சதீந்திர மோகன் தேவ் விளையாட்டரங்கம்
சதீந்திர மோகன் தேவ் விளையாட்டரங்கம் (Satindra Mohan Dev Stadium) இந்தியாவின் அசாம் மாநிலம் சில்சாரில் அமைந்துள்ளது. ஒரு பல்நோக்கு விளையாட்டரங்கமான இது முன்னதாக மாவட்ட விளையாட்டு சங்க அரங்கம் என்று அழைக்கப்பட்டது. வசதிகள் விரிவாக மேம்படுத்தப்பட்ட பிறகு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீ சந்தோசு மோகன் தேவ் தந்தையின் பெயரில் அரங்கத்திற்கு மறுபெயரிடப்பட்டது. இந்த மைதானம் கால்பந்து மற்றும் துடுப்பாட்டத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. சுமார் 30,000 பேர் அமர்ந்து பார்க்கும் திறன் கொண்டது. [1] இந்திய மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான மகளிர் பன்னாட்டு ஒரு நாள் போட்டி இங்கு நடைபெற்றது. [2] ரஞ்சி கோப்பை [3] மற்றும் துலீப் கோப்பை போட்டிகளும் இங்கு நடைபெற்றுள்ளன. 2008 ஆம் ஆண்டில் பாரத மிகு மின் நிறுவனத்தின் மூலம் ஒளிவெள்ளம் பாய்ச்சும் பரப்பு விளக்குகள் நிறுவப்பட்டன [4] 2009 ஆம் ஆண்டில், கூட்டமைப்பு கோப்பை கால்பந்து போட்டியின் தொகுதிப் போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற்றன.
அரங்கத் தகவல் | |||
---|---|---|---|
அமைவிடம் | சில்சார், அசாம் | ||
இருக்கைகள் | 30,000 | ||
உரிமையாளர் | சில்சார் மாவட்ட விளையாட்டு சங்கம் | ||
குத்தகையாளர் | அசாம் துடுப்பாட்ட அணி | ||
முடிவுகளின் பெயர்கள் | |||
n/a n/a | |||
பன்னாட்டுத் தகவல் | |||
ஒரே மஒநாப | 7 திசம்பர் 2005: இந்தியா எ இங்கிலாந்து | ||
அணித் தகவல் | |||
| |||
8 திசம்பர் 2019 இல் உள்ள தரவு மூலம்: Cricketarchive |
ஒரு நாள் பன்னாட்டுப் போட்டிகள்
தொகுஇந்த மைதானத்தில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளின் பட்டியல் இது.
எஸ் எண் | அணி (A) | அணி (பி) | வெற்றி | வகை | ஆண்டு |
---|---|---|---|---|---|
1 | இந்தியா | இங்கிலாந்து | இந்தியா | 10 விக்கெட் வித்தியாசம் | 2005 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Match to inaugurate floodlights - New cricket pavilion to be opened to public q International players to attend". https://www.telegraphindia.com/1081205/jsp/guwahati/story_10206194.jsp.
- ↑ Women's ODI
- ↑ "Assam v Tripura at Silchar, 08-10 Jan 1987".
- ↑ Silchar stadium ready for ODIs as floodlights worth Rs 5 crore installed