சதி சதானி

இந்திய அரசகுலப் பெண்கள்

சதி சதானி (Sati Sadhani) இந்தியாவில் இருந்த சுதியா வம்சத்தின் புகழ்பெற்ற ராணியாவார்.

சதி சதானி
Sati Sadhani
இராணி சதானியின் நவீன சித்தரிப்பு
ஆட்சிக்காலம்1522-1524
முடிசூட்டுதல்1522
பிறப்புசாதியா, அசாம்
இறப்பு21 ஏப்ரல்,1524
சந்தங்கிரி மலை, சாதியா, அசாம்
துணைவர்நிதிபால்
மரபுசுதியா நாடு
தந்தைதர்மத்வாச்பால் (திர்நாராயணன்)

திர்நாராயணன் என்று அழைக்கப்படும் மன்னன் தர்மத்வாச்பாலின் மகள் ஆவார். சாதியாவில் பிறந்த இவர் நிதாய் என்ற நித்யாபால் என்பவரை மணந்து கொண்டார். 1524 ஆம் ஆண்டில், அகோம்கள் நித்யாபாலின் பலவீனமான தலைமையைப் பயன்படுத்தி, சாம்ராச்சியத்தைத் தாக்கி, சாதியாவை வென்று நித்யாபாலைக் கொன்றனர். அகோம்களுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய சதானி, சாதியாவின் அகோம் கவர்னரான சதியாகோவா கோகைனை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கப்பட்டபோது, அவமானத்தை விட மரணத்தை விரும்பி, 1524 ஆம் ஆண்டில் சாதியாவுக்கு அருகிலுள்ள சந்திரகிரி மலையின் உச்சியில் இருந்து குதித்து தனது உயிரைத் தியாகம் செய்தார்.

திவாசு

தொகு

அசாமில் ஒவ்வோர் ஆண்டும், சுதிய ராணியின் தியாகத்தை போற்றும் வகையில் ஏப்ரல் 21 அன்று சதி சதானி திவாசு கொண்டாடப்படுகிறது. அசாம் அரசு இந்த நாளை அரசு விடுமுறையாகக் குறித்தது. [1] [2]

விருது

தொகு

சதி சதானி விருது சுதிய சாதி உன்னயன் பரிசத்தால் நிறுவப்பட்டது. கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. பரிசத் அமைத்த குழுவால் கௌரவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். [3]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Sati Sadhani Divas observed at North Lakimpur". Archived from the original on 2015-09-24.
  2. "Sati Sadhani Divas around the world in 2021". Office Holidays (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-19.
  3. "Sati Sadhani Award being launched".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதி_சதானி&oldid=3893111" இலிருந்து மீள்விக்கப்பட்டது