சத்து மா (உணவு)

சத்து மா (Sattu) என்பது பருப்புகளும் சிறுகூலங்களும் கலந்த மாவு அல்லது பொடியாகும். இது இந்தியாவிலும் பாக்கித்தானிலும் முதன்மை உணவாகவோ துணை உணவாகவோ பயன்படுகிறது.

வரலாறு தொகு

சத்து மா பொடித்தல் மிகப் பண்டைய கால முதலே வழக்கில் இருந்து வருகிறது[1]இது இந்தியா முழுவதிலும் பரவலாக பயன்பாட்டில் உள்ளது. இது பீகாரில் தேசி அல்லது உள்நாட்டு ஆர்லிக்சு என வழங்கப்படுகிறது.

பயன்பாடு தொகு

பஞ்சாபில் இது பார்லி வறுத்துப் பொடித்துச் செய்யப்படுகிறது.

சத்து மாவின் கலவைகள் தொகு

சத்து மா உலர் பருப்புகளையும் உலர் கூலங்களையும் குறிப்பாகப் பார்லி அல்லது துவரம் பருப்பை வறுத்துப் பொடித்துச் செய்யப்படுகிறது. மரபாக இது பருப்பு வகையறாக்களை வாணலியில் இட்டு மணலுடனோ இல்லாமலோ வறுத்து செய்வர்.வறுத்ததும் இவற்றைச் சலித்துப் பின்னர் நுண்ணிய பொடியாக்குவர்.


மேற்கோள்கள் தொகு

  1. Alop ho riha Punjabi virsa by Harkesh Singh Kehal Pub Lokgeet Parkashan ISBN 81-7142-869-X

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்து_மா_(உணவு)&oldid=3736864" இலிருந்து மீள்விக்கப்பட்டது