சத்தீசு சந்திரா
சத்தீசு சந்திரா என்பவர் இந்தியாவைச் சேர்ந்த வரலாற்றாய்வாளர். இந்திய இடைக்கால வரலாற்றில் பரந்த அறிவு கொண்டவர். இடைக்கால இந்தியா என்ற இவர் எழுதிய நூல் பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் பாட நூலாக வைக்கப்பட்டுள்ளது.[1]
புதுதில்லி சவகர்லால் நேரு பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசிரியராக இருந்தார்.
பணிகள்
தொகு- கோபால், பிபன் சந்திரா, ரூமிலா தாப்பர் ஆகிய வரலாற்றாசிரியர்களுடன் இணைந்து வரலாற்று ஆய்வு மையம் ஒன்றைத் தோற்றுவித்தார்.
- பல்கலைக் கழக மானியக் குழுவில் உதவித் தலைவராகவும் தலைவராகவும் இருந்தார்.
- இந்திய வரலாற்றுப் பேராயத்தில் செயலராகவும் தலைவராகவும் இருந்தார்.
- ஆட்சிப் பணிகள் தேர்வுக் குழுவில் சதீசு சந்திரா தலைவராக அமர்த்தப்பட்டார்.