சத்திரக்குடி
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமம்
சத்திரக்குடி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள போகலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓர் சிற்றூர் ஆகும்[1]. இங்கு ஒரு தொடருந்து நிலையமும் உண்டு. இராமநாதபுரத்திற்கும் மானாமதுரைக்கும் இடைப்பட்ட தொடருந்து வழித்தடத்தில் இது ஒரு நிறுத்தமாகும்.
பெயர்க் காரணம்
தொகுமன்னர் காலத்தில் இராமேசுவரம் செல்லும் பயணிகளுக்காக போகலூரில் சத்திரம் ஒன்று அமைக்கப்பட்டது. அந்தச் சத்திரம் இருந்த இடம் பின்னாளில் சத்திரம் என்றும் இப்போது சத்திரக்குடி என்றும் மருவி வந்துள்ளது . போகலூர் கிராமத்தில் உள்ள ஒரு பகுதி.