சதுர தர்ப்பூசணி
கன சதுர வடிவில் வளர்க்கப்படும் தர்ப்பூசணி சதுர தர்ப்பூசணி என அழைக்கப்படுகிறது. சிறிய குளிர்சாதனப் பெட்டிகளின் இடவசதியை திறம்பட பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு இவை உருவாக்கப்பட்டன. இத்தகைய சதுர தர்ப்பூசணிகள் ஜப்பான் நாட்டில் மிகவும் பிரபலம் ஆகும். பொதுவாக இவ்வகை கனசதுர தர்ப்பூசணிகள் விலை மிகுந்தவையாகும். இவற்றை புதுமையான உருவாக்கம் எனும் பெருமையிலேயே அதிகம் வாங்குகின்றனர். இலகுவாக வெட்டும் பொருட்டு 1978 ஆம் ஆண்டு தோமோயுகி ஓனோ (Tomoyuki Ono) என்பவரால் இவை முதலில் வளர்க்கப்பட்டன. இதை முதலில் தோக்கியோ நகரின் ஸின்ஸா காட்சியகத்தில் பார்வைக்கு வைத்திருந்தார்.[1] மேலும் அமெரிக்காவில் இதற்கு காப்புரிமையும் பெற்றிருக்கிறார். இதைத் தொடர்ந்து இதய வடிவ மற்றும் பிரமிடு வடிவ தர்ப்பூசணிகளும் புழக்கத்தில் வந்தன.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Melonen nun im Quadrat, Arbeiter-Zeitung, 1978-08-21, p. 5 (Austrian Newspaper, German)
- ↑ "Square fruit: Odd-shaped melons herald Japan summer". CTVNews. 4 July 2015. பார்க்கப்பட்ட நாள் 31 July 2015.
- ↑ Paton, Callum (3 July 2015). "Japan: Heart-shaped melons go on sale as part of country's tradition of extravagant fruit gifts". International Business Times UK. பார்க்கப்பட்ட நாள் 31 July 2015.