சத்தீசு கே. அக்னிகோத்ரி
சத்தீசு கே. அக்னிகோத்ரி (Satish K. Agnihotri) இந்தியாவைச் சேர்ந்த சிக்கிம் மாநில உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார். முன்னதாக இவர் தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், சத்தீசுகரின் பிலாசுபூரில் உள்ள சத்தீசுகர் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.[1] சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக 26 செப்டம்பர் 2013 அன்று பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். கே. அகர்வாலுக்குப் பதிலாக பதவியேற்றார்.[2] 2014 பிப்ரவரி 13 அன்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். நீதிபதி சுனில் குமார் சின்காவிற்குப் பிறகு சிக்கிம் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அக்னிகோத்ரி 22 செப்டம்பர் 2016 அன்று பொறுப்பேற்றார்.[3]
சத்தீசு குமார் அக்னிகோத்ரி ரேவாவில் உள்ள ஏ.பி.எசு பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டப்படிப்பும் வரலாற்றில் முதுகலை பட்டமும் பெற்ற பிறகு, 1982 ஆம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டப் பட்டம் பெற்றார். 1982 ஆம் ஆகத்து மாதத்தில் தில்லி பார் கவுன்சிலில் பதிவு செய்து வழக்கறிஞர் தொழிலை தொடங்கினார். 1988 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் நிலையான வழக்கறிஞராக (சிவில்) நியமிக்கப்பட்டார். மேலும் சத்தீசுர் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறும் தேதி வரை அதாவது 2005 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி வரை தொடர்ந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Forer Judges of Chhattisgarh High Court". Chhattisgarh High Court. பார்க்கப்பட்ட நாள் 25 April 2014.
- ↑ Swearing in ceremony
- ↑ "Chief Justice of Madras High Court". Madras High Court. பார்க்கப்பட்ட நாள் 25 April 2014.