லாக்டம் (lactam) ஒரு வளைய அமைடு (cyclic amide) ஆகும். இதில் கார்பொனைல் தொகுதியொன்றும் அமைடு தொகுதி ஒன்றும் அமைந்திருக்கும்.[1][2][3]

இடமிருந்து வலம், β-லாக்டம், γ-லாக்டம் மற்றும் δ-லாக்டம் ஆகியவற்றின் பொது அமைப்பு.

பெயர்க்காரணம்

தொகு

லாக்டம் எனும் பெயர் லாக்டோன் மற்றும் அமைடு ஆகியவற்றின் கூட்டுப்பெயராகும்.

வகைகள்

தொகு

வளையத்தில் அமைடு கார்பொனைல் தொகுதியிலிருந்து அமையுமிடத்தைப் பொறுத்து மூன்று வகைகள் உள்ளன. அவையாவன,

β-லாக்டம் - (2,4) இது மொத்தம் நான்கு கார்பன்கள் கொண்ட வளையம் ஆகும். கார்பொனைல் தொகுதியிலிருந்து இரண்டு கார்பன்கள் தள்ளி அமைடு தொகுதி அமைந்திருக்கும்.

γ-லாக்டம் - (3,5)இது மொத்தம் ஐந்து கார்பன்களைக் கொண்டது. கார்பொனைல் தொகுதியிலிருந்து மூன்று கார்பன்கள் தள்ளி அமைடு தொகுதி அமைந்திருக்கும்.

δ-லாக்டம் - (4,6) இது ஆறு கார்பன்கள் கொண்ட வளையமாகும். கார்பொனைல் தொகுதியிலிருந்து நான்கு கார்பன்கள் தள்ளி அமைடு தொகுதி அமைந்திருக்கும்.

வேதிவினைகள்

தொகு

பலபடியாக்க வினை மூலம் இவை பல்அமைடுகளாக (polyamide) மாற்றப்படுகின்றன. இந்த பல்அமைடுகள் தொழில் துறையில் பயன்படுகின்றன.

பெனிசிலின்

தொகு

பெனிசிலின் பாக்டீரியக்கொல்லிகளின் ஆதார அமைப்பு β-லாக்டம் வளையமே ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Lam, Pak-Lun; Wu, Yue; Wong, Ka-Leung (30 March 2022). "Incorporation of Fmoc-Dab(Mtt)-OH during solid-phase peptide synthesis: a word of caution" (in en). Organic & Biomolecular Chemistry 20 (13): 2601–2604. doi:10.1039/D2OB00070A. பன்னாட்டுத் தர தொடர் எண்:1477-0539. பப்மெட்:35258068. https://pubs.rsc.org/en/content/articlelanding/2022/ob/d2ob00070a. 
  2. Spencer Knapp, Frank S. Gibson Organic Syntheses, Coll. Vol. 9, p.516 (1998); Vol. 70, p.101 (1992) Online article
  3. Singh, R.; Vince, R. Chem. Rev. 2012, 112 (8), pp 4642–4686."2-Azabicyclo[2.2.1]hept-5-en-3-one: Chemical Profile of a Versatile Synthetic Building Block and its Impact on the Development of Therapeutics"
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாக்டம்&oldid=4102683" இலிருந்து மீள்விக்கப்பட்டது