சத்தியமங்கலம் போர்

சத்தியமங்கலம் போர் ( Battle of Sittimungulum) (மாறுபாடு உச்சரிப்புகள் Sattiamungulum, Sathinungulum, Satyamanagalam அடங்கும்) என்பது மூன்றாம் ஆங்கிலோ-மைசூர் போரின்போது, 1790 செப்டம்பர் 13 முதல் 15 வரை, மைசூர் சுல்தானகத்தின் தெற்குப் பகுதியில் சத்தியமங்கலம் நகரத்திற்கு அருகில் நடந்த தொடர்ச்சியான சண்டைகள் ஆகும். மைசூரின் ஆட்சியாளர் திப்பு சுல்தானின் படைகள் கேப்டன் ஜான் ஃபிலாய்டின் தலைமையிலான பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் படைகளை கிட்டத்தட்ட முறியடித்தன.

சத்தியமங்கலம் போர்
மூன்றாவது ஆங்கிலேய மைசூர் போர் பகுதி
நாள் 13–15 செப்டம்பர் 1790
இடம் சத்தியமங்கலம்
மைசூரின் வெற்றி
பிரிவினர்
மைசூர் அரசு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்
இழப்புகள்
500

திப்பு செப்டம்பர் 9 ஆம் தேதி கஜல்ஹட்டி கணவாய் வழியாக வந்தார், பிலாய்டின் படைகளைத் தாக்கினார், 500 பேர் உயிரிழந்த நிலையில் பிளாய்டை கோயம்புத்தூருக்கு பின்வாங்கும் கட்டாயத்துக்கு ஆளானார். இப்போரில் திப்பு "தனது திறமையான தளபதிகளில் ஒருவரான" புர்ஹர்-உத்-தினை இழந்தார். கமுர் உத் கானின் ஆலோசனையின் பேரில் திப்பு இந்தப் பகுதியை விட்டு வெளியேறினார், அதே நேரத்தில் அவர் பிரித்தானியர்களின் மீதான தாக்குதல்களை வேறு இடங்களில் நடத்தினார்.

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தியமங்கலம்_போர்&oldid=3056875" இலிருந்து மீள்விக்கப்பட்டது