சதாநிருத்த மூர்த்தி

சிவ வடிவங்களில் ஒன்றான
சதாநிருத்த மூர்த்தி
மூர்த்த வகை:
64 சிவவடிவங்கள்
விளக்கம்: தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் சிவ வடிவம்
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்

சதாநிருத்த மூர்த்தி என்பது சைவசமயக் கடவுளான சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒன்றாகும். சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்து தொழில்களையும் நடனம் ஆடியபடி நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இந்த திருநடன உருவத்தினை உமையம்மை இடமிருந்து தரிசிக்கும் பொழுது சிவகனங்களும், தேவர்களும், நந்தி தேவரும் வாத்தியங்களில் இசையை ஒலித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த திருவுருவம் சதாநிருத்த மூர்த்தி எனப்படுகிறது. [1]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=779 தினமலர் கோயில்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதாநிருத்த_மூர்த்தி&oldid=1776172" இலிருந்து மீள்விக்கப்பட்டது