்கூறியல் உள்ளவர்களில் சுமார் 90% பேர்களில் சிறுநீர்க் குழாய் நோய்த்தொற்று (யு.டி.ஐ) உண்டாவதற்கு சிறுநீர்ப்பாதை நோயுண்டாக்கும் (யுரோபேதோஜினிக்) ஈ.கோலை (யு.பி.ஈ.சி) காரணமாக உள்ளது.[17] ஏற்றுமுக நோய்த்தொற்றுகளில் , மல பாக்டீரியா சிறுநீர் வடிகுழாயில் (யூரித்ரா) குடியேறி, சிறுநீர்க் குழாயில் நீர்ப்பை வரை பரவி, சிறுநீரகங்கள் (சிறுநீரக நுண்குழலழற்சியை உண்டாக்குகின்றன[44]) வரையிலும் அல்லது ஆண்களில் சுக்கியன் வரை செல்கின்றன. பெண்களுக்கு ஆண்களைவிட சிறிய சிறுநீர் வடிகுழாயிருப்பதால், அவர்கள் ஒரு ஏற்றுமுக யு.டி.ஐயினால் அவதியுற 14-முறை அதிக வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றனர்.[17]

சிறுநீர்ப்பாதை நோயுண்டாக்கும் ஈ.கோலை சிறுநீர்க் குழாய் அகவணிக்கலங்களைப் பிணைக்க பி நுண்காம்புகளைப் (சிறுநீரக நுண்குழலழற்சி-சார்ந்த நுண்ணிழைகள்) பயன்படுத்தி நீர்ப்பையில் குடியேறுகின்றன. இந்த அதெசின்கள் இரத்த சிவப்பணுக்கள் மற்றும் யுரோ எபித்தீலியல் அணுக்களின் பி இரத்தக் குழு எதிர்ச்செனியிலுள்ள டி-கலெக்டோஸ்-டி-கலெக்டோஸ் பாதிக்கூறுகளை குறிப்பாக பிணைக்கின்றன.[17] மனித மக்கள் தொகையில் சுமார் ஒரு சதவீதத்தினரில் இந்த ஏற்பி இருப்பதுக் கிடையாது. இது இருப்பதும் இல்லாததும் ஒருவருக்கு ஈ.கோலை சிறுநீர்க் குழாய் நோய்த்தொற்றுகள் வருவதற்கான வாய்ப்பினை நிர்ணயிக்கிறது. சிறுநீர்ப்பாதை நோயுண்டாக்கும் ஈ.கோலை ஆல்ஃபா-மற்றும்-பீட்டா குருதிச்சாறு இளக்கிகளை உண்டாக்குகின்றன. இது சிறுநீர்க் குழாயணுக்களின் சிதவை ஏற்படுத்துகிறது.

யு.பி.ஈ.சி உடலின் உள்ளிருக்கும் நோயெதிர்க்கும் தற்காப்புகளை (உ.ம். ஊனீர் எதிர்ப்புப் பொருள்) தவிர்த்துவிடுகின்றன. மேலிருக்கும் குடை அணுக்களை தாக்கி உயிரணுக்களுக்கிடையேயான பாக்டீரியா சமூகங்களை (ஐ.பீ.சி.கள்) உருவாக்குவதால் இது நடைபெறுகிறது.[45] இவை கே எதிர்ச்செனி, காப்சுலர் பாலிசாக்கரைடுகளை உருவாக்கும் ஆற்றலும் பெற்றிருக்கின்றன. இதன் விளைவால் ஒரு உயிர்த்திரை (பையோஃபில்ம்) உருவாகிறது. உயிர்த்திரை-உண்டாக்கும் ஈ.கோலை நோயெதிர்ப்புக் காரணிகளுக்கு, நுண்ணுயிர் எதிர்ப்பி சிகிச்சைமுறைக்கும் அடங்காமல் அவ்வப்போது நாட்பட்ட சிறுநீர்க் குழாய் நோய்த்தொற்றுக்கான காரணிகளாக உள்ளன.[46] கே எதிர்ச்செனி-உண்டாக்கும் ஈ.கோலை நோய்த்தொற்றுகள் பொதுவாக மேல் சிறுநீர்க் குழாயில் காணப்படுகின்றன.[17]

இறங்குமுக நோய்த்தொற்றுகள் அரிதாக இருந்தாலும், ஈ.கோலை அணுக்கள் இரத்தவோட்டத்திலிருந்து மேல் சிறுநீர்க் குழாய் உறுப்புகளுக்குள் (சிறுநீரகங்கள், நீர்ப்பை அல்லது சிறுநீர்க் குழாய்கள்) நுழையும்போது நேருகிறது.

பிறந்தவுடனான மூளையுறையழற்சி

தொகு

கே1 என்றழைக்கப்படும் காப்சுலர் எதிர்ச்செனிக் கொண்ட எஷ்சரிச்சியா கோலை யின் சீரொடைப்பினால் இது உண்டாகிறது. புதிதாய்ப் பிறந்த சிசுவின் குடல்கள் நிரப்பப்படும்போது, பாக்டிரீமியா உண்டாகிறது. இதன் விளைவால் மூளையுறையழற்சி உண்டாகிறது. மேலும் தாயிடமிருந்து ஐஜிஎம் பிறப்பொருளெதிரிகள் (இவை மிகவும் பெரியவைகளாததால் நஞ்சுக்கொடியைத் தாண்டுவதில்லை) காணப்படாததாலும், உடலானது கே1 எதிர்ச்செனியை தன்னுடையதென்று எண்ணிக்கொள்வதாலும் (இது பெருமூளைக்குரிய கிளைக்கோபெப்டைட்ஸ் போலவே தென்படுகின்றன) புதிதாய்ப் பிறந்த சிசுக்களில் இது கடுமையான மூளையுறைழற்சியை (மெனிஞ்சைட்டிஸ்) உண்டாக்குகிறது.

ஆய்வுக்கூட நோயறிதல்

தொகு

மல மாதிரிகள் நுண்ணோக்கல், எவ்வித குறிப்பிட அணு வரிசைக் கிரமும் இல்லாத கிராம்-நெகட்டிவ் கோல்களைக் காட்டும். இதன் பிறகு, மெக்கான்கி ஏகர் அல்லது ஈ.எம்.பீ ஏகர் (அல்லது இரண்டும்), மலத்தில் ஏற்றப்படுகிறது. மெக்கான்கி ஏகரில், ஆழமான சிவப்பு குடியிருப்புகள் தென்படுகின்றன. இந்த உயிரினமானது லாக்டோஸ் பாசிட்டிவாக இருப்பதால், இந்த சர்க்கரை நொதியும்போது, ஊடகத்தின் பி.எச் சரிந்து, ஊடகம் ஆழமான நிறத்தையடைகிறது. லீவைன் ஈ.எம்.பீ ஏகரிலான வளர்ச்சி கரிய நிற குடியிருப்புகளையும் பச்சை-கருப்பு உலோக மேற்பூச்சைக் காட்டுகிறது. இதுவே ஈ.கோலை யின் நோயறிதலாகும். இந்த உயிரினமானது லைசீன் பாசிட்டிவாகவும் இருப்பதால் ஒரு (ஏ/ஏ/ஜி+/ எச்2எஸ்-) பிரோஃபைலில் டி.எஸ்.ஐ சிலாண்டில் வளர்கிறது. மேலும், ஈ.கோலை க்கு ஐ.எம்.வி.ஐ.சி ++-- ஆக இருக்கிறது. இதேனென்றால், அதன் இண்டால் பாசிட்டிவாகவும் (சிவப்பு வளையம்) மீதைல் சிவப்பு பாசிட்டிவாகவும் (பளிச்சென்ற சிவப்பு) இருக்கிறது. ஆனால் வி.பி நெகட்டிவாகவும் (மாற்றமில்லை-நிறமற்ற) மற்றும் சிட்ரேட் நெகட்டிவாகவும் (மாற்றமில்லை- பச்சை நிறம்) இருக்கிறது. திசுப்பண்ணையில் நச்சு உற்பத்தியை சோதிக்க பாலூட்டி அணுக்களைப் பயன்படுத்தலாம். இவை ஷீகா நச்சினால் துரிதமாக அழிக்கப்பட்டுவிடுகின்றன. இந்த முறை உணர்திறன் மிக்கதாகவும் மிகவும் குறிப்பிட்டதாகவும் இருந்தாலும், இது மெதுவானதாகவும் விலையுயர்ந்ததாகவும் உள்ளது.[47]

பொதுவாக சார்பிட்டால்-மெக்கான்கி ஊடகத்தில் வளர்த்து அதன் பிறகு டைபிங்க் எதிர் ஊனீரைப் பயன்படுத்துவதன் மூலமாக நோயறிதல் செய்யப்படுகிறது. எனினும், தற்போதைய லேட்டக்ஸ் மதிப்பீடுகளும் சில டைபிங்க் எதிர் ஊனீரும் ஈ.கோலை அல்லாத ஓ157 குடியிருப்புகளோடு குறுக்கு எதிர்வினைகளைக் காண்பித்துள்ளன. மேலும், எச்.யு.எஸ்ஸுடன் சம்பந்தப்பட்ட அனைத்து ஈ.கோலை ஓ157 விகாரங்களும் நான்சார்பிடால் நொதிகலங்கள் அல்ல.

மாநில மற்றும் பிராந்திய நோய்ப்பரப்புவியல் வல்லுநர்கள் சங்கம் மருத்துவ ஆய்வுக்கூடங்கள் இரத்தமுள்ள அனைத்து மல மாதிரிகளையுமாவது இந்த நோய்க்கிருமிக்காக சோதிக்க வேண்டுமென்று பரிந்துரைக்கின்றன. 1994ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்க இரையகக் குடலிய நிறுவனம் ஃபௌண்டேஷன் (ஏ.ஜி.ஏ.எஃப்) அனைத்து மல மாதிரிகளும் வழக்கமாக ஈ.கோலை 00157:எச்7க்கு சோதிக்கப்பட வேண்டுமென்று பரிந்துரை செய்தது. எந்த மாதிரிகள் சோதிக்கப்பட வேண்டும் மற்றும் முடிவுகள் அறிவிக்கப்படக்கூடியவையா என்று சிகிச்சையளிப்பவர் தங்களுடைய மாநில சுகாதாரத் துறையினரிடம் அல்லது நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களிடம் கேட்டு ஆலோசனைப் பெற்றுக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

எலைசா (ஈ.எல்.ஐ.எஸ்.ஏ) சோதனைகள், காலணி இம்யுனோப்ளாட்டுகள், ஃபில்ட்டர்களின் நேரடி இம்யுனோஃப்ளூரசன்ஸ் நுண்ணோக்கியல், மற்றும் காந்தக மணிகள் உபயோகிக்கும் இம்யுனோகாப்ட்சர் நுட்பங்கள் ஆகியவை ஈ.கோலையை மலத்தில் கண்டறிய பயன்படுத்தப்படும் மற்ற முறைகளாகும்.[48] இவ்வகை மதிப்பீடுகள் மல மாதிரியை முந்தியே கல்ச்சர் செய்யாமல் ஈ.கோலை இருக்கிறதாவென்று துரிதமாக சோதிக்க வடிவமைக்கப்பட்ட ஸ்கிரீனிங்க் முறையாகும்.

ஆண்டிபையாட்டிக் சிகிச்சைமுறையும் எதிர்ப்புத்தன்மையும்

தொகு

பாக்டீரிய நோய்த்தொறுகள் பொதுவாக ஆண்டிபையாட்டிக்குகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றன. எனினும், ஈ.கோலையின் வெவ்வேறு விகாரங்களின் ஆண்டிபையாட்டிக் உணர்திறன்கள் வெகுவாக வேறுபடுகின்றது. கிராம்-நெகட்டிவ் உயிரினங்களாக இருப்பதால், கிராம்-பாசிட்டிவ் உயிரினங்களுக்கு எதிராக திறமுள்ளவைகளாக இருக்கும் பல ஆண்டிபையாட்டிக்குகள் ஈ.கோலைக்கு எதிராக வேலை செய்வதில்லை. ஆமாக்சிசிலின்]] மற்றும் மற்ற பகுதி-செயற்கை பெனிசிலின்கள், பல செஃபலோஸ்போரின்கள், கார்பபெனெம்கள், ஆஸ்டிரியோனாம், டிரைமொதோபிரிம்-சல்ஃபாமீதாக்ஸாஸோல், சிப்ரோஃப்ளாக்ஸாசின், நைட்ரோஃப்யுரண்டாயின் மற்றும் அமினோகிளைக்கோசைட்கள் ஆகியவை ஈ.கோலை நோய்த்தொற்றிற்கு சிகிச்சையாக பயன்படுத்தக்கூடிய ஆண்டிபையாட்டிக்குகள் ஆகும்.

ஆண்டிபையாட்டிக் எதிர்ப்பு வளர்ந்து வரும் பிரச்சனையாகும். இப்பிரச்சனையின் ஒரு காரணம் மனிதர்களில் ஆண்டிபையாட்டிக்குகள் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்துவதனால் ஆகும். ஆனால் இதன் மற்றொரு காரணம் ஆண்டிபையாடிக்குகள் விலங்குகளுக்கான உணவில் வளர்ச்சிக் காரணிகளாக பயன்படுத்துவதாகும்.[49] 2007ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சயன்ஸ் என்ற ஒரு இதழில் வெளியான ஒரு ஆய்வு ஈ.கோலையில் இணக்க விகாரங்களின் விகிதம் “ஒரு சந்ததியில் ஒரு ஜீனோமுக்கு 10–5 என்று இருக்கிறது. இது முந்தைய அனுமானங்களை விட 1000 மடங்கு அதிகமாக இருக்கிறது”. இந்த கண்டுபிடிப்பு பாக்டீரிய ஆண்டிபையாட்டிக் எதிர்ப்புப் பற்றிய ஆய்விற்கும் மேலாண்மைக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம்.[50]

ஆண்டிபையாட்டிக்-எதிர்ப்புத்தன்மையுடைய ஈ.கோலை ஆண்டிபையாட்டிக் எதிர்ப்புத்தன்மைக்கான மரபணுக்களை ஸ்ட்ஃபைளோக்காக்கஸ் ஆரியஸ் போன்ற மற்ற பாக்டீரிய இனங்களுக்கும் பரப்பிவிடலாம். ஈ.கோலை அடிக்கடி பன்மருந்து எதிர்ப்பு பிளாஸ்மிட்களை ஏந்தி செல்கின்றன. மேலும் அழுத்த சூழ்நிலைகளில் இதை மற்ற இனங்களுக்கு மிக எளிதாக மாற்றிடம் செய்கின்றன. மேலும், ஈ.கோலை அடிக்கடி உயிர்த்திரைகளில் ஒரு அங்கமாக காணப்படுகிறது. இவற்றில் பல பாக்டீரிய இனங்கள் மிக அருகாமையில் வாழ்கின்றன. இப்படி இனங்கள் கலப்பதால் மற்ற பாக்டீரியாக்களிலிருந்து பிளாஸ்மிட்களை பெறவும் செலுத்தவும் ஆற்றல் பெற்றுள்ள நுண்ணிழைகளுள்ள ஈ.கோலை விகாரங்களால் அதை செய்ய முடிகிறது. இப்படியாக ஈ.கோலையும் மற்ற குடல் பாக்டீரியாக்களும் மாற்றிடப்படக்கூடிய ஆண்டிபையாட்டிக் எதிர்ப்புத்தன்மையின் உறைவிடங்களாகும்.[51]

பீட்டா-லாக்டமேஸ் விகாரங்கள்

தொகு

சமீப காலங்களில் பீட்டா-லாக்டம் ஆண்டிபையாட்டிக்குகளுக்கான எதிர்ப்புத்தன்மை ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதேனென்றால் நீட்டிக்கப்பட்ட-நிறமாலை பீட்டா-லாக்டாமேஸ்களை உற்பத்தி செய்யும் பாக்டீரியாவின் விகாரங்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன.[52] இந்த பீட்டா-லாக்டாமேஸ்கள் பல, அல்லது அனைத்து பென்சிலின்களையும் செஃபலோஸ்போரின்களையும் செயலிழக்க செய்கின்றன. நீட்டிக்கப்பட்ட-நிறமாலை பீட்டா-லாக்டாமேஸ்களை உற்பத்தி செய்யும் ஈ.கோலை விகாரங்கள் ஆண்டிபையாட்டிக் வரிசைக்கு மிகுந்த எதிர்ப்புத்தன்மையை உடையவைகளாயிருக்கின்றன. இதனால் இவ்வகை விகாரங்களினால் வரும் நோய்த்தொற்றுகளானது சிகிச்சையளிக்கக் கடினமுள்ளவைகளாயிருக்கின்றன. பல சூழல்களில் இரண்டு வாய்வழி ஆண்டிபையாட்டிக்குகளும் மிகவும் குறுகிய எண்ணிக்கையிலான சிரைவழி ஆண்டிபையாட்டிக்குகளுமே திறமுள்ளவைகளாக இருக்கின்றன.

“சூப்பர்பக்” என்று ஐக்கிய இராச்சியத்தில் அழைக்கப்படும் இவ்வடிவத்தைக் குறித்தான கரிசனையால் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டுமென்ற அறைகூவல்கள் எழுந்துள்ளன. மேலும் நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளைக் கையாளவும் ஒரு யு.கே அளவிலான செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.[53] இந்த உயிரினம் வளர்ப்புக்கு (கல்ச்சர்) தனியாக்கப்படக்கூடிய அனைத்து நோய்த்தொற்றுகளிலும் நோய்க்கு உள்ளாகக்கூடிய சோதனை சிகிச்சையை வழிநடத்த வேண்டும்.

ஃபேஜ் சிகிச்சைமுறை

தொகு

நோயுண்டாக்கும் பாக்டீரியாவைக் குறிவைக்கும் வைரசுகளைப் பயன்படுத்தும் ஃபேஜ் சிகிச்சைமுறை கடந்த 80 ஆண்டுகளாக தோற்றுவிக்கப்பட்டு வருகிறது. இது முன்னால் சோவியத் ஒன்றியத்தில், பெரும்பாலும் ஈ.கோலை கொண்டு வரும் பேதியைத் தடுக்க தோற்றுவிக்கப்பட்டது[54]. தற்போது மனிதர்களுக்கான ஃபேஜ் சிகிச்சைமுறை ஜார்ஜியா மற்றும் போலந்தில் மட்டுமே கிடைக்கப்பெறுகிறது[55]. எனினும், 2007, சனவரி 2 இல், ஐக்கிய அமெரிக்கா எஃப்.டீ.ஏ தன்னுடைய ஈ.கோலை கொல்லும் ஃபேஜை மனித உணவுக்காக கொல்லப்படும் உயிருள்ள விலங்குகளில் உபயோகிக்கும்படி ஆம்னிலிடிக்சுக்கு ஒப்புதல் அளித்தது. இது மூடுபனி, தெளிப்பு அல்லது கழுவல் முறையில் நடைபெறலாம்[56]. பாக்டீரியோஃபேஜ் டி4 என்பது நோய்த்தொற்றுக்காக ஈ.கோலையைக் குறிவைக்கும் மிகவும் அதிகமாக ஆய்வு செய்யப்பட்ட ஃபேஜாகும்.

நோய்த்தடுப்பு

தொகு

உலகளாவிய அளவில் ஈ.கோலை நோய்த்தொற்றைக் குறைக்க ஒரு பாதுகாப்பான, திறமிக்க தடுப்புமுறையை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் முனைந்துள்ளனர்[57]. 2006, மார்ச் மாதம், ஈ.கோலை ஓ157:எச்7 ஓவிற்கு சம்பந்தப்பட்ட பாலிசாக்ரைடுடன் இனக்கலப்பு சூடோமோனாஸ் ஏறுகினோசா வின் (ஓ157-ஆர் ஈ.பீ.ஏ) புறநச்சு ஏ இணைந்து உருவாக்கப்பட்ட ஒரு தடுப்புமருந்தின் பதிலளிப்பு இரண்டு முதல் ஐந்து வயதுடைய குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக இருந்ததாக காணப்பட்டது. முந்தைய பணியில் அது பெரியவர்களில் பாதுகாப்பானதாக சுட்டிக்காட்டப்பட்டது[58]. இந்த சிகிச்சையின் திறத்தன்மையை பெரிய அளவில் சரிபார்க்க ஒரு கட்டம் 3 மருத்துவ சோதனை திட்டமிடப்பட்டுள்ளது[58].

2006ஆம் ஆண்டு கோழிக்குஞ்சுகளில் காற்றுப்பையழற்சி மற்றும் வயிற்றறை உறையழற்சியைக் கட்டுப்படுத்த ஒரு திறமுள்ள உயிருள்ள வீரியம் குறைந்த தடுப்புமருந்தை ஃபோர்ட் டாட்ஜ் அனிமல் ஹெல்த் (வையத்) அறிமுகப்படுத்தினது. இந்த தடுப்புமருந்தானது மரப்பியல் முறையில் திருத்தியமைக்கப்பட்ட தடுப்புமருந்தாகும். இது ஓ78 மற்றும் வகைப்படுத்தமுடியாத விகாரங்களுக்கெதிராக பாதுகாப்பானதாக காண்பிக்கப்பட்டுள்ளது[59].

2007ஆம் ஆண்டு சனவரி மாதம் பையோனீஷ் என்ற கனடா நாட்டு பையோ-ஃபார்மசூட்டிக்கல் நிறுவனம் எருவில் 1000 மடங்கு ஓ157;எச்7 கழிவை குறைக்கும் கால்நடை தடுப்புமருந்தை உருவாக்கியதாக அறிவித்தது. ஒரு கிராம் எருவிற்கு 1000 நோயுண்டாக்கும் பாக்டீரியாவைக் குறைக்கும் சக்தியுடையதாக அறிவிக்கப்பட்டது[60][61][62].

2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிச்சிகன் மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஈ.கோலையின் ஒரு விகாரத்திற்கு எதிரான வேலை செய்யும் தடுப்புமருந்தை உருவாக்கியதாக அறிவித்தார். எம்.எஸ்.யு வின் கால்நடை மருத்துவம் மற்றும் மனித மருத்துவக் கல்லூரிகளில் நோய்ப்பரப்புவியல் மற்றும் தொற்று நோய்கள் பிரிவின் பேராசிரியரன மாஸ்தி சயத், தன்னுடைய கண்டுபிடிப்பிற்கான ஆக்கவுரிமைக்காக விண்ணப்பித்தார். மேலும் அவர் மருந்தக நிறுவனங்களுடன் அதை வர்த்தரீதியில் உற்பத்தி செய்யவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்[63].

உயிர்த் தொழில்நுட்பத்தில் இதன் பங்கு

தொகு

நெடுங்காலமாக ஆய்வுக்கூட வளர்ப்புகளில் இருந்து எளிதாக மாற்றியமைக்கக் கூடியதாக இருப்பதால் ஈ.கோலை நவீன உயிரியல் பொறியியலிலும் தொழிற் நுண்ணுயிரியலிலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது[64]. ஈ.கோலையில் பிளாஸ்மிட்கள் மற்றும் கட்டுப்படுத்தும் நொதிகளைப் பயன்படுத்தி இனக்கலப்பு டீ.என்.ஏ. வை ஸ்டான்லி நார்மன் கோஹன் மற்றும் ஹர்பர்ட் போயர் உருவாக்கியது உயிர்த் தொழில்நுட்பத்தின் அடித்தளமாக அமைந்தது[65].

வேற்றின புரதங்கள் உற்பத்தியாவதற்கு மிகவும் ஏற்ற ஊட்டுயிராக கருதப்படும் ஈ.கோலையானது, பிளாஸ்மிட்களை பயன்படுத்தி ஆராய்ச்சியாள்ர்கள் நுண்ணுயிர்களுக்குள் மரபணுக்களைப் புகுத்தலாம். இதன் மூலம் தொழிற்சார்ந்த நொதியியல் முறைகளில் புரதங்களை திரள் உற்பத்தி செய்யக்கூடும். ஈ.கோலையை பயன்படுத்தி இனக்கலப்புப் புரதங்களை உற்பத்தி செய்ய மரபியல் முறைமைகளும் உருவாக்கப்பட்டுவிட்டன. மனித இன்சுலினை உருவாக்க இனக்கலப்பு டீ.என்.ஏ தொழில்நுட்பத்தைக் கொண்டு ஈ.கோலையை திருத்தியமைத்ததே அதன் முதன் பயன்பாடாகும்[66]. திருத்தியமைக்கப்பட்ட ஈ.கோலை தடுப்புமருந்து உற்பத்தி, உயிர்-சீர்த்திருத்தம் மற்றும் அசைவிழந்த நொதிகளின் உற்பத்தி ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளது[67]. எனினும், ஈ.கோலை பல்கூட்டு டைசல்ஃபைட் பிணைப்புகள் அடங்கிய சற்று பெரிய, பலக்கிய புரதங்களை உற்பத்தை செய்ய பயன்படுத்தப்பட முடியாது. அதிலும் ஜோடியற்ற தையால்கள் அல்லது செயல்படுவதற்கு பெயர்ச்சிக்கு-பின்னான திருத்தியமைப்பு வேண்டியிருக்கிற புரதங்கள் செய்யப்பட முடியாது[64].

மேலும் ஹாமில்டோனியன் பாதை கணக்கு போன்ற சிக்கலான கணக்கு சூத்திரங்களை தீர்த்துவைப்பதற்காகவும் ஈ.கோலையை நிரல்படுத்தும் ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன[68].

சுற்றுச்சூழல் தரம்

தொகு

ஈ.கோலை பாக்டீரியா கேலிக்கைத் தண்ணீர்களில் பொதுவாகக் காணப்படுகிறது. ஈ.கோலை காணப்படுவது அண்மையிலான மல மாசை சுட்டிக்காட்ட பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஈ.கோலை காணப்படுவதால் மனித கழிவு இருக்கிறதென்று கூற இயலாது. ஈ.கோலை பறவைகள் பாலூட்டிகள் உட்பட அனைத்து வெப்பக்குருதி விலங்குகளிலும் காணப்படக் கூடும். ஈ.கோலை பாக்டீரியா மீன் மற்றும் நீர் ஆமைகளிலும் காணப்பட்டிருக்கிறது. மணல் மற்றும் மண் ணிலும் ஈ.கோலை பாக்டீரியா வளர்கிறது. சில ஈ.கோலை விகாரங்கள் குடியேற்றம் அடைகின்றன. சில புவிப்பகுதிகள் ஈ.கோலையின் தனித்தன்மை வாய்ந்த இன்ங்களுக்கு சாதகமாக அமைகின்றன. அதே போல சில ஈ.கோலை விகாரங்கள் பல்வள இயல்புடையவனவாக இருக்கின்றன [1].

மாதிரி உயிரினம்

தொகு

ஈ.கோலை அடிக்கடி நுண்ணுயிரியல் ஆய்வுகளில் மாதிரி உயிரினமாக பயன்படுத்தப்படுகிறது. வளர்க்கப்படுகிற விகாரங்கள் (உ.ம். ஈ.கோலை கே12) ஆய்வுக்கூட சூழலுக்கு நன்கு சரிபடுத்திக் கொண்டு காட்டு வகை விகாரங்களைப் போலல்லாமல் இவை குடலில் வாழக்கூடிய ஆற்றலை இழந்துவிடுகின்றன. பல ஆய்வுக்கூட விகாரங்கள் உயிர்த்திரைகள் உருவாகக்கூடிய தங்கள் திறனையும் இழந்துவிடுகின்றன[69][70]. இந்த அம்சங்களே காட்டு வகை விகாரங்களை பிறப்பொருளெதிரிகளிடமிருந்தும் மற்ற வேதியியல் தாக்குதல்களிடமிருந்து பாதுகாக்கின்றன. ஆனால் இதற்கு பெருவாரியான சக்தியும் பொருட்செலவும் ஆகும்.

1946ஆம் ஆண்டு, ஈ.கோலையை ஒரு மாதிரி பாக்டீரியமாக பயன்படுத்தி, ஜோஷுவா லெடர்பர்க் மற்றும் எட்வர்ட் டேடம் ஆகியோர் பாக்டீரியல் இணைதல் என்ற ஒரு தோற்றப்பாடை விளக்கினர்[71] இன்றுவரை இணைதலைக் குறித்து ஆய்வு செய்ய இதுவே முதல்நிலை மாதிரியாகக் காணப்படுகிறது. ஃபேஜ் மரபியல்களைக் குறித்துப் புரிந்துகொள்வதற்கு செய்யப்பட்ட முதல் பரிசோதனைகளில் ஈ.கோலை ஒரு முக்கிய இடம் வகித்தது[72] மேலும் சேய்மோர் பென்சர் போன்ற ஆரம்ப கால ஆராய்ச்சியாளர்கள், மரபணு கட்டமைப்பு இடவியல்பை ஆய்வு செய்ய ஈ.கோலையையும் ஃபேஜ் டி4ஐயும் பயன்படுத்தினர்[73]. பென்சருடைய ஆராய்ச்சிக்கு முன், மரபணுவானது நேர்க்கோட்டு அமைப்பா கிளை வடிவமாவென்பது தெரியாதிருந்தது.

1988 இல் ரிச்சர்ட் லென்ஸ்கி மூலமாக ஈ.கோலையுடன் தொடங்கப்பட்ட நெடுங்கால பரினாம பரிசோதனைகளின் வாயிலாக பெரும் பரினாம மாற்றங்களை ஆய்வுக்கூடத்தில் நேரடியாக காண முடிந்தது[74]. இந்தப் பரிசோதனையில் ஈ.கோலையின் ஒரு இனம் எதிர்பாராமல் சிட்ரேட்டை காற்றுள்ள சூழலில் சிதைக்கும் ஆற்றலை பெற்றது. இந்த ஆற்றல் ஈ.கோலையில் மிகவும் அரிதானதாகும். காற்றுள்ள சூழலில் வளரக்கூடாத ஆற்றலை வைத்தே ஈ.கோலை மற்ற நெருங்கியத் தொடர்புள்ள சால்மொனெல்லா போன்ற பாக்டீரியாக்களிலிருந்து வேறுபிரித்து நோய்க் கண்டறியப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் இந்த கண்டுபிடிப்பு ஆய்வுக்கூடத்தில் காணப்பட்ட ஒரு இனமாதல் நிகழ்வாக அமையலாம்.

மீநுண் தொழில்நுட்பங்களை நிலத் தோற்ற சூழலியலுடன் இணைத்து நுண்ணிய அளவுகள் வரை பலக்கிய குடியிருப்பு நிலத்தோற்றங்கள் உருவாக்கப்படலாம்[75]. ஒரு தீவு உயிரின வாழ்வியல் சிப்பில் தகவமைத்தலின் இடஞ்சார்ந்த உயிர் இயற்பியலை ஆய்வு செய்ய ஈ.கோலையுடனான செயற்கை சூழ்மண்டல பரிணாம பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இவற்றையும் பார்க்க

தொகு

குறிப்புதவிகள்

தொகு
  1. "Escherichia coli O157:H7". CDC Division of Bacterial and Mycotic Diseases. பார்க்கப்பட்ட நாள் 2007-01-25.
  2. Vogt RL, Dippold L (2005). "Escherichia coli O157:H7 outbreak associated with consumption of ground beef, June-July 2002". Public Health Rep 120 (2): 174–8. பப்மெட்:15842119. 
  3. Bentley R, Meganathan R (1 September 1982). "Biosynthesis of vitamin K (menaquinone) in bacteria". Microbiol. Rev. 46 (3): 241–80. பப்மெட்:6127606. பப்மெட் சென்ட்ரல்:281544. http://mmbr.asm.org/cgi/pmidlookup?view=long&pmid=6127606. 
  4. 4.0 4.1 Hudault S, Guignot J, Servin AL (July 2001). "Escherichia coli strains colonising the gastrointestinal tract protect germfree mice against Salmonella typhimurium infection". Gut 49 (1): 47–55. doi:10.1136/gut.49.1.47. பப்மெட்:11413110. பப்மெட் சென்ட்ரல்:1728375. https://archive.org/details/sim_gut_2001-07_49_1/page/47. 
  5. Reid G, Howard J, Gan BS (September 2001). "Can bacterial interference prevent infection?". Trends Microbiol. 9 (9): 424–8. doi:10.1016/S0966-842X(01)02132-1. பப்மெட்:11553454. https://archive.org/details/sim_trends-in-microbiology_2001-09_9_9/page/424. 
  6. 6.0 6.1 6.2 Feng P, Weagant S, Grant, M (2002-09-01). "Enumeration of Escherichia coli and the Coliform Bacteria". Bacteriological Analytical Manual (8th ed.). FDA/Center for Food Safety & Applied Nutrition. Archived from the original on 2009-05-19. பார்க்கப்பட்ட நாள் 2007-01-25.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  7. 7.0 7.1 Thompson, Andrea (2007-06-04). "E. coli Thrives in Beach Sands". Live Science. http://www.livescience.com/health/070604_beach_ecoli.html. பார்த்த நாள்: 2007-12-03. 
  8. "Escherichia". Taxonomy Browser. NCBI. பார்க்கப்பட்ட நாள் 2007-11-30. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  9. லாரன்ஸ், ஜே.ஜீ. மற்றும் ஓச்மன், எச். (1998) எஷ்சரிச்சியா கோலை ஜீனோமின் மூலக்கூற்று அகழாய்வியல். பிரொசீடிங்கஸ் ஆஃப் த நேஷனல் அகடமி சைன்சஸ் யூ.எஸ்.ஏ 95:9413-9417 பீ.எம்.சி21352
  10. 10.0 10.1 Nataro JP, Kaper JB (January 1998). "Diarrheagenic Escherichia coli". Clin. Microbiol. Rev. 11 (1): 142–201. பப்மெட்:9457432. 
  11. Kubitschek HE (1 January 1990). "Cell volume increase in Escherichia coli after shifts to richer media". J. Bacteriol. 172 (1): 94–101. பப்மெட்:2403552. பப்மெட் சென்ட்ரல்:208405. http://jb.asm.org/cgi/pmidlookup?view=long&pmid=2403552. 
  12. Madigan MT, Martinko JM (2006). Brock Biology of microorganisms (11th ed.). Pearson. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-196893-9.
  13. Fotadar U, Zaveloff P, Terracio L (2005). "Growth of Escherichia coli at elevated temperatures". J. Basic Microbiol. 45 (5): 403–4. doi:10.1002/jobm.200410542. பப்மெட்:16187264. 
  14. Ingledew WJ, Poole RK (1984). "The respiratory chains of Escherichia coli". Microbiol. Rev. 48 (3): 222–71. பப்மெட்:6387427. 
  15. டாண்டன் என்.சி, டர்னர் எல், ரோஜெவ்ஸ்கை எஸ், பெர்க் எச்.சி, ஆன் டார்க் அண்ட் டம்ப்லிங் இன் ஸ்விம்மிங் எஷ்சரிச்சியா கோலை. த ஜர்னல் ஆஃப் பாக்டீரியலாஜி 2007 மார்ச்;189(5):1756-64. ஈபப் 2006ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி.
  16. Brüssow H, Canchaya C, Hardt WD (September 2004). "Phages and the evolution of bacterial pathogens: from genomic rearrangements to lysogenic conversion". Microbiol. Mol. Biol. Rev. 68 (3): 560–602. doi:10.1128/MMBR.68.3.560-602.2004. பப்மெட்:15353570. பப்மெட் சென்ட்ரல்:515249. http://mmbr.asm.org/cgi/pmidlookup?view=long&pmid=15353570. 
  17. 17.0 17.1 17.2 17.3 17.4 17.5 17.6 Todar, K. "Pathogenic E. coli". Online Textbook of Bacteriology. University of Wisconsin–Madison Department of Bacteriology. பார்க்கப்பட்ட நாள் 2007-11-30. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  18. 18.0 18.1 Evans Jr., Doyle J. "Escherichia Coli". Medical Microbiology, 4th edition. The University of Texas Medical Branch at Galveston. பார்க்கப்பட்ட நாள் 2007-12-02. {{cite web}}: Unknown parameter |coauthors= ignored (help)
  19. Grozdanov, L; Raasch, C; Schulze, J; Sonnenborn, U; Gottschalk, G; Hacker, J; Dobrindt, U (August 2004). "Analysis of the genome structure of the nonpathogenic probiotic Escherichia coli strain Nissle 1917.". J Bacteriol 186 (16): 5432–41. doi:10.1128/JB.186.16.5432-5441.2004. பப்மெட்:15292145. 
  20. Kamada, N; Inoue, N; Hisamatsu, T; Okamoto, S; Matsuoka, K; Sato, T; Chinen, H; Hong, KS et al. (May 2005). "Nonpathogenic Escherichia coli strain Nissle1917 prevents murine acute and chronic colitis.". Inflamm Bowel Dis 11 (5): 455–63. doi:10.1097/01.MIB.0000158158.55955.de. பப்மெட்:15867585. 
  21. Tauschek M, Gorrell R, Robins-Browne RM,. "Identification of a protein secretory pathway for the secretion of heat-labile enterotoxin by an enterotoxigenic strain of Escherichia coli". PNAS 99: 7066–71. doi:10.1073/pnas.092152899. பப்மெட்:12011463. http://www.pnas.org/cgi/content/abstract/99/10/7066. 
  22. "Gene Sequence Of Deadly E. Coli Reveals Surprisingly Dynamic Genome". Science Daily. 2001-01-25. பார்க்கப்பட்ட நாள் 2007-02-08.
  23. Wong CS, Jelacic S, Habeeb RL, et al. (29 June 2000). "The risk of the hemolytic-uremic syndrome after antibiotic treatment of Escherichia coli O157:H7 infections.". N Engl J Med 342 (26): 1930–6. பப்மெட்:10874060. 
  24. Rolhion N, Darfeuille-Michaud A (2007). "Adherent-invasive Escherichia coli in inflammatory bowel disease". Inflamm. Bowel Dis. 13 (10): 1277–83. doi:10.1002/ibd.20176. பப்மெட்:17476674. 
  25. Baumgart M, Dogan B, Rishniw M, et al. (2007). "Culture independent analysis of ileal mucosa reveals a selective increase in invasive Escherichia coli of novel phylogeny relative to depletion of Clostridiales in Crohn's disease involving the ileum". ISME J 1 (5): 403–18. doi:10.1038/ismej.2007.52. பப்மெட்:18043660. 
  26. உலக சுகாதார நிறுவனம். பரணிடப்பட்டது 2012-05-15 at the வந்தவழி இயந்திரம்எண்டீரோடாக்ஸிஜீனிக் எஷ்சரிச்சியா கோலை (ஈ.டீ.ஈ.சி). பரணிடப்பட்டது 2012-05-15 at the வந்தவழி இயந்திரம்
  27. Rendón, M. A.; et al. (2007). "Commensal and pathogenic Escherichia coli use a common pilus adherence factor for epithelial cell colonization". PNAS 104 (25): 10637–42. doi:10.1073/pnas.0704104104. பப்மெட்:17563352. 
  28. 28.0 28.1 28.2 28.3 "Retail Establishments; Annex 3 - Hazard Analysis". Managing Food Safety: A Manual for the Voluntary Use of HACCP Principles for Operators of Food Service and Retail Establishments. U.S. Department of Health and Human Services Food and Drug Administration Center for Food Safety and Applied Nutrition. 2006. Archived from the original on 2007-06-07. பார்க்கப்பட்ட நாள் 2007-12-02. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help); Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  29. Gehlbach, S.H.; J.N. MacCormack, B.M. Drake, W.V. Thompson (April 1973). "Spread of disease by fecal-oral route in day nurseries". Health Service Reports 88 (4): 320–322. பப்மெட்:4574421. 
  30. 30.0 30.1 Sabin Russell (October 13, 2006). "Spinach E. coli linked to cattle; Manure on pasture had same strain as bacteria in outbreak". San Francisco Chronicle. http://www.sfgate.com/cgi-bin/article.cgi?file=/c/a/2006/10/13/MNG71LOT711.DTL. பார்த்த நாள்: 2007-12-02. 
  31. Heaton JC, Jones K (March 2008). "Microbial contamination of fruit and vegetables and the behaviour of enteropathogens in the phyllosphere: a review". J. Appl. Microbiol. 104 (3): 613–26. doi:10.1111/j.1365-2672.2007.03587.x. பப்மெட்:17927745. http://www3.interscience.wiley.com/resolve/openurl?genre=article&sid=nlm:pubmed&issn=1364-5072&date=2008&volume=104&issue=3&spage=613. [தொடர்பிழந்த இணைப்பு]
  32. Thomas R. DeGregori (2007-08-17). "CGFI: Maddening Media Misinformation on Biotech and Industrial Agriculture". Archived from the original on 2007-10-13. பார்க்கப்பட்ட நாள் 2007-12-08.
  33. Chalmers, R.M.; H. Aird, F.J. Bolton (2000). "Waterborne Escherichia coli O157". Society for Applied Microbiology Symposium Series (29): 124S–132S. பப்மெட்:10880187. 
  34. 34.0 34.1 Bach, S.J.; T.A. McAllister, D.M. Veira, V.P.J. Gannon, and R.A. Holley (2002). "Transmission and control of Escherichia coli O157:H7". Canadian Journal of Animal Science 82: 475–490. http://pubs.nrc-cnrc.gc.ca/aic-journals/2002ab/cjas02/dec02/cjas02-021.html. 
  35. Institute of Medicine of the National Academies (2002). Escherichia coli O157:H7 in Ground Beef: Review of a Draft Risk Assessment. Washington, D.C.: The National Academies Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-309-08627-2. {{cite book}}: Cite has empty unknown parameters: |chapterurl= and |coauthors= (help); More than one of |author= and |last= specified (help)
  36. Szalanski A, Owens C, McKay T, Steelman C (2004). "Detection of Campylobacter and Escherichia coli O157:H7 from filth flies by polymerase chain reaction". Med Vet Entomol 18 (3): 241–6. doi:10.1111/j.0269-283X.2004.00502.x. பப்மெட்:15347391. http://doi.org/10.1111/j.0269-283X.2004.00502.x. 
  37. Sela S, Nestel D, Pinto R, Nemny-Lavy E, Bar-Joseph M (2005). "Mediterranean fruit fly as a potential vector of bacterial pathogens". Appl Environ Microbiol 71 (7): 4052–6. doi:10.1128/AEM.71.7.4052-4056.2005. பப்மெட்:16000820. 
  38. Alam M, Zurek L (2004). "Association of Escherichia coli O157:H7 with houseflies on a cattle farm". Appl Environ Microbiol 70 (12): 7578–80. doi:10.1128/AEM.70.12.7578-7580.2004. பப்மெட்:15574966. 
  39. Rahn, K.; S.A. Renwick, R.P. Johnson, J.B. Wilson, R.C. Clarke, D. Alves, S.A. McEwen, H. Lior, J. Spika (April 1998). "Follow-up study of verocytotoxigenic Escherichia coli infection in dairy farm families". Journal of Infectious Disease 177 (4): 1139–1140. doi:10.1086/517394. பப்மெட்:9535003. 
  40. Trevena, W.B.; G.A Willshaw, T. Cheasty, G. Domingue, C. Wray (December 1999). "Transmission of Vero cytotoxin producing Escherichia coli O157 infection from farm animals to humans in Cornwall and west Devon". Community Disease and Public Health 2 (4): 263–268. பப்மெட்:10598383. 
  41. Heuvelink, A.E.; C. van Heerwaarden, J.T. Zwartkruis-Nahuis, R. van Oosterom, K. Edink, Y.T. van Duynhoven and E. de Boer (October 2002). "Escherichia coli O157 infection associated with a petting zoo". Epidemiology and Infection 129 (2): 295–302. doi:10.1017/S095026880200732X. பப்மெட்:12403105. 
  42. Varma, J.K.; K.D. Greene, M.E. Reller, S.M. DeLong, J. Trottier, S.F. Nowicki, M. DiOrio, E.M. Koch, T.L. Bannerman, S.T. York, M.A. Lambert-Fair, J.G. Wells, P.S. Mead (November 26 2003). "An outbreak of Escherichia coli O157 infection following exposure to a contaminated building". JAMA 290 (20): 2709–2712. doi:10.1001/jama.290.20.2709. பப்மெட்:14645313. 
  43. [101]
  44. Nicolle LE (February 2008). "Uncomplicated urinary tract infection in adults including uncomplicated pyelonephritis". Urol. Clin. North Am. 35 (1): 1–12, v. doi:10.1016/j.ucl.2007.09.004. பப்மெட்:18061019. 
  45. Justice S, Hunstad D, Seed P, Hultgren S (2006). "Filamentation by Escherichia coli subverts innate defenses during urinary tract infection". Proc Natl Acad Sci U S A 103 (52): 19884–9. doi:10.1073/pnas.0606329104. பப்மெட்:17172451. 
  46. Ehrlich G, Hu F, Shen K, Stoodley P, Post J (August 2005). "Bacterial plurality as a general mechanism driving persistence in chronic infections". Clin Orthop Relat Res (437): 20–4. doi:10.1073/pnas.0606329104. பப்மெட்:16056021. 
  47. Paton JC, Paton AW (1 July 1998). "Pathogenesis and diagnosis of Shiga toxin-producing Escherichia coli infections". Clin. Microbiol. Rev. 11 (3): 450–79. பப்மெட்:9665978. பப்மெட் சென்ட்ரல்:88891. http://cmr.asm.org/cgi/pmidlookup?view=long&pmid=9665978. [தொடர்பிழந்த இணைப்பு]
  48. De Boer E, Heuvelink AE (2000). "Methods for the detection and isolation of Shiga toxin-producing Escherichia coli". Symp Ser Soc Appl Microbiol (29): 133S–143S. பப்மெட்:10880188. 
  49. Johnson J, Kuskowski M, Menard M, Gajewski A, Xercavins M, Garau J (2006). "Similarity between human and chicken Escherichia coli isolates in relation to ciprofloxacin resistance status". J Infect Dis 194 (1): 71–8. doi:10.1086/504921. பப்மெட்:16741884. http://www.journals.uchicago.edu/JID/journal/issues/v194n1/35787/35787.html. 
  50. "Adaptive Mutations in Bacteria: High Rate and Small Effects". Science Magazine. 10 August 2007. பார்க்கப்பட்ட நாள் 10 September 2007.
  51. Salyers AA, Gupta A, Wang Y (2004). "Human intestinal bacteria as reservoirs for antibiotic resistance genes". Trends Microbiol. 12 (9): 412–6. doi:10.1016/j.tim.2004.07.004. பப்மெட்:15337162. 
  52. Paterson DL, Bonomo RA (2005). "Extended-spectrum beta-lactamases: a clinical update". Clin. Microbiol. Rev. 18 (4): 657–86. doi:10.1128/CMR.18.4.657-686.2005. பப்மெட்:16223952. 
  53. "HPA Press Statement: Infections caused by ESBL-producing E. coli". Archived from the original on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2010-06-16.
  54. "Therapeutic use of bacteriophages in bacterial infections". Polish Academy of Sciences.
  55. "Medical conditions treated with phage therapy". Phage Therapy Center.
  56. "OmniLytics Announces USDA/FSIS Approval for Bacteriophage Treatment of E. coli O157:H7 on Livestock". OmniLytics. Archived from the original on 2007-09-30. பார்க்கப்பட்ட நாள் 2010-06-16.
  57. Girard M, Steele D, Chaignat C, Kieny M (2006). "A review of vaccine research and development: human enteric infections". Vaccine 24 (15): 2732–50. doi:10.1016/j.vaccine.2005.10.014. பப்மெட்:16483695. 
  58. 58.0 58.1 Ahmed A, Li J, Shiloach Y, Robbins J, Szu S (2006). "Safety and immunogenicity of Escherichia coli O157 O-specific polysaccharide conjugate vaccine in 2-5-year-old children". J Infect Dis 193 (4): 515–21. doi:10.1086/499821. பப்மெட்:16425130. 
  59. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-01-08. பார்க்கப்பட்ட நாள் 2021-12-30.
  60. Pearson H (2007). "The dark side of E. coli". Nature 445 (7123): 8–9. doi:10.1038/445008a. பப்மெட்:17203031. 
  61. "New cattle vaccine controls E. coli infections". Canada AM. 2007-01-11. Archived from the original on 2007-01-13. பார்க்கப்பட்ட நாள் 2007-02-08. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  62. Bioniche Life Sciences Inc.(2007-01-10). "Canadian Research Collaboration Produces World's First Food Safety Vaccine: Against E. coli O157:H7". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2007-02-08. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-10-11. பார்க்கப்பட்ட நாள் 2021-12-20.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  63. http://www.physorg.com/news158951048.html
  64. 64.0 64.1 Lee SY (1996). "High cell-density culture of Escherichia coli". Trends Biotechnol. 14 (3): 98–105. doi:10.1016/0167-7799(96)80930-9. பப்மெட்:8867291. 
  65. Russo E (January 2003). "The birth of biotechnology". Nature 421 (6921): 456–7. doi:10.1038/nj6921-456a. பப்மெட்:12540923. http://www.nature.com/nature/journal/v421/n6921/full/nj6921-456a.html. 
  66. Tof, Ilanit (1994). "Recombinant DNA Technology in the Synthesis of Human Insulin". Little Tree Pty. Ltd. பார்க்கப்பட்ட நாள் 2007-11-30. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  67. Cornelis P (2000). "Expressing genes in different Escherichia coli compartments". Curr. Opin. Biotechnol. 11 (5): 450–4. doi:10.1016/S0958-1669(00)00131-2. பப்மெட்:11024362. 
  68. "E.coli can solve math problems". The Deccan Chronicle. July 26, 2009. பார்க்கப்பட்ட நாள் July 26, 2009.[தொடர்பிழந்த இணைப்பு]
  69. Fux CA, Shirtliff M, Stoodley P, Costerton JW (2005). "Can laboratory reference strains mirror "real-world" pathogenesis?". Trends Microbiol. 13 (2): 58–63. doi:10.1016/j.tim.2004.11.001. பப்மெட்:15680764. https://archive.org/details/sim_trends-in-microbiology_2005-02_13_2/page/58. 
  70. Vidal O, Longin R, Prigent-Combaret C, Dorel C, Hooreman M, Lejeune P (1998). "Isolation of an Escherichia coli K-12 mutant strain able to form biofilms on inert surfaces: involvement of a new ompR allele that increases curli expression". J. Bacteriol. 180 (9): 2442–9. பப்மெட்:9573197. 
  71. Lederberg, Joshua; E.L. Tatum (October 19 1946). "Gene recombination in E. coli" (PDF). Nature 158: 558. doi:10.1038/158558a0. http://profiles.nlm.nih.gov/BB/G/A/S/Z/_/bbgasz.pdf.  மூலம்: நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசன் - த ஜோசுவா லெடெர்பெர்க் பேப்பர்ஸ்
  72. "The Phage Course - Origins". Cold Spring Harbor Laboratory. 2006. Archived from the original on 2002-07-20. பார்க்கப்பட்ட நாள் 2007-12-03. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  73. Benzer, Seymour (March 1961). "On the topography of the genetic fine structure". PNAS 47 (3): 403–15. doi:10.1073/pnas.47.3.403. 
  74. பாக்டீரியா ஆய்வுக்கூடத்தில் ஒரு பெரிய பரிணாம மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது நியூ சைண்டிஸ்ட்
  75. Keymer J.E., P. Galajda, C. Muldoon R., and R. Austin (November 2006). "Bacterial metapopulations in nanofabricated landscapes". PNAS 103 (46): 17290–295. doi:10.1073/pnas.0607971103. 

புற இணைப்புகள்

தொகு


பொதுவானவை

தொகு

தரவுத்தளங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசரிக்கியா_கோலை&oldid=3933512" இலிருந்து மீள்விக்கப்பட்டது