பெனிசிலின்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பெனிசிலின் என்பது பக்டீரியாத் தொற்றைக் குணப்படுத்துவதற்காகப் பயன்படும் ஒரு தொகுதி பீட்டா-லாக்டம் நுண்ணுயிர்க் கொல்லிகளைக் குறிக்கும். இப்பெயர் பொது வழக்கில் இத்தொகுதியில் உள்ள பெனாம் (Penam) என்னும் குறிப்பிட்ட ஒரு நுண்ணுயிர்க் கொல்லியைக் குறிக்கவும் பயன்படுவதுண்டு. இதன் மூலக்கூற்றுச் சூத்திரம் R-C9H11N2O4S ஆகும். இதில் R மாறக்கூடிய பக்கச் சங்கிலியாகும்.
வரலாறு
தொகுபெனிசிலினைக் கண்டுபிடித்தவர் ஸ்காட்லாந்தினரான சர் அலெக்சாண்டர் பிளெமிங் என்பவராவார். இந்தக் கண்டுபிடிப்பு 1928 இல் இடம்பெற்றது. எனினும், இதை முதன்முதலில் ஒரு மருந்தாகப் பயன்படுத்தியவர் நோபல் பரிசு பெற்றவரும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவருமான ஹோவார்ட் வால்ட்டர் புளோரே (Howard Walter Florey) என்பவராவார்.
எனினும், பெனிசிலியத்தின் நுண்ணுயிர்ப் பெருக்கத் தடுப்பு இயல்பு பற்றிப் பலரும் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்த முதல் குறிப்பு 1875 ஆம் ஆண்டுக்குரியது. அப்போது ஜான் டிண்டால் (John Tyndall) என்பவர் இது பற்றி இலண்டனில் உள்ள அரச சங்கத்துக்கு (Royal Society) அறிவித்துள்ளார். ஏர்னெஸ்ட் டுச்செஸ்ட்னே என்பவர் 1897 ஆம் ஆண்டில் தனது ஆய்வுக் கட்டுரையில் இது பற்றிக் குறிப்பிட்டார். ஆனால் அவர் இளவயதினராக இருந்ததால் பாஸ்டர் நிறுவனம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
வெளியிணைப்புகள்
தொகு- Model of Structure of Penicillin, by Dorothy Hodgkin et al., Museum of the History of Science, Oxford
- யூடியூபில் The Discovery of Penicillin, A government produced film about the discovery of Penicillin by Sir Alexander Fleming, and the continuing development of its use as an antibiotic by Howard Florey and Ernst Boris Chain.
- Penicillin at The Periodic Table of Videos (University of Nottingham)
- Penicillin Released to Civilians Will Cost $35 Per Patient Popular Science, August 1944, article at bottom of page